அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 14, 2010

காதலர் தின சிறப்பு சிறுகதை:

அனைத்துப் பதிவர்களும் காதலர் தினச் சிறப்பு செய்திகளை வெளியிடும்போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? இதோ, ஒரு சிறுகதை:
(வழக்கம்போல் நீதியும் உண்டு - படித்து மெய் சிலிர்த்து விடுவீர்கள்)



ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான் (பெயர் எதற்கு, வேண்டாம் விடுங்கள்). அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான் (அவள் பெயரும் வேண்டியதில்லை).  இரு வீட்டிலும் எதிர்ப்பு வலுத்ததால் இருவரும் ஊரைவிட்டே ஓடினார்கள்.  

சிறிது நாட்கள் பொறுத்துப் பார்த்த பெண்ணின் தந்தை, மனம் தாங்காமல் செய்தித் தாளில் ஒரு விளம்பரம் செய்தார், இப்படி:
"மகளே, நீ பிரிந்த துக்கம் தாங்காமல் நம் வீட்டு நாய் கூட சாப்பிட மறுக்கிறது, எங்கிருந்தாலும் வந்து விடவும், நீ விரும்பும் பையனையே நான் மணம் செய்து வைக்கிறேன்"

விளம்பரத்தைப் படித்த நாயகியும் நாயகனும் ஊருக்குத் திரும்பி வந்தார்கள். சொன்னபடியே இரு வீட்டாரும் கூடிப் பேசி திருமணத்தை நிச்சயித்தார்கள்.  

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, இருவரும் துணி வாங்க ஜவுளிக் கடைக்குச் சென்றார்கள். சென்று திரும்பும் வழியில் மணமகன் சாலையை கடக்கும்போது ஒரு காரில் அடிபட்டு மணமகளின் கண் எதிரிலேயே இறந்து போகிறான்.  இறக்கும்போது, ஆசைக் காதலியின் மடியில் உயிர் போகிறது, மணமகளின் உடை எங்கும் ரத்தக் கறை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பெண்ணின் தாயின் கனவில் ஒரு தேவதை தோன்றி "உன் பெண் அன்று உடுத்தியிருந்த ஆடையில் ரத்தக் கறை படிந்திருக்கிறது, உடனடியாக அதை நீக்கச் செய்" என்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை அந்தத் தாய் உதாசீனப் படுத்திவிட்டாள்.

மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, தந்தையின் கனவில் தோன்றிய அந்தத் தேவதை மீண்டும் அதுபோல் எச்சரித்தது, இப்போது தந்தையும் இதை உதாசீனப்படுத்திவிட்டார்.

ஒரு வாரம் கழித்து, அந்தப் பெண்ணின் கனவிலேயே தோன்றிய தேவதை மறுபடியும் எச்சரித்தது.  திடுக்கிட்டு எழுந்த அந்தப் பெண் கனவைப் பற்றி தன் பெற்றோரிடம் கூற, மறு நாளே கடைக்குப் போன தந்தை ஒரு வாஷிங் சோப் வாங்கி வந்தார். மகளும் துணியில் உள்ள கறையைப் போக்க எண்ணி அந்தத் துணியைத் துவைத்தாள். இருப்பினும், ஓரளவே அந்த ரத்தக் கறையைப் போக்க முடிந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அந்தத் தேவதை மீண்டும் கனவில் தோன்றி "ரத்தக் கறை முழுதுமாக போகாவிட்டால் பின்விளைவுகள் மோசமாகும்" என்று எச்சரித்தது. அவளும், அடுத்த நாள் வேறொரு உயர்ந்த வாஷிங் சோப்பை வாங்கி துணியைத் துவைத்தாள். இருப்பினும், கறை நீங்கிய பாடில்லை. 


அன்று இரவே, அவள் கனவில் தோன்றிய தேவதை ஒரு உபதேசம் செய்தது, அது.......


"எத்தனை சோப் வாங்கினாத்தான் என்ன, சில கறைகளை நீக்கவே முடியாது, எனவே
விளம்பரத்தை பார்த்து ஏமாறாதீங்க!"
(இந்த கதையின் கருவுக்கு உதவிய மின்னஞ்சலுக்கு நன்றி!) 

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

*இயற்கை ராஜி* said...

:-) nice

Chitra said...

it is funny!

Raju said...

இந்த மின்னஞ்சல் எனக்கும் வந்துச்சு..! முடிவை நல்லா ரசிக்கிற மாதிரி மாத்தியிருக்கீங்க.. நல்லாருக்குண்ணே..!

ஸ்ரீராம். said...

முடிவில் மாற்றம்.

உங்கள் ஊர்க் கோவிலுக்கு அறநிலையத்துறை உதவிச் செய்தி படித்தீர்களோ?

பெசொவி said...

//இந்த மின்னஞ்சல் எனக்கும் வந்துச்சு..! முடிவை நல்லா ரசிக்கிற மாதிரி மாத்தியிருக்கீங்க.. நல்லாருக்குண்ணே..!
//
எல்லாரும் ரசிக்கிற மாதிரி எழுதற ராஜு என்னோட எழுத்தைப் பாராட்டும்போது, ரொம்ப நன்றி தம்பி!
(கேபிளார் உன்னோட நகைச்சுவைத்திறனை ரொம்ப சிலாகிச்சு சொல்லுவார்.....வாழ்த்துகள் ராஜு!)

cheena (சீனா) said...

முடிவு நான் படித்த அஞ்சலில் வேறு மாதிரி இருந்தது - இங்கு அழகாக மாற்றப்பட்டிருக்கிறது - வாழ்க

Madhavan Srinivasagopalan said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை.. "யார் சார், உங்களுக்கு இந்த மாதிரி கதை எல்லாம் ஃபார்வார்டு செய்யுறது..?

//ஸ்ரீராம். said..."
உங்கள் ஊர்க் கோவிலுக்கு அறநிலையத்துறை உதவிச் செய்தி படித்தீர்களோ?//

I also belong to the same town.. what's that, can you give the news or link, Sriram? Thanks.

Raghu said...

ஹாஹ்ஹா, சூப்ப‌ரா மாத்திட்டீங்க‌:))

அண்ணாமலையான் said...

வாழ்க...

R.Gopi said...

அடிச்சு வெளுத்துட்டீங்களே “தல”..

கௌதமன் said...

நல்லா இருக்கு பெ சொ வி.

DREAMER said...

கறை ஏற்படறதால ஒரு கதை கிடைக்குதுன்னா.. கறை நல்லதுதானே...

நல்லாயிருக்குங்க உங்க கதை..

மறுபடியும் சொல்றேன்,
'கறை நல்லது'

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

kandathai sollugiren said...

ரொம்ப நல்ல இருக்கு பேபி. சூப்பர் ட்விஸ்ட் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அட பாவி, நான் ரெம்ப serious ஆ படிச்சுட்டு இருந்தேன், இப்படி கவுத்துடீங்களே. உங்கள் பதிவுகளை இதுவரை படித்ததில்லை என்பதால் ஏமாந்து விட்டேன். இனி மாட்டேன். நகைச்சுவையாக இருந்தது