முன் டிஸ்கி : பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடங்கிய காரணமாக வாரச் சந்தை ஒரு நாள் டிலே # ஏதோ ஒரு சாக்கு
தத்துவம்
என்னதான் ஆடு "மே", "மே"ன்னு கத்தினாலும் அதுக்கு எல்லா இங்கிலீஷ் மாசமும் தெரியும்னு நாம நினைக்க முடியாது.
பொன்மொழி
எனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது
- தத்துவ ஞானி சாக்ரடீஸ்
கேள்வி
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரக் கூடிய ஆனால் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை வரக்கூடிய ஒன்று, அது எது?
(What comes once a year but twice a week?)
விடை: "." ஆமாங்க, புள்ளிதான் விடை. பாருங்க "வருடம்"னு எழுதும்போது ஒரு புள்ளி வைக்கிறோம் ("ம"வுக்கு மேல). ஆனா "ஒவ்வொரு வாரம்"னு எழுதும்போது ரெண்டு புள்ளி வைக்கிறோம் ("வ"வுக்கும், "ம"வுக்கும் மேல).
அதுனால புள்ளி தான் வருடத்திற்கு ஒரு முறையும், ஒவ்வொரு வாரமும் ரெண்டு முறையும் வரும்.
((இப்ப எனக்கு புள்ளி வச்சுடாதீங்க, மீ பாவம்!)
ஜோக் & கவிதை (டூ இன் ஒன்)
பெண்ணின் சேலையை
இழுத்தவனை
அடித்துப் புரட்டி
விரட்டிவிட்டு
அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்
பெண்ணும் ஆடினாள்
"டூ பீஸ்" உடையில்.
பெண்ணின் சேலையை
இழுத்தவனை
அடித்துப் புரட்டி
விரட்டிவிட்டு
அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்
பெண்ணும் ஆடினாள்
"டூ பீஸ்" உடையில்.