முதலில் அவருக்கு வந்த கடிதம்:-
அன்புள்ள நண்பா,
நலம், எப்படி இருக்கிறாய்? ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை? எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை. அதுதான் உனக்கு இந்த கடிதம். என் தம்பி B.E. முடிச்சுட்டான். உன் தம்பியும் ஏதோ படிக்கிறான் இல்ல? உன்னப் போல இல்லாம அவன் நல்ல மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன், சொல்லவே இல்லை.
மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா. என் தம்பி இன்னும் வேலைக்குப் போகவே இல்லை. அதுக்குள்ளே கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிக்கிறான். இது பத்தி உன்னோட அபிப்ராயம் என்ன? உடன் பதில் போடவும்.
அன்புடன்,
நண்பன் பாலு.
இதுக்கு நம்ம ப்ளாகரோட பதில் கடிதம் (சாரி, பின்னூட்டம்)
//நலம்//
ரிப்பீட்டேய்!
//ஏன் கொஞ்ச நாளா கடிதம் போடலை?//
ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி ஜாஸ்தி பாஸ்!
// எனக்கு மூன்று நாளாக ஒரு பிரச்சினை//
:((
//அதுதான் உனக்கு இந்த கடிதம்//
வட எனக்குதானா?.
//என் தம்பி B.E. முடிச்சுட்டான்.//
ஒரு பூங்கொத்து பார்சல்!
//உன்னப் போல இல்லாம அவன் நல்ல மார்க் வாங்கியிருப்பான்னு நினைக்கிறேன். //
அவ்வ்வ்வ்வ்....
//உன்னோட இ-மெயில் ஐ.டி. கேட்டிருந்தேன், சொல்லவே இல்லை.//
ஏற்கெனவே எழுதியிருக்கிறேன், இங்கே
//மனைவியை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. சின்ன பிரச்சினாகூட கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போறேன்கிறா//
சேம் ப்ளட்!
//என் தம்பி ......கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிக்கிறான்//
மாப்ள.....ஒரு ஆடு தானா வந்து மாட்டிகிட்டிருக்கு, மஞ்சத் தண்ணி ரெடி பண்ணி வை!
இப்படிக்கு
698064
டிஸ்கி : என்ன நம்பர்னு யோசிக்கிறியா, இது என்னோட பிளஸ் டூ பரிச்ச நம்பர்டா!