அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, February 17, 2011

நான் நடித்த திரைப்படங்கள்

மாதவனின் இந்தப் பதிவைப் படிச்சப்புறம் எனக்கு ஒரே கவலை. ஊருக்கே தெரிந்த நடிகர் இம்ரான் கானை தெரியாதுன்னு சொல்லிட்டாரே, இப்படியே போனா, நான் சிறந்த நடிகர்னு கூட தெரியாம போயிடும். அதுனாலதான் நான் இந்தப் பதிவை எழுதறேன்.

என்ன அப்படி பார்க்கறீங்க, நான் நிறைய படத்துல நடிச்சிருக்கேன், சார்/மேடம்!
குறிப்பா சொல்லனும்னா பாலசந்தரோட படம், எதிர் நீச்சல் பார்த்திருக்கீங்களா? என்ன ஒரு படம், அது. நாகேஷ், மேஜர், முத்துராமன், மனோரமா இன்னும் பல சிறந்த நடிகர் நடிகைகள் நடிச்ச படமாச்சே,   அதைப் பாக்காம இருந்திருப்பீங்களா?

அந்தப் படத்துலதான் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரமா நடிச்சிருக்கேன். சொல்லப் போனா, அந்தப் படத்திலேயே நான் சம்பந்தப் பட்ட சீன்லேதான் ஒரு திடீர் திருப்பமே இருக்கு. 

உண்மைதாங்க, ஒரு சீன்ல வீட்டில இருக்கற எல்லோருமே நாகேஷை திட்டி வெளிய போகச் சொல்லிடுவாங்க, அப்ப நான் ஒரு குரல் கொடுப்பேன் பாருங்க, உடனேயே, மாதுவை (அதான், நாகேஷை) வெளிய போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அப்ப என் கேரக்டர் முக்கியமானதா இல்லையா?

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறேனோ, ஓகே, சொல்லிடறேன், எதிர் நீச்சல் படத்துல வர்ற "இருமல் தாத்தா" காரெக்டர் நான் பண்ணினதுதான். 
ஹி., ஹி., ஹி.. 
நான் தான் "பெயர் சொல்ல ( திரையில் முகம் காட்ட ) விருப்பமில்லாத " ஆளாச்சே!

Monday, February 14, 2011

வாரச் சந்தை - 14-02-2011

முன் டிஸ்கி : காதலர் தினம் என்ற பெயரில் காசைக் கரியாக்கப் போகும் காதலர்களுக்கு இனிய வாழ்த்துகள்! 


ஒரு தத்துவம் 

பணம் மட்டுமே எல்லாம் ஆகாது...................................அதற்கு மேல், மாஸ்டர் கார்ட், விசா கார்ட் இருக்கு!


ஒரு கவிதை

யார் சொன்னது
நான் கவிஞன் இல்லை
என்று
கவிதை எழுதுபவன்
கவிஞன் என்றால்
நான் கவிஞன்தான்,
உன் பெயரை
எழுதுவதால்!


ஒரு ஜோக்


அவன் சொன்னான், "ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ!"
அவள் கேட்டாள்,"எப்பங்க கல்யாணம்?"
அவன் சொன்னான், "நோ, சப்ஜெக்ட மாத்தாதே!"

ஒரு குவிஸ்


காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?


காதலி ப்ரீ-பெய்ட் மாதிரி, முன்னாடியே செலவு செஞ்சாதான் கனெக்ஷன் கிடைக்கும்.
மனைவி போஸ்ட்-பெய்ட் மாதிரி, முதல்லயே கனெக்ஷன் கிடைச்சுடும், ஆனா, ரெகுலரா செலவு செய்யணும்.


ஒரு பொன்மொழி 


உங்களை பிறர் எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்கள் பிறரை நடத்தினால், மகிழ்ச்சியாய் வாழலாம்.