அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 2, 2010

காமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)

முன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை)

"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா?" என்று டாக்டர் கேட்க "சாரி டாக்டர், ஒருத்தரும் வரலை" என்று நர்ஸ் பதில் அளிக்க, காமினியின் முகத்தில் சலனம் இல்லை. "அப்ப இவங்களைக் கொண்டு வந்து சேத்த பாலாஜிங்கறவர் வந்தா ஆபரேஷனுக்கு பணம் கொடுக்காம எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிடுங்க, பை தி வே, அந்த நாலாம் நம்பர் பேஷன்ட் பல்ச சரி பாத்தீங்களா?"

"ஓ, மறந்துட்டேன், இதோ இப்ப பாத்துடறேன், சார்!" என்று நர்ஸ் உடனே வெளியேறினாள்.

மயக்கத்தில் இருந்த காமினியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த டாக்டர், "யாரும்மா நீ, உனக்கு என்ன ப்ராப்ளம்? என்ன ஆச்சு?" என்று கேட்டுவிட்டு, ஏதோ ஞாபகம் வந்தவராக ரூமை விட்டு வெளியேறினார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.


தடதடவென்று வாசலில் கதவைத் தட்டும் சதம் கேட்டது. "ச்சே! முக்கியமான கட்டத்துலதான் யாராவது வந்து தொல்லை பண்றாங்க" என்று சலித்துக்கொண்டே டிவியை ம்யூட்டில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள் மாலினி.

"என்னம்மா, "விளக்கேற்ற வந்தவள்" சீரியல் இன்னும் முடியலையா? காமினி என்ன ஆனா?" என்று கிண்டலாக கேட்டாள் ஷாலினி, மாலினியின் இருபது வயது மகள்.

"எங்க முழுசா பாக்க விடுறீங்க, நீங்கள்லாம்? ஏன், கொஞ்ச நேரம் கழித்து வந்தாதான் என்ன? சரியா இந்த சீரியல் பாக்கும்போதுதான் காலேஜ் முடிஞ்சு வரணுமா?" சலித்துக் கொண்ட அம்மாவை விநோதமாகப் பார்த்தாள் ஷாலினி.

"நானும் சீரியல் பைத்தியங்களைப் பாத்திருக்கேன், ஆனா உன்னைப் போல ஒரு ஆளை பாத்ததே இல்ல, ஏம்மா, எல்லா வீட்டிலேயும் வயசுக்கு வந்த பொண்ணு வீட்டை விட்டு வெளியே போனா வயித்தில நெருப்பை கட்டிகிட்டிருப்பாங்க, நீ என்னன்னா, ஏன் சீக்கிரம் வந்தேன்னு கேக்கறே! ரொம்பத் தான் சீரியல் பைத்தியம் பிடிச்சு அலையறே!"கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்  ஷாலினி.

இந்த இடத்தில மாலினியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு சராசரி குடும்பப் பெண்மணி. ஒரே ஒரு பெண்ணுக்கு தாய். சதா சர்வ காலமும்  டிவியிலே இருப்பவள். மகள் காலேஜ் போய் வருவது தெரியும் ஆனாள் என்ன படிக்கிறாள், எப்படி படிக்கிறாள் என்பது எதுவும் தெரியாது.

"சரி, எனக்குப் பசிக்குது, வா சாப்பாடு போட வா!"

"சாரி மகளே இந்த சீரியல் முக்கியமான கட்டத்துல இருக்கு! நீயே போய் எடுத்துப் போட்டு சாப்பிடு" என்றபடி டிவியை பழையபடி வால்யூமில் வைத்தாள்.

திரையில்,  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. 
"அடப் பாவி, இவன் இங்கே எங்க வந்தான்? பாவிப் பய, என்ன செய்யப் போறானோ?தெரியலையே, அட கடவுளே, இந்த இடத்துலதானா 'தொடரும்' போடணும்? அதுவும் இன்னிக்கு வெள்ளிக் கிழமை ஆச்சே,  இன்னும் மூணு நாள் காத்திருக்கனுமே!" என்று புலம்ப ஆரம்பித்தாள் மாலினி.

######

வழக்கம்போல் அன்றும் டிவியில் "விளக்கேற்ற வந்தவள்" சீரியல் ஓடிக் கொண்டிருக்க, அதில், “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"உன் பாராட்டு யாருக்கு வேணும், என் தம்பியை என்ன செஞ்சே, தயவு பண்ணி அவனை விட்டுடு" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் காமினி.

"உனக்கு எப்ப பாரு, டிவிதானா? வீட்டில மனுஷங்க இருக்காங்கன்னு நினைச்சுப் பாக்கவே இல்லையா?" என்று அதட்டும் குரல் கேட்டது. மாலினி திரும்பிப் பார்க்க, அங்கே அவள் கணவன் பாஸ்கர் கையில் ஒரு காகிதத்துடன் நின்றிருந்தான்.

"நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா? இந்தக் கதையை நீங்களும் பாருங்க! ஒரு பொண்ணு எவ்ளோ கஷ்டப் பட்டு தன்னோட குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரையும் அரவணைச்சுக்கிட்டு அவங்களுக்காக தன்னோட சுக துக்கங்களைக் கூட நினைக்காம வாழ நினைக்கிறா, இந்த சீரியலைப் போய் பாக்க வேணாம்னு சொல்றீங்களே, "இப்போ கூட பாருங்க, இந்த காமினி எவ்ளோ கஷ்டப் பட்டு அந்த வைரத்தை எடுத்துகிட்டு வந்தா தெரியுமா?............" சொல்லும்போதே கண் கலங்கியது மாலினிக்கு.

"அடி முட்டாள் மனைவியே, இந்த லெட்டரப் பாரு! நம்ம பொண்ணு எழுதினது..."என்று லெட்டரை நீட்டினான் பாஸ்கர்.

"அன்புள்ள அம்மா அப்பாவுக்கு,
என்னுடன் படிக்கும் கதிர் என்பவரை நான் காதலிக்கிறேன், அதுபற்றி அம்மாவிடம் சொல்ல வரும்போதெல்லாம், அதை கவனிப்பதாகவே தெரியாததால் இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனவே, நாங்கள் பேசிக் கொண்டபடி இருவரும் நாளை காலை பதிவுத் திருமணம் செய்து    கொள்ளப் போகிறோம். எங்களைத் தேட வேண்டாம்

இப்படிக்கு ஷாலினி."
திக்கித்து நின்ற மாலினியிடம் வந்தான் பாஸ்கர்.
"சீரியல்ல வர மனுஷங்களைஎல்லாம் மதிக்கத் தெரிஞ்ச உனக்கு குடும்பத்துல இருக்கறவங்களை நினைசுக் கூடப் பாக்க முடியலை, என்ன மனுஷியோ நீ?......" பாஸ்கர் பேசிக் கொண்டே போக, உண்மையாகவே அழ ஆரம்பித்தாள் மாலினி.

டிஸ்கி : இந்த வண்ணத்தில் இருக்கும் வரிகள் போட்டியில் கொடுக்கப் பட்டுள்ள வரிகள்!

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

vasu balaji said...

நல்லா வந்திருக்கு:)

அனு said...

நல்லா இருக்குங்க..

All the best!!!

சிவராம்குமார் said...

ஒரு மாறுபட்ட சிந்தனையில் வந்திருக்கும் சிறுகதை! தொடர் பைத்தியங்களுக்கு ஒரு சவுக்கடி!

வெங்கட் said...

காமினியை ஹீரோயினா வெச்சி
கதை எழுத சொன்னா..

நீங்க காமினியை சீரியல்ல
ஹீரோயினாக்கிட்டீங்களே..!!

ம்ம்.. வித்தியாசமாத்தான் இருக்கு..

But.. நான் இன்னும் உங்ககிட்ட
எதிர்பார்க்குறேன்..

R.Gopi said...

தலைவா...

கதையை இன்னமும் சற்றே மெருகேற்றவும்... சக போட்டியாளர்களின் கதையை படிக்கவும்.

ஃபைன் ட்யூன் பண்ணுங்க...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

R.Gopi said...

தலைவா...

கதையை இன்னமும் சற்றே மெருகேற்றவும்... சக போட்டியாளர்களின் கதையை படிக்கவும்.

ஃபைன் ட்யூன் பண்ணுங்க...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கருடன் said...

நல்லா இருக்கு தல... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!!

செல்வா said...

//"சீரியல்ல வர மனுஷங்களைஎல்லாம் மதிக்கத் தெரிஞ்ச உனக்கு குடும்பத்துல இருக்கறவங்களை நினைசுக் கூடப் பாக்க முடியலை, என்ன மனுஷியோ நீ?......" //

அடடா , இப்படி கூட எழுதலாமா ..?
நான் இன்னும் எழுதல .
நான் உங்களுக்கு வெற்றி பேர வாழ்த்து சொல்ல மாட்டேன் ..
ஏன்னா நானும் கலந்துக்குறேன் .. ஹி ஹி ஹி ..
கதை நல்லா இருக்குங்க ..!!

Madhavan Srinivasagopalan said...

Nice .. not many could expect the 'story' on the line it goes in later stage..

ATB

ஸ்ரீராம். said...

நல்ல தீம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நல்ல வேளை ,
சீரியல்ல வர்ற மாதிரி "தொடரும்" னு போடாம இருந்தீங்களே ?!
வாழ்த்துக்கள் !

தேசாந்திரி-பழமை விரும்பி said...

அப்படியே நம்ம கடப் பக்கம் வந்து பாருங்க...
நானும் ஒன்னு எழுதி போட்டிருக்கேன் !!

aru(su)vai-raj said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html