அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, October 28, 2010

எச்சூஸ் மீ, பதில் சொல்றீங்களா? (விடைகள்)

புதிர்ப் போட்டில கலந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி. விடைகளைக் கொடுத்திருக்கிறேன். Ctrl-a பயன்படுத்தி விடைகளை தெரிந்து கொள்ளவும். இரண்டாவது கேள்விக்கு மட்டும் சரியான விடை வரவில்லை. சரியான விடைகள் சொன்ன எல்லோருக்கும்...............................................வாழ்த்துகள் மட்டும்தான். ஹிஹி!
 புதிர் 1 :
"என்னது 14 வயசு ஜானகியோட  சுரேஷ் ஓடினது உனக்குத் தெரியுமா?"
"எனக்கு என்ன, ஊருக்கே தெரியும்"
"அப்புறம் சுரேஷ் மேல போலீஸ்ல ஏன் கம்ப்ளெயின்ட் கொடுக்கல?"
..............................................................................................ஏன்?
ஏன்னா அவங்க ஓடினது ஓட்டப் பந்தயத்துல. (அனேகமா எல்லாருமே இதுக்கு சரியா பதில் சொல்லிட்டாங்க)


புதிர் 2 :
"போட்டியில சதீஷ் ஜெயிச்சும் கப் வாங்க சதீஷ் வரலையா, ஏன்?"
...............................................................................................ஏன்?
ஏன்னா நடந்தது நாய்களுக்கான ரேஸ். சதீஷ் என்னும் நாய் ஜெயிச்சுது. இருந்தாலும், அந்த நாயோட ஓனர் தான கப் வாங்க வருவார்!


புதிர் 3:
"என்னது கையில பஸ் பாஸ் வச்சிருந்தாலும், டிக்கெட் எடுக்கறா மாதிரி ஆயிடுச்சா? ஏன்?"
.......................................................................................ஏன்?
ஏன்னா அவர் போனது ட்ரெயின்ல. (இதுவும் அனேகமா எல்லாரும் சொல்லிட்டாங்க)

புதிர் 4 :
"வோட்டு போட 18 வயசு ஆகணும்னு சொல்ற அரசாங்கம், ஆண்கள் திருமண வயது 25-ன்னு சொல்லுதே எதுக்கு?"
.........................................................................எதுக்கு?
(ஒரு அரசாங்கத்தை சமாளிக்கறதை விட ஒரு மனைவிய சமாளிக்கறதுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை என்பதால்தான். ஹிஹி!)

புதிர் 5:
 "நீங்க விரும்பற பாட்டு உங்களுக்கே எரிச்சல தர வைக்க முடியுமா.....எப்படி?
..........................................................................எப்படி?.


(அந்தப் பாட்டை நான் பாடினால் போதும்        (அல்லது)
அந்தப் பாட்டை உங்க செல் போன்ல அலாரம் டோனா வச்சு பாருங்க)


டிஸ்கி : விடைகள் நாளை மாலை வெளியிடப் படும்.

32 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

செல்வா said...

நான்தான் முதல் ..!!

செல்வா said...

//டிஸ்கி : விடைகள் நாளை மாலை வெளியிடப் படும்.///

உங்களுக்கும் நாளை மாலை அணிவித்து பாராட்டு செய்யப்படும் ..!!

ரகளை ராஜா said...

1. ஓட்ட பந்தயத்துல ஓடுனதுக்கு எல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுப்பாங்களா பாஸ்....
2. வேற போட்டிக்கு கப் கொடுகுரங்கலோ....
3. Private Bus ஆ இருக்கும் (or) வேற ரூட் பஸ் ஆ இருக்கும்
4. ஒரு 8 வருசுமாவது சுதந்திரமா இருக்கட்டுமேனு தான்... நன் இப்போ என்ன சொல்ல வரேன்னா...... (உஸ்ஸ்ஸ்..... எப்பிடியெல்லாம் சமாளிகவேண்டியதா இருக்கு)
5. உங்க செல் ல அலாரம் டோன் ஆ வைங்க அப்பறம் அந்த பட்ட கேட்டாலே காதுல புகை வரும்

பெசொவி said...

@ கடல்புறா
முதல் கேள்விக்கு பதில் சரி.
மத்ததுக்கு ட்ரை பண்ணுங்க.

பெசொவி said...

@ செல்வா,
வடை உனக்கே!

Madhavan Srinivasagopalan said...

1) ஓடினது ஓட்டப் பந்தயத்துல.. (ஆண், பெண் மராத்தான் ஓட்டம்)
என்னாத்துக்கு அதுக்கு கம்ப்ளைண்டு கொடுக்கோணும் ?

2) கப்புலாம் வேண்டாமாம் ஷீல்ட்தான் வேணுமாம்
(காலேஜு எக்சாமுல நெறையா கப், அதாங்க அரியர்ஸ், வெச்சிருக்காராம் )

3) 'பஸ் பாஸ்' அடுத்தவநோடது..
அல்லது 'பஸ் பாஸ்' போனமாசத்துது..

4) மொதல்ல சம்பாதிக்கணும் (ஒட்டு இருந்தாத்தானே காசு)..
அப்புறமாத்தான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியும்..

5) ஆமா, அது டிவில வர்ற சமயத்துல கரெண்டு கட் ஆகி டிவி பாக்க முடியலேன்னா..


------------
--------சிறப்பு சிந்தனையாளர் , நானேதான்..

Madhavan Srinivasagopalan said...

வடை, செல்வாக்கா?
எலே மாடசாமி, குப்புசாமி, கோவிந்தசாமி.. எல்லாரும் இங்கிட்டு வாங்கலேய்.. வந்து ஞாயத்தை கேளுலேய்..
"பரிசு-வடை எனக்குத்தான்.. நான்தான் சரியாக எல்லா கேள்விக்குமே விடையளித்தேன்."

Unknown said...

1 - அது running race
2 -
3 - அவர் போனது train la
4 -
5 - அந்த பாட்டை விடாம கேட்டுட்டே இருந்தா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி : விடைகள் நாளை மாலை வெளியிடப் படும்.//

ஓகே நான் நாளை மாலை வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.////"என்னது 14 வயசு ஜானகியோட சுரேஷ் ஓடினது உனக்குத் தெரியுமா?"

"எனக்கு என்ன, ஊருக்கே தெரியும்"
"அப்புறம் சுரேஷ் மேல போலீஸ்ல ஏன் கம்ப்ளெயின்ட் கொடுக்கல?"//

ஏன்னா போலீஸ் நம்ம PSVmaathiri ஒரு பதிவராம்.
==========================
"போட்டியில சதீஷ் ஜெயிச்சும் கப் வாங்க சதீஷ் வரலையா, ஏன்?"//

பஸ்சுக்கு காசு இல்லியாம்.
=================
//"என்னது கையில பஸ் பாஸ் வச்சிருந்தாலும், டிக்கெட் எடுக்கறா மாதிரி ஆயிடுச்சா? ஏன்?"//
பாஸ் validity முடிஞ்சிடுச்சாம்
=====================
//"வோட்டு போட 18 வயசு ஆகணும்னு சொல்ற அரசாங்கம், ஆண்கள் திருமண வயது 25-ன்னு சொல்லுதே எதுக்கு?"//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
===============
// "நீங்க விரும்பற பாட்டு உங்களுக்கே எரிச்சல தர வைக்க முடியுமா.....எப்படி?//
அந்த பாட்ட நீங்க பாடுனா முடியும்

Chitra said...

எச்சூஸ் மீ, எஸ்கேப்பு ரூட்டு எங்கே இருக்கு? ..... எங்கே?

பெசொவி said...

@ ரமேஷ்
கடைசி கேள்விக்கு பதில் சரி.
@ மாதவன்
முதல் கேள்விக்கு மட்டும் சரியான விடை
@ Hariharan
முதல் மற்றும் மூன்றாவது கேள்விக்கு சரியான விடை.

பெசொவி said...

@ Chitra

Ha.....ha....haa!

Madhavan Srinivasagopalan said...

3) அமாம், பஸ் பாஸ்லாம் , டிரைணுல செல்லாதாம்..

பெசொவி said...

@ Madhavan

New answer fo 3rd Question - Yes right!

Madhavan Srinivasagopalan said...

4) 7 வருஷமாவது, சுயமா சிந்திச்சு ஒட்டு போடட்டுமேங்கற நல்ல எண்ணத்துலதான்

மாதேவி said...

நாளை மாலை விருந்துதான்:))

Prathap Kumar S. said...

1 சுரேஷ் ஒரு குழந்தை

3. அவர் பயணம் செஞ்சது ரயிலில்

முடில.... நாளைகழிச்சு காலைல வந்து மிச்சத்தை சொல்றேன்..:)

NaSo said...

1. ஏன்னா சுரேஷ் அவளோட அண்ணன்
2. பாஸ்
3. ட்ரைன்ல போன பஸ் பாஸ் எப்படி செல்லும்
4. பாஸ்
5. முடியும் அத நீங்களே பாடிப் பாருங்க

அருண் பிரசாத் said...

யாருய்யா இந்த புதிர் போட்டிகளை ஆரம்பிச்சது? ஆளாளுக்கு கேக்க ஆரம்பிச்சிட்டீங்க...

ஹி ஹி ஹி... நாளைக்கு மாலைதான் நான் சொன்ன விடைய சொல்லுவீங்களோ! ஓகே

பெசொவி said...

@ Nagaraja Chozhan & Nanjil Prathap

3rd Answer correct

என்னது நானு யாரா? said...

புதிர்1: சுரேஷ் ஒரு நாய்!

புதிர்2: ஏன்னா அந்த போட்டி அதிகமா சரக்கடிக்கிற போட்டி! சதீஷ் அதிகமா சரக்கடிச்சிட்டு போதையில எங்கே விழுந்திருக்கிறாரோ தெரியலையே

புதிர்3: நான் தனியா இல்லை! கூட வந்தவருக்கு டிக்கட் எடுத்தேன்

புதிர்4: ஓட்டுப் போடறது ஒவ்வொரு 5 வருஷத்துக்கு மாத்திக்க முடிகிற முடிவு. ஆனா திருமணம் அப்படி அடிக்கடி மாத்திக்க முடியாது.

குறிப்பு: 25 வருஷம் தப்பு! ஆணுக்கு 21 வயசு முடிஞ்சாலே போதும்

புதிர்5: திரும்பி திரும்பிக் கேட்டால் எரிச்சல் வரும். வேறு யாராவது அதிக சத்தத்துடன் அந்தப் பாட்டைக் கேட்டாலும் எரிச்சல் வரும்

R. Gopi said...

ஜானகியும் சுரேஷும் நாய்கள்

இது வேற சதிஷ்

ட்ரெயின் டிக்கெட், பஸ் பாஸ் காலாவதி

ரெண்டும் வேற வேற சமாசாரம்

நீங்க பாடும்போது:) அந்தப் பாட்டு அடுத்தவருக்குப் பொருந்தும்போது குறிப்பாக எதிரிக்கு

அருண் பிரசாத் said...

விகடன் குட் பிளாக்ஸ்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள் பெ சோ வி

அருண் பிரசாத் said...

1. அவங்க ஓட்ட பந்தயத்திலயோ அல்லது எதாவது விளையாட்டிலயோ ஓடி இருப்பாங்க
2. போட்டி ஒருநாளும், பரிசளிப்பு வேற நாளாவும் இருந்து இருக்கும்... சதீஷ் க்கு உடம்பு சரி இல்லாம போயிருக்கலாம்
3. அவர் போனது ரயில்லயா இருக்கும்
4. MLA, MP ய தேர்ந்து எடுக்க பக்குவமா யோசிக்க வேண்டியது இல்லை
5. ஹி ஹி ஹி ...சாய்ஸ் ல விடுறேன்

பெசொவி said...

@ அருண்
ஒண்ணும் மூணும் ரொம்ப சரி. நாலு கிட்டத்தட்ட சரி.

@ Gopi Ramamoorthy
மூணு கரெக்ட். அஞ்சு சரி. (அதிலயும் முதல் யோசனை தான் நான் நினைச்சது)

மங்குனி அமைச்சர் said...

இடைல "எதற்கு " என்ற கேள்வி மிஸ் ஆகிப் போச்சே சார்

Philosophy Prabhakaran said...

// விடைகள் நாளை மாலை வெளியிடப் படும். //

சொல்லி ரெண்டு நாளாச்சு... பதில சொல்லுங்க பிரதர்...

இம்சைஅரசன் பாபு.. said...

PSV இன்னும் ரிசல்ட் போடல சீக்கிரம் நானே லேட்.சீக்கிரம் விடையை போடவும் ......
சாரி ரெண்டு நல பதிவு பக்கம் வரலை .ஆணிணிணிணிணிணிணி

R.Gopi said...

// "நீங்க விரும்பற பாட்டு உங்களுக்கே எரிச்சல தர வைக்க முடியுமா.....எப்படி?//

முடியுமாவா.... ஹலோ... உங்க குரல்ல பாடி பாருங்க...

அப்புறம் சங்கீதமே மறந்துடும்....

Madhavan Srinivasagopalan said...

ok nice thoughts

ரோஸ்விக் said...

//புதிர் 2 :
"போட்டியில சதீஷ் ஜெயிச்சும் கப் வாங்க சதீஷ் வரலையா, ஏன்?"
...............................................................................................ஏன்?
ஏன்னா நடந்தது நாய்களுக்கான ரேஸ். சதீஷ் என்னும் நாய் ஜெயிச்சுது. இருந்தாலும், அந்த நாயோட ஓனர் தான கப் வாங்க வருவார்!

//

இதுக்கு இன்னொரு பதிலும் இருக்கு. அவரு கலந்துகிட்டது நீருக்குள் மூச்சடக்கும் போட்டி. அவர்தான் ஜெயிச்சார். ஆனால், பரிசுவாங்க அவரு இப்போ ___ இல்லை. :-(