முன் டிஸ்கி: இது சென்ற பதிவின் தொடர்ச்சி
அந்தப் புதிருக்கு விடை பதிவின் பின்னூட்டத்திலேயே இருக்குது. நான் என் மகளிடம் விடையைச் சொன்னேன். "ஆஹா..........." என்று அதிர்ந்தவள் "சரி, நான் ஒரு புதிர் கேக்குறேன், நீ பதில் சொல்லு" என்றாள்.
"அமாவாசை கும்மிருட்டு. ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ரோட்டிலயும் விளக்கு இல்லை, கார்லயும் லைட்டு எரியலை. ஒரு ஆளு காரை ஓட்டிகிட்டு வர்றாரு, இன்னொரு வயசானவரு கருப்பு குடையைப் பிடிசுகிட்டு கைல டார்ச் லைட்டும் இல்லாம நடந்து வர்றாரு. இருந்தாலும்,இந்த டிரைவர் அந்த வயசானவர் மேல மோதாம காரை ஓட்டிகிட்டு போயிடறாரு, எப்படி?"
நான் ரொம்ப யோசித்தேன். என்னால் பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கி "சரி, நீயே சொல்லு", என்றேன்! என்ன பதில் சொல்லியிருப்பாள், நான் பல்பு வாங்கியது எப்படி? விவரம் நாளை மாலை! உங்கள் யூகங்களை பின்னூட்டலாம்.