ஆனால், நாகரிகம் வளர, வளர, பெருகி வரும் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு இப்போதெல்லாம் திண்ணை வைத்த வீடுகளே கட்டப் படுவது கிடையாது. சொல்லப் போனால், இருக்கிற திண்ணை வீடுகள் கூட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன.
கதவுகளைவிட, வீடுகளில் பயன்படுத்தப் படும் திரைச் சீலைகள் பெரும்பாலும் ரசனைக்கு உரியவையாக இருக்கின்றன. சில வகை திரைச் சீலைகளைப் பற்றி ஒரு அலசல்:-
Tab Top Curtains :
இந்த வகை திரைச் சீலைகள் ஒரு முனையில் நாடாக்கள் வேயப்பட்டு அவை ஒரு கம்பியில் கோர்க்கப் பட்டு தொங்க விடப் படும்.
Shower Curtain :
இவை பெரும்பாலும் குளியலறைகளின் வெளியில் தொங்க விடப் படும்.
Blinds:
இவை பெரும்பாலும் செவ்வகப் பட்டைகள் கோர்க்கப் பட்டதாக அமையும். ஒரு பக்கத்தில் இருக்கும் இரு கயிறுகளில் ஒன்றை இழுக்கும்போது மூடும் வகையிலும், இன்னொன்றை இழுக்கும்போது திறக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
Eyelet Curtains :
இந்த வகை திரைகளில் ஒரு முனையில் வட்டங்களாக ஓட்டைகள் இருக்கும். அந்த ஓட்டைகள் வழியாக கம்பியில் கோர்க்கப் பட்டு தொங்கவிடப் படும்.
Bamboo Curtains :
இந்த வகை திரைகள், மூங்கில் குச்சிகளால் கோர்க்கப்பட்டு தொங்க விடப் படும்.
டிஸ்கி : பல பதிவர்கள் திரை விமரிசனம் எழுதுகிறார்கள். நானோ அப்படி எழுதுவதில்லை என்பதை யோசித்துக் கொண்டிருந்தபோது, மாதவனின் இந்தப் பதிவைப் படித்தேன். மாத்தி யோசித்தபோது இப்படி ஒரு "திரை" விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியது.
டிஸ்கிக்கு டிஸ்கி : பின்னூட்டம் போட்டுப் பழக்கம் இல்லாதவங்க, மாத்தி யோசிச்சு பின்னூட்டம் போடுங்க. வழக்கமா போடறவங்க, மாத்தி யோசிக்காம, பின்னூட்டம் போடுங்க.
7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
இந்த "திரைகளோட" விமசர்சனத்தை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்,
அருமை!!!!!!!!
அத்தனை திரைகளையும் "பாத்துர"
வேண்டியதுதான் :))
வித்தியாசமான "திரை" விமர்சனத்தால் முத்"திரை" பதித்து விட்டீர்கள்.
ha.. ha.. haa....
what next(a) ThiraiMalar, (b)Thirak Kadhambam ?
//திரை விமரிசனம்///
எனக்கு புரிய 5 நிமிஷம் ஆச்சு , உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல
வித்யாசமான பதிவு..
திரை விலகி இவ்வளோ நாள் ஆச்சு...அடுத்த ஆட்டத்தை காணோமே...
அன்பின் பெசொவி
நல்லா இருக்கு உங்க திரை விமர்சனம் - ரசிச்சுப்படிச்சேன் - நன்று
நல்வாழ்த்துகள் பெசொவி
நட்புடன் சீனா
Post a Comment