(ஹலோ, ஏங்க போறீங்க? முழுக் கதையையும் கேட்டுட்டு போங்க!)
அப்ப, ஒரு நரி அங்க வந்து, "காக்கா, காக்கா, நீ ரொம்ப அழகா இருக்கே? ஒரு பாட்டு பாடு"ன்னு சொல்லிச்சாம். காக்கா உடனே, "கா...கா..."ன்னு கத்தவும், வாயில வச்சிருந்த வடை கீழே விழுந்துச்சாம்....நரி அந்த வடையை எடுத்துக்கிட்டு ஓடிப் போயிருச்சாம்.....காக்கா நல்லா ஏமாந்திருச்சாம்.
இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
யாராவது நம்மை பாராட்டினால் அதில் மகிழ்ந்து போகாமல் கொஞ்சம் யோசித்துப் பார்த்து செயல்பட வேண்டும்.
இப்படித்தான் நமக்குக் கதை சொல்லிக் கொடுக்கிறாங்க. ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், எல்லாரும் காக்காவைப் பத்தியே பேசறாங்களே தவிர, அந்தப் பாட்டியைப் பத்தி பேச மாட்டேன் என்கிறார்களே அது ஏன்? ஒரு வயசான பாட்டி (ஹலோ, ஒரு வயசு பாட்டி இல்லீங்க, வயசான ஒரு பாட்டி) மெனக்கெட்டு வடை சுட்டு வித்துக்கிட்டிருந்தா, அந்த வடையை சுட்டது காக்காவோட கெட்ட எண்ணம் தானே? அதை புரிஞ்சுக்காம காக்கா மேல பரிதாபப் படுவது எனக்கு சரியா படலை.
ஆகையால், இந்தக் கதையிலிருந்து எனக்கு தோன்றும் நீதி(கள்) கீழே:
பாட்டிக்கு : தொழில் செய்யும் போது, அங்க இங்க பராக்குப் பாக்காம தொழில்லயே கருத்தா இருக்கணும், அப்புறம், காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு, குருவி தூக்கிப் போய்டுச்சுன்னு புலம்ப வேண்டியதுதான்.
காக்காவுக்கு : மத்தவங்க பொருளுக்கு ஆசைப் பட்டா இப்படித்தான். உழைச்சு சாப்பிடு, உடம்புலயும் ஒட்டும், மூளையும் வளரும்.
நரிக்கு : இன்னா ஜன்மம்பா நீ? உனக்கு இருக்கிற மூளையை நல்லவிதமா பயன்படுத்தினா நாடு எங்கயோ போய்டும், அத விட்டு கேவலம் ஒரு வடையை அடிக்கிறதுக்கு பயன்படுத்துறியே? போய்யா, போ!
டிஸ்கி : சினிமாகாரங்க மட்டும்தான் ரீமேக் பண்ணுவாங்களா, என்னாலயும் கதைகளை ரீமேக் பண்ண முடியுமே!
11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
HA HA HA.. good thoughts.. I never expected in these lines..
HA HA HA.. good thoughts.. I never expected in these lines..
'Vadai' Enakkuththaan..
யாரங்கே? இந்த ரீமேக் கதையை, சமச்சீர் கல்வியில்
புகுத்தவும் :))
//Madhavan said...
'Vadai' Enakkuththaan
//
வடை உங்களுக்குத்தான்....ஆனா, நீங்க, பாட்டியா, காக்காவா அல்லது நரியா என்பது எனக்குத் தெரியாததால் இதில் உள்ள எல்லா நீதிகளும் உங்களுக்குத்தான்........
// பெயர் சொல்ல விருப்பமில்லை said..."வடை உங்களுக்குத்தான்.. ஆனா, நீங்க, பாட்டியா, காக்காவா அல்லது நரியா என்பது எனக்குத் தெரியாததால் இதில் உள்ள எல்லா நீதிகளும்..."//
என் உழைப்பிற்காக எனக்கு 'வடை' கிடைத்தது.(உழைப்பு -- முதல் பின்னூட்டம்). எனவே நீங்கள் குறிப்பிட்ட மூவரும் நான் அல்ல.
காக்கா எங்க போயி எப்பிடி உழைக்கும்..?
//♠ ராஜு ♠ said...
காக்கா எங்க போயி எப்பிடி உழைக்கும்..?
//
அது எப்படின்னா.....வெயில், மழைன்னு பாக்காம, ஊர் பூரா பறந்து திரிஞ்சா, எங்கேயாவது சிதறிக் கிடக்கிற தானியங்களையோ, இறந்து கிடக்கற எலியையோ கொத்திக்கிட்டு போகலாம்.....புரியுதா....?
(ஸ்.ஸ்.ஸ்............அப்பா......முடியல...)
ரீமேக் படத்துக்கு பேரு காக்கா காக்கா..
நீதி #457: யார் யாருக்கு எது எதுன்னு எழுதி வச்சிருக்கோ அது அது அவங்கவங்களுக்கு தான் கிடைக்கும்..
(வடை கிடைக்காததால் வருத்தத்தில் தத்து பித்தென்று தத்துவம் சொல்லுவோர் சங்கம்..)
ஹா ஹா நகைசுவையான ரீமேக் வடை கதை
நல்லாத்தான் யோசிக்கிறிங்க. ஒரு வேளை இந்த மாதிரி காரணங்களுக்காகத்தான் இந்த கதையை நம் முன்னோர்கள் சொல்லிருப்பர்களோ?
Post a Comment