அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, May 14, 2010

ஏதோ ஒரு இது......அதுனால இது!

சும்மா என்கிற வார்த்தையை எப்படி உபயோகிக்கறோம்னு இங்க சித்ரா சொல்லியிருக்கிறாங்க.  இதைப் படித்ததும் கொஞ்ச வருஷம் முன்னாடி ஒரு பட்டிமன்றத்துல கேட்ட ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தது. 


"இது" என்கிற வார்த்தையையும் நாம பல விதத்துல பயன்படுத்துகிறோம்.  உதாரணத்துக்கு ஒரு பேச்சாளர் குடும்பக் கட்டுப்பாடு பத்தி பேச வேண்டி வந்தது.  ஆனால் அவருக்கு கொஞ்சம் கூச்சமா இருந்ததுனால, இப்படி பேசினாரு:


உங்க எல்லாருக்கும் வணக்கம். இப்ப, என்னன்னா, நான் இது பத்தி பேச வந்திருக்கேன். இதுல ஒரு இது என்னன்னா, இது எல்லாருக்கும் தெரியும். ஆனா இதெல்லாம் ஒரு பெரிய இதுவான்னு கேக்கறவங்களும் இருக்காங்க. ஆனா இது உண்மையிலேயே பெரிய இதுதான். இதுல ஒரு பெரிய இது என்னன்னா, இது பத்தி தெரியாதவங்களே கிடையாது ஆனாலும், இதுக்கு ஒரு இது பண்ணனும்னு யாரும் முன்வர மாட்டேங்கறாங்க.  எனக்கு கூட இது பத்தி பேச ஒரு மாதிரி இதுவா இருந்தாலும் மத்தவங்க ஒரு இது பண்ணதால ஒரு இது தோணிச்சு. அதான் இப்படி ஒரு இது.  அதுனால நான் என்ன சொல்ல வர்றேன்னா நீங்கள்லாம் இத ஒரு சாதாரண இதுவா நினைக்காம நம்ம நாட்டுக்கே ஒரு பெரிய இதுங்கற எண்ணத்தோட இது பத்தி ஒரு இதுவா இதுங்கனும்.  குறிப்பா நீங்க என்ன பண்ணும்னா......ஒரு இதுவும் பண்ணக் கூடாது.   வணக்கம்

இது அதாவது டிஸ்கி : ஏதோ ஒரு இதுல இப்படி ஒரு இது, அதான் இந்த இது. அதுனால நீங்களும் ஒரு இது - அதான் பின்னூட்டம் - போட்டுட்டு போங்க.

4 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

'இது'க்கு யாரும் 'இது' போடலையாக்கும்ம்..~..('இது' = பின்னூட்டம்)

பெசொவி said...

இதெல்லாம் ஒரு இதுவா, இதுக்கு ஒரு இது வேற போடணுமான்னு நினைச்சாங்களோ என்னவோ! எப்படியோ உங்களோட இதுக்கு என்னோட இது!

Satheesh Kumar said...

நான் ரொம்ப நாளா அந்த வீடியோவை தேடிட்டிருக்கேன். யார் இதைப் பேசினார்கள் என்று யாராவது சொன்னால் புண்ணியமா போகும்.

Satheesh Kumar said...

நான் ரொம்ப நாளா அந்த வீடியோவை தேடிட்டிருக்கேன். யார் இதைப் பேசினார்கள் என்று யாராவது சொன்னால் புண்ணியமா போகும்.