"நீ பெரிய பணக்காரனா இருக்கலாம். அதுக்காக என்னை மட்டமா நினைக்காதே" இது ஜான்.
"அடுத்த வேளை சோத்துக்கு யார் கையையாவது எதிர் பார்க்கும்போதே உனக்கு இவ்வளவு திமிர் இருந்தா என்னை மாதிரி காசு இருந்தா எப்படி இருப்பே?"
"காசு இல்லாம இருக்கலாம். ஆனா அதுக்காக தன்மானத்தை விடறவன் நான் இல்லை, அதைத் தெரிஞ்சுக்கோ"
"வீண் பேச்சு எதுக்கு, மரியாதையா என் வழியில குறுக்கிடாம இரு, இல்ல, விளைவுகள் மோசமாயிடும்."
"கண்ணா, நான் யார் வழியிலயும் குறுக்க நிக்கலை. அதே சமயம் என் வழியில யாராவது குறுக்கே வந்தா, நான் சொல்ல மாட்டேன், செய்வேன்"
"என் பண பலம், ஆள் பலம் அதிகார பலம் இதெல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசறே, இது நல்லதுக்கு இல்ல தம்பி!"
"என்னடா பணபலம்? குறிச்சு வைச்சுக்கோ, இன்னும் ஆறு மாசத்தில நான் உன்னை விட பெரிய பணக்காரனா ஆகலைன்னா, என் பேரை மாத்தி வச்சுக்கறேன்."
"அதையும் பாக்கறேன்"
"கட், கட்" என்றார் டைரக்டர், "பேக் அப்."
ஷூட்டிங் முடிந்ததும், ஜானாய் நடித்தவர் விலை உயர்ந்த காரில் ஏறிச் செல்ல, "பணக்கார" சுரேஷோ ஆட்டோவைத் தேடினான்.
10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
அண்ணாமலை படம் பார்த்தா மாதிரியே ஒரு பீலிங்கி! :)))
எப்படிங்க இப்படி...
பேசாம சுரேஷ ஒரு சைக்கிள் ஓட்ட சொல்லியிருக்கலாமே. ஒரே பாட்டுல பணக்காரன் ஆகிடலாம்...
வாழ்க்கையில் உள்ள
முரண்பாடுகளை ரொம்ப
அழகா சொல்றீங்க..
இதை படிக்கும் போது எனக்கு
ஒரு கவிதை ஞாபகம் வருது..
" அடுத்த வேளை
கஞ்சிக்கு வழியில்லை..,
ஆனாலும்
சேர்ந்து ஊற்றினார்கள்
அவன் கட் அவுட்டிற்கு பால்.. "
அடுத்து சாங் தானா ?
Fantasy vs Reality - எதார்த்தம். நல்லா எழுதி இருக்கீங்க.
முடிவை ஊகிக்க முடியல.... நல்லாஇருக்கு..!
அதுசரி.. ஷூட்டிங்கு எடுத்து முடியறவரைக்கும், ப்ரொடியூசர் கார்ல வருவார்.. அப்புறம் ஆட்டோல போவாரு..
அதுக்கு நேர்மாறா ஆட்டோல வந்த டைரக்டரு... படம் எடுத்து முடிஞ்ச பின்னாடி.. கார்ல
//Congrats!
Your story titled 'யதார்த்தக் கதைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th June 2010 03:54:29 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/273013
Thank you for using Tamilish.com
//
Thank you voters!
/"எழுதும் போது நேரம் சரியாக"/ இதை மாத்திட்டு எழுதி முடிக்கிறப்போ சரியா நேரம்னு போடுங்க தல...
டிஸ்கி:- எப்புடியும் எழுதி முடிச்சதுக்கு அப்புறம் தான் பப்ளிஷ் பட்டன் பிரஸ் பண்ணி இருப்பீங்க...
//சத்யபாரதி said...
/"எழுதும் போது நேரம் சரியாக"/ இதை மாத்திட்டு எழுதி முடிக்கிறப்போ சரியா நேரம்னு போடுங்க தல...
டிஸ்கி:- எப்புடியும் எழுதி முடிச்சதுக்கு அப்புறம் தான் பப்ளிஷ் பட்டன் பிரஸ் பண்ணி இருப்பீங்க...
//
யோசனைக்கு நன்றி.....இப்போ வேற மாதிரி மாத்திட்டேன்.
ஒரு பாட்டு போட்டு இருந்தா படமா எடுத்துடலாமே... ஏற்கனவே நிறைய வந்திருந்தாலும்....
Post a Comment