அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Tuesday, January 12, 2010

கையில் என்ன...........கொண்டு வந்தோம், கொண்டு செல்ல!

maddy73 தன்னுடைய பதிவு ஒன்றில் இந்த செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டு அதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய என்னை வேண்டியிருந்தார்.  அதை சிரமேற்கொண்டு, செய்து விட்டேன்.  (எனக்கு ஒரு பதிவு கணக்கு ஆயிற்று.  நன்றி maddy73)
  
மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார். மரணம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார்.



தன்னுடைய படைத் தளபதியை அழைத்த அவர், "எப்படியும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன். என்னுடைய மூன்று விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.  கண்ணீர் வழிய நின்ற தளபதியும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

"என்னுடைய முதல் ஆசை, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கி செல்ல வேண்டும்.இரண்டாவதாக, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களை இறைத்தபடி செல்ல வேண்டும்.  மூன்றாவதாக, சவப் பெட்டிக்குள் என்னை வைக்கும்போது, என் இரண்டு கைகளையும் வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும்" என்றார்.

கூடி இருந்த மக்களெல்லாம் இந்த வித்தியாசமான வேண்டுகோள்களைக் கேட்டு வியந்தனர்.  ஆனால் ஒருவரும் அவரைக் கேட்க தயங்கினர்.  அலெக்ஸாண்டருடைய நம்பிக்கைக்குரிய படைத் தலைவர் மட்டும் அவரை நெருங்கி அவர் கையை முத்தமிட்டு, அவரிடம், "மன்னர் அவர்களே, உங்கள் ஆசையை நிச்சயம் பூர்த்தி செய்வோம்.  ஆனால், இந்த ஆசைக்கான காரணம் மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

ஒரு நீண்ட மூச்சு விட்டபின், அலெக்ஸாண்டர் சொன்னார், "மூன்று விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  முதலாவதாக, மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது, என்பதை உணர்த்தவே, என்னுடைய சவப்பெட்டியை அவர்களை விட்டு எடுத்து செல்ல விரும்புகிறேன்.  இதன் மூலம் மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

"ஒரு மனிதன் இறந்து போகும்போது, தான் சம்பாதித்த சிறு துரும்பைக் கூட எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள் மீது ஆசை கொண்டு அலைவதை மக்கள் நிறுத்த வேண்டும்.  இதை வலியுறுத்தும் விதமாகத்தான், என் சவப்பெட்டி செல்லும் வழி எங்கும் தங்க, வைர பொருட்களை இறைத்துச் செல்லவேண்டும் என்று இரண்டாவது ஆசையை தெரிவித்தேன்.

"நான் பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் என்னோடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கவே, என் இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்க மூன்றாவது ஆசையை வெளியிட்டேன்".

அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள் : "நான் இறந்தபிறகு, என்னைப் புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம்.  என்னுடைய இரண்டு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள்; இந்த உலகத்தையே வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்."

Monday, November 30, 2009

மொக்கை வாங்கலியோ மொக்கை:

இது மூணும் கவிதை
(ஒத்துக்காதவங்களுக்கு -
கேட்டுக்குங்க, இது மூணும் கவிதைதான்)

1. விருப்பம்

கணக்கு பாடம் என்றால்
எனக்கு
அல்வா சாப்பிடுவதுபோல்,
ஒரு பின்குறிப்பு:
எனக்கு சர்க்கரை வியாதி!

******************************
2. ஒரு ஒண்ணாங்கிளாஸ்(?!) கவிதை

ழகு முகத்தில்
யிரம் எண்ணம் தேக்கி
னிய புன்னகை
ந்திடும் பெண்ணே!
ன்னைக் கண்டதும்
ணினைத் துறந்து
ன்னை மறந்து
க்கம் கொண்டேன்
யமே இல்லை
ப்பற்றவள் நீ,
என் மானே!
(வளவுதான்.)

***********************
3. ஒரு நியாயமான கோபம்

ஏன் இந்த விடலைகள்
எல்லாம்
பெண்களைச் சுற்றி
வந்து தங்கள்
வாழ்க்கையை
மட்டுமல்லாமல்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கையையும்
வீணடிக்கிறார்கள் -
அயோக்கியப் பயல்கள்
என்ற எண்ணம் வந்தது
- என் பெண் காலேஜ்
சென்றுவரும்போது.
*******************************************************************************************************
காலத்தின் கோலங்கள்

காதலி:
கனவில் வந்து
தொல்லை கொடுக்கும்
இனிய பிசாசு
அவளே மனைவியானால் :
கனவிலும் வந்து
தொல்லை கொடுக்கும்
இல்லப் பிசாசு.

காதலன் :
குச்சி ஐஸ் கேட்டால்
ஐஸ் பார்லருக்கே
கூட்டிச் செல்வான்
அவனே கணவனானால் :
நகை கேட்கும்போது
புன்னகை இருக்க
பொன் நகை எதற்கு
என்று சமாளிப்பான்.

மகன் :
சரியான ஹிட்லர்டா
என் அப்பா என்பான்.
அவனே அப்பாவானபின்:
என் அப்பாகிட்ட
எனக்கு இருக்கும்
அன்பு
என் மகனுக்கு
அவங்கப்பாகிட்ட
இல்லையே என்று புலம்புவான்.

வாத்தியார் நாற்காலியில்
முள்ளை வைத்து விளையாடிய
மாணவன்
ஆசிரியரானபின்
சொல்லிக் கொடுப்பது
மாதா பிதா குரு தெய்வம்.