தெரியாமதான் கேக்கறேன், கிரிக்கெட் இல்லன்னா உலகமே அஸ்தமிச்சுப் போயிடுமா? அதுதான் போகட்டும், இந்தியா விளையாடுதுன்னு சொல்றீங்களே, அது பிசிசிஐ அணி, அவ்ளோதான். விளையாட்டை விளையாட்டாப் பாக்காம, அதை தேசப் பற்றோட இணைச்சுப் பாக்கறது உங்களுக்கே ஓவரா தெரியல?இந்த டிவிக்காரங்க வேற, என்னவோ மூணாம் உலகப் போரே வந்துட்டா மாதிரியும் இந்தியாவையே இவனுங்கதான் காப்பாத்தப போறா மாதிரியும் இவங்க ஆட்டம் தாங்க முடியல! ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், இஸ்ரோ ஊழல்கள் எல்லாம் காத்தோட போயிடுச்சு, போல!
டென்த், பிளஸ் டூ படிக்கிற பசங்களா, ஒண்ணு சொல்றேன், கிரிக்கெட் மட்டுமில்ல எந்த விளையாட்டும் சரி, எப்ப வேணா பாக்கலாம், ஆனா படிப்பு இப்ப விட்டுட்டா அப்புறம் பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உங்க எதிர்காலத்தை நிர்ணயிக்கிற காலம் இது, ஞாபகம் வச்சுக்கிட்டு படிப்புல மட்டுமே கவனம் செலுத்துங்க.
பெற்றோருக்கு, உங்கள் பிள்ளைகள் நல்லா படிக்கனும்னா, கொஞ்ச நாளைக்கு டிவியை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அவங்க படிப்புக்கு உதவுங்க, பாழாப் போன கிரிக்கெட் எப்பவுமே இருக்கும்!
இளைஞர்களே, திரும்பவும் சொல்றேன், கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி என்பது பல நாட்டில் உள்ள கிரிக்கெட் அணிகள் விளையாடும் ஒரு போட்டி அவ்வளவுதான், இதற்கும் அந்தந்த நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. சரியா சொல்லனும்னா ஒரு நாட்டைச் சேர்ந்த வீரர் இன்னொரு நாட்டு அணியில் விளையாடுவது கூட சகஜம். இதற்கும் தேச பக்திக்கும் தொடர்பே இல்லை. போங்க, பொழைப்பைப் பாருங்க!