அதில பாருங்க அன்னிக்குத்தான் முதன்முதலா மார்கெட்டுக்கு போய் (சரி, சரி, ரொம்ப கலாய்க்காதீங்க, வழக்கம்போல நான்தான் மார்க்கெட்டுக்கு போனேன்) காய்கறி எல்லாம் வாங்கினேன். ("வெண்டைக்காய் இளசா இருக்கணும், வாழைக்காய் முத்தலா இருக்கணும், மாத்தி வாங்கினா குப்பையில்தான் போடணும் இல்லன்னா நீங்கதான் சாப்பிடனும்" என்று தங்கமணி அறிவுரை வேறு)
"எல்லா காய்கறியும் சேர்ந்து ஒரு நாப்பத்தோரு ரூபா ஆச்சு சார்" என்றார் கடைக்காரர். ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினேன். "ஒரு ரூபாய் சில்லறை இருக்குமா, சார்?" என்ற கடைக்காரரிடம் உதட்டைப் பிதுக்கினேன். "பக்கத்தில இருக்கற கடைல சில்லறை மாத்தி வரீங்களா?" என்று அறிவுரை கூறினார்.
பக்கத்தில ஒரு கடை இருந்தது. அங்கே சென்று சில்லறை கேட்டேன். "இப்பதான் சார், கடை தொறந்தேன். முதல் போணி ஆகாம சில்லறை குடுக்க மாட்டேன்" என்றார் அவர். "நம்மகிட்ட ஏதாவது வாங்கிக்குங்க" என்று அட்வைஸ் வேறு.
கொஞ்சம் யோசித்து "ஒரு நாப்பது வாட்ஸ் பல்பு குடுங்க" என்றேன். ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன். ஒன்பது ரூபாய் போக பாக்கி நாற்பத்தோரு ரூபாய் கொடுத்தார். சந்தோஷத்தோடு காய்கறிக் கடை சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.
இதுதான் சார், நான் "பல்பு" வாங்கின கதை.
டிஸ்கி : என்னது, நீங்க வேற ஏதோ நினைச்சுகிட்டு பதிவைப் படிக்க வந்தீங்களா? அப்போ உங்க கோவம் நியாயம்தான். திட்ட வேண்டியதெல்லாம் கமெண்டா போட்டுட்டு கொசுறா வோட்டும் போட்டுட்டு போங்க.:)
