maddy73 தன்னுடைய பதிவு ஒன்றில் இந்த செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டு அதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய என்னை வேண்டியிருந்தார். அதை சிரமேற்கொண்டு, செய்து விட்டேன். (எனக்கு ஒரு பதிவு கணக்கு ஆயிற்று. நன்றி maddy73)
மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார். மரணம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார்.
மாவீரன் அலெக்சாண்டர் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டு, தன் நாடு திரும்பும் வழியில் உடல் சுகவீனப் பட்டு படுக்கையில் கிடந்தார். மரணம் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவர், தான் பெற்ற வெற்றி, தன்னுடைய பெரிய போர்ப்படை, வீர வாள், திரண்ட செல்வம் எல்லாம் வீணாகிப் போவதை அறிந்தார்.
தன்னுடைய படைத் தளபதியை அழைத்த அவர், "எப்படியும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன். என்னுடைய மூன்று விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். கண்ணீர் வழிய நின்ற தளபதியும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
"என்னுடைய முதல் ஆசை, என்னுடைய சவப்பெட்டியை என்னுடைய மருத்துவர்களே தூக்கி செல்ல வேண்டும்.இரண்டாவதாக, என்னுடைய இறுதிப் பயணத்தின்போது, கல்லறை வரை வழியெங்கும் நான் சம்பாதித்த தங்க, வைர, வைடூரிய பொருட்களை இறைத்தபடி செல்ல வேண்டும். மூன்றாவதாக, சவப் பெட்டிக்குள் என்னை வைக்கும்போது, என் இரண்டு கைகளையும் வெளியில் தெரியும்படி வைக்க வேண்டும்" என்றார்.
கூடி இருந்த மக்களெல்லாம் இந்த வித்தியாசமான வேண்டுகோள்களைக் கேட்டு வியந்தனர். ஆனால் ஒருவரும் அவரைக் கேட்க தயங்கினர். அலெக்ஸாண்டருடைய நம்பிக்கைக்குரிய படைத் தலைவர் மட்டும் அவரை நெருங்கி அவர் கையை முத்தமிட்டு, அவரிடம், "மன்னர் அவர்களே, உங்கள் ஆசையை நிச்சயம் பூர்த்தி செய்வோம். ஆனால், இந்த ஆசைக்கான காரணம் மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார்.
ஒரு நீண்ட மூச்சு விட்டபின், அலெக்ஸாண்டர் சொன்னார், "மூன்று விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, மருத்துவர்களால் போகும் உயிரை நிறுத்த முடியாது, என்பதை உணர்த்தவே, என்னுடைய சவப்பெட்டியை அவர்களை விட்டு எடுத்து செல்ல விரும்புகிறேன். இதன் மூலம் மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
"ஒரு மனிதன் இறந்து போகும்போது, தான் சம்பாதித்த சிறு துரும்பைக் கூட எடுத்துச் செல்ல முடியாது, எனவே, பணம், பொருள் மீது ஆசை கொண்டு அலைவதை மக்கள் நிறுத்த வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாகத்தான், என் சவப்பெட்டி செல்லும் வழி எங்கும் தங்க, வைர பொருட்களை இறைத்துச் செல்லவேண்டும் என்று இரண்டாவது ஆசையை தெரிவித்தேன்.
"நான் பிறக்கும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை, இறந்தபிறகும் என்னோடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்கவே, என் இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்க மூன்றாவது ஆசையை வெளியிட்டேன்".
அலெக்ஸாண்டரின் கடைசி வார்த்தைகள் : "நான் இறந்தபிறகு, என்னைப் புதையுங்கள், எந்த நினைவுச் சின்னமும் வேண்டாம். என்னுடைய இரண்டு கைகளையும் சவப்பெட்டியின் வெளியே தெரியுமாறு செய்யுங்கள்; இந்த உலகத்தையே வென்ற ஒருவன், மரணத்திற்கு பிறகு தன்னுடன் ஒன்றும் கொண்டு செல்லவில்லை என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும்."
11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
//"கையில் என்ன...........கொண்டு வந்தோம், கொண்டு செல்ல!"// அட்ரா சக்க... அட்ரா சக்க... தலைப்பு சூப்பர்.
"கையில் என்ன...........கொண்டு வந்தோம், கொண்டு செல்ல!" ---
பொருத்தமான தலைப்பு.
நல்ல விஷயங்களை பலரும் தெரிந்துகொள்ள 'உங்கள் பதிவில்' எழுதினால் என்ன, 'என் பதிவில்' எழுதினால் என்ன?
(மேலும் சொல்லப்போனால்.. என்னை பின் தொடர்பவர்களை விட, உங்களை பின் தொடர்பவர்கள் அதிகம் அல்லவா?)
அன்புடன், maddy.
தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள விஷயங்கள் எத்தனையோ இருக்க, மாயை பின்னால் ஓடுவதேன் ........?
Everyone needs to understand this. Thank you for this one.
மிக நல்ல பகிர்வு. நன்றி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இதே விஷயத்தை எடுத்து தான், வைரமுத்து “படையப்பா” படத்தில் வரும் ”ஓஹோஹோ ஹோ கிக்கு ஏறுதே” பாடல் எழுதியதாக படித்த நினைவு.... அந்த பாடலில் வரும் ஒரு வரிதான் உங்களின் இந்த பதிவு தலைப்பு....
”நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல....”
ஏற்கனவே வாசித்து தான்; இருந்தாலும் நன்று..
நல்ல பதிவு. இன்னும் நிறைய வரலாற்று விஷயங்கள் போடுங்கள். சுவாரஸ்யமாக இருக்கும். நன்றி
பொங்கல் வாழ்த்துக்கள்.
regards
ram
www.hayyram.blogspot.com
நல்ல கருத்து..தெரிந்த கருத்தாயினும் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
கலக்கல்ங்க... இப்போ ரொம்ப தேவையான பதிவுதான், இது.
இதை அப்படியே நம்ம அரசியல்வாதிங்க ஒவ்வொருத்தர் ஐடிக்கும் பார்வார்டு பண்ணீட்டீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்... குறிப்பா ஆளுங்கட்சிக்கு
அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே,
பகிர்வுக்கு நன்றி
Post a Comment