அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 28, 2010

Happy Exams - Dear Parents!

நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள்.  அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகள், நல்லா கவனமா எழுதுங்க! May God Bless all!

நான் பிளஸ் டூ முடிச்சு ஒரு இருபத்து மூணு வருசமாச்சு.  என் அனுபவத்தை வச்சு மாணவர்களின் பெற்றோர்களுக்கு (ஆமாங்க, பெற்றோர்களுக்குத் தான்) சில யோசனைகள் (அறிவுரை கூறும் அளவுக்கு வயசு/அனுபவம் இல்லீங்கோ!)


  • எப்பவுமே அடுத்த வீட்டு மாணவனை வச்சு ஒப்பிட்டுப் பேசாதீங்க, "அவன் பாரு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் படிக்கிறான், நீயும் இருக்கியே" என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அடுத்த வீட்டு மாணவன் மேல் கோபம் வருமே தவிர, உங்கள் பையன்/பெண் நீங்கள் விரும்புவதை செய்ய மாட்டார்கள்.
  • தேர்வுக்குப் போகும் முன் ஆதரவாய் சில வார்த்தைகள் கூறுங்கள் "ஒரு பதட்டமும் இல்லாம பரீட்சை எழுது, தெரிந்த பதிலை சீக்கிரம் எழுதிட்டு அப்புறம் மத்த கேள்விகளுக்கு பதில் எழுதப் பாரு" போன்ற வார்த்தைகள் அவனுக்கு தெம்பூட்டும்.
  • "இந்தப் பரிட்சையில் நீ எடுக்கிற மார்க்கை வச்சுதான் உன் எதிர்காலமே இருக்கு" என்று எப்போதும் சொல்லாதீர்கள்.
  • தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடனே கேள்வித்தாளை வைத்துக் கொண்டு அவன் எப்படி எழுதினான் என்பதை சரி பார்க்காதீர்கள்.  வீட்டுக்கு வந்தவுடன் முதலில் அவன் சாப்பிடட்டும், அதன் பிறகு "பரீட்சை எப்படிப்பா, பரவயில்லையா?" என்று பரிவுடன் கேளுங்கள்.
  • எக்காரணம் கொண்டும் இரவில் பத்து மணிக்கு மேல் படிக்க விடாதீர்கள். அதிகாலை நான்கு, ஐந்து மணிக்கு எழுப்பி படிக்க சொல்லுங்கள். 
  • பள்ளிக்கு புத்தகங்கள்/நோட்ஸ் எடுத்து செல்ல அனுமதிக்காதீர்கள், "ஒரு வருஷம் படிக்காததை ஒரு மணி நேரத்தில் படிக்கப் போவதில்லை, ஸோ, ரிலாக்ஸா இரு, ப்ரீயா ஸ்கூலுக்குப் போ" என்று சொல்லுங்கள்.
  • நீங்கள் அவனுடைய முன்னேற்றத்தில் கருத்தாய் இருக்கிறீர்களே தவிர, அவன் மேல் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்பதை உணர்த்துங்கள்.

இவ்வளவுதான், ரிசல்டின் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பிறகு பார்ப்போம்.

So, All the Best, Parents!
  •   

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

CS. Mohan Kumar said...

நல்ல விஷயங்கள் சொல்லிருக்கீங்க நன்றி

வெள்ளிநிலா said...

நல்ல விஷயங்கள்!

ஸ்ரீராம். said...

எல்லாம் செஞ்சிட்டேங்க...

Priya said...

//எப்பவுமே அடுத்த வீட்டு மாணவனை வச்சு ஒப்பிட்டுப் பேசாதீங்க, "அவன் பாரு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் படிக்கிறான், நீயும் இருக்கியே" என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.//...மிக சரியா சொல்லிருக்கிங்க‌!

//எக்காரணம் கொண்டும் இரவில் பத்து மணிக்கு மேல் படிக்க விடாதீர்கள். அதிகாலை நான்கு, ஐந்து மணிக்கு எழுப்பி படிக்க சொல்லுங்கள்.//...ஏன்?

Jaleela Kamal said...

நல்ல பயனுள்ள பகிர்வு.