நம்முடைய சொந்த நாட்டை தாய்நாடு என்றுதான் சொல்கிறோம். மொழியைத் தாய்மொழி என்கிறோம். சொந்த மண்ணை தாய்மண் என்று போற்றிச் சொல்கிறோம். அந்த அளவிற்கு நாம் நம்முடைய தாய்க்கு பெரிய இடம் கொடுத்து வைத்திருக்கிறோம்.
ஏனென்றால், நம்முடைய அன்னை எத்தனையோ துன்பங்களுக்கு நடுவில் நம்மைச் சுமந்து, நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறாள். "இறைவன் தானே நேரில் வர இயலாததால்தான் தாயைப் படைத்தான்" என்று ஒரு பொன்மொழிகூட உண்டு.
சங்க இலக்கியங்கள் கூட தாயை இறைவனுக்கு சமமாகத் தான் பாடுகின்றன. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று அவ்வையார் கூறுகிறார். பெண் உறவே வேண்டாம் என்று அறிவுறுத்தும் பட்டினத்தார் கூடத் தாயின் பெருமையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்கள் கூட தாயின் பெருமையைப் பறைசாற்றியே வந்திருக்கின்றன. சொல்லப் போனால் நம் தமிழ்ப் படங்களே தாய் செண்டிமெண்ட் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த வசூலை அள்ளி இருக்கின்றன.
இப்படி எத்தனையோ காலங்களாக நம்முடைய தமிழ் மண் தாயைப் புகழ்ந்து வந்தாலும், வெளிநாட்டினர் சொல்லி திருக்குறள் பெருமையை உணர்ந்த நம் தமிழினம் அதே வழியில் நம்முடைய குல வழக்கமான-வெளிநாட்டினரை வழிமொழியும்-குணத்தோடு, இன்று அன்னையர் தினம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் மே மாத இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது.
எப்படி இருந்தாலும், அன்னையர் தினம் கொண்டாடுவதன் மூலம், தாயின் பெருமையைத் தரணி எங்கும் பரப்புவதால், என் இனிய மனங்கனிந்த
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் என்னை ஈன்ற அன்னையையும், என் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கும் அவர்கள் அன்னையையும் (ஹி....ஹி....என் மனைவிதான்) எல்லாம் வல்ல இறைவன் காக்க அவன் பாதம் பணிகிறேன்.
டிஸ்கி : அன்னை என்பதும் அம்மா என்பதும் புனிதமான வார்த்தைகள், அதனைப் பெற்ற தாயைத் தவிர வேறு யார் மீதும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள.....(ஹலோ, யாருப்பா, ஆட்டோவைக் கூப்பிடறது....?)
6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
nice one.
//ிறோம். ஒவ்வொரு வருடமும் மே மாத இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது.
//
I was confused with May 8th or May 9th as Mother's day. Thanks for this message.
//(ஹி....ஹி....என் மனைவிதான்) ///
சீரியஸ் பதிவுல உங்களுக்கு காமடி ,..... நக்கலு
அவ்வளவு ஆட்டோ பயத்தை வச்சிட்டு பயப்படாத மாதிரியே பதிவு போட்றது..:)
நல்லாத்தான் யோசிக்கிறிங்க. ஆனால் அம்மா அப்பாவை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடும் மாக்களுக்கு (மனிதர்கள் இல்லை மாக்களேதான்) வேண்டுமானால் வருடத்தில் ஒரு முறை (இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினம் வரலாம், ஆனால் தினமும் அம்மா அப்பா கூடவே இருக்கும் நன்மக்களுக்கு தினமுமே பெற்றோர் தினமே.
வலைச்சரத்தில் உங்களைப் பார்த்து உள்ளே வந்தேன். ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வர பக்கத்தில் உள்ள லிங்க அழுத்த அது இங்க கொண்டு வந்து விட்டது.
கில்லாடிங்க.........
மன்னார்குடின்னாவே கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும் போல(?)
நல்வாழ்த்துகள்.
அதிக அறிமுகம் இல்லாத இடுகையாக பார்த்து அறிமுகம் செய்ய.
Post a Comment