அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Showing posts with label மன்னார்குடி. Show all posts
Showing posts with label மன்னார்குடி. Show all posts

Sunday, August 22, 2010

கோபாலா....கோபாலா!

மன்னார்குடி திருவிழாக்களைப் பற்றி ஏற்கெனவே இட்லிவடையிலும் என் முந்தைய பதிவிலும் எழுதி இருக்கிறேன். அந்த சிறப்பு வாய்ந்த திருக்கோயிலின் குடமுழுக்கு விழா   இன்று காலை நடைபெற்றது. நேரில் தரிசித்த அந்த தருணங்களை என்னால் விவரிக்க இயலவில்லை.
உங்களுக்காக அந்தக் காட்சியை இங்கே தந்திருக்கிறேன்.

பொதுவாகவே கும்பாபிஷேகம் என்றால் மழை பொழியும் என்பார்கள். இரண்டு நாட்களாக நல்ல மழை இருந்தாலும், இன்று காலை முதல் மழை இல்லாமல், கும்பாபிஷேகத்தை நன்கு கண்டு களிக்க முடிந்தது.

உலகில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல், எங்கும் சண்டை சச்சரவு இன்றி உலகம் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்க எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணனை இறைஞ்சுகிறேன்.

Sunday, May 2, 2010

அந்த நாளும் வந்ததே!

என்னுடைய இந்தப் பதிவைப் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இந்த செய்தி.

இன்று அதாவது 02.05.2010  அன்று நாங்கள் திட்டமிட்டது போல், எங்கள் பள்ளிக்கால நண்பர்களுடன் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடத்தினோம். அது சமயம், எங்கள் பழைய ஆசிரியர்களை அழைத்து கௌரவப் படுத்தினோம். அவர்கள் நெகிழ்ந்துபோய் எங்களைப் பாராட்டிய தருணம் அது.  நாங்கள் மிகவும் மகிழ்ந்து போனோம்.

எங்கள் சந்திப்பை விட, எங்கள் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்த அந்த நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இதுபோல் ஒரு விழா இது வரை நடந்ததில்லை என்று எல்லோருமே வாழ்த்தினார்கள்.  விழாவிலிருந்து சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:




ஆசிரியர்களும் நாங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ :

(எங்கள் சீனியர் மாணவர் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே பெயர்களுடன் தந்திருக்கிறேன்)
மிக மிக உன்னதமான, ஆனந்தமான அந்த சந்தோஷ தருணங்கள் இனிமேல் வருமா என ஏங்க வைத்த அந்த நிமிடங்கள்- மனம் நிறைந்தது. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.
  

Sunday, January 17, 2010

மன்னார்குடி கோயில் பொங்கல் திருவிழா - நான்காம் நாள்

ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் தை மாதம் 4-ந்தேதி மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் "ஏக சிம்மாசனம்" என்னும் திருவிழா நடைபெறும். அன்றைய தினம், இராஜகோபாலசுவாமி, ருக்மணி, சத்தியபாமா மற்றும் செங்கமலத் தாயார் என்று நான்கு மூர்த்திகளையும் ஒரே ஊஞ்சலில் தரிசிக்கலாம். இன்று அந்தத் திருவிழா நடைபெற்றது. உங்களுக்காக அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்து கீழே வெளியிட்டுள்ளேன்.

தரிசித்துப் பயன் பெருக.

கோபாலன் அருளால் இவ்வையகம் செழித்து விளங்கட்டும்!