பொதுவாகவே, பெரியவர்கள் சொல்லுவதை ஒரு கணமேனும் கேட்கும் உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை.
தங்கள் பிள்ளைகள் வளரும்போதே நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கத் தவறும் பெற்றோர்கள், பின்னாளில் அவர்கள் தங்களை மதிப்பதில்லை என்று புலம்புவது நியாயமாக எனக்குப் படவில்லை.
பிள்ளைகளுக்கு எதிரிலேயே மது குடித்துக்கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டும் இருந்துவிட்டு அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?
முக்கல், முனகல் பாடல்களை எல்லாம் டிவியில் பார்த்துக் கொண்டு அவர்களை ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
ஒன்று நினைவில் வையுங்கள், பெற்றோரே!
நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டும் கெடுக்கவில்லை, எதிர்கால இந்தியாவையே சொல்லப் போனால் உலகத்தையே கெடுக்கிறீர்கள்.
ஒரு ஜோக்:
ஒரு ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்துச் சொன்னாராம்:"எங்கள் காலத்தில் ஆசிரியர் வந்தால் நாங்கள் பணிவுடன் எழுந்து நிற்போம், அவர் மேல் அப்படி ஒரு மதிப்பு வைத்திருந்தோம், தெரியுமா?"
மாணவன் பதில் சொன்னானாம் : "என்ன சார் செய்வது, அவர் உங்களுக்குப் பாடம் நடத்திய விதம் அப்படி" என்று.
தான் நல்ல ஆசிரியராக இல்லாமல், தன் மாணவன் மட்டும் நல்ல மாணவனாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு நீங்கள் நல்ல பெற்றோராக இல்லாமல் உங்கள் மக்கள் நன்மக்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது.
5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
ரைட்டு
ஐ வட எனக்குதானா
அட!! ஆமா, நாம் இருவரும் சொல்ல
வந்தது ஒரே மாதிரிதான் இருக்கிறது!!!
நல்ல கருத்துகள்.
நல்ல கருத்து தாங்கிய ஒரு பயனுள்ள கட்டுரை...
வாழ்த்துக்கள் “தல”.....
Post a Comment