அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 16, 2010

சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்பு படுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும் பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.

கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?

அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்   

என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.

எனவே, கல்வி மட்டுமே ஒரு மனிதனை பண்பாளனாகவும், வாழ்வில் வெற்றி பெற்றவனாகவும் உருவாக்குகிறது என்பது திண்ணம்.

எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயர, இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் வாழ்த்துகிறேன்!

எல்லோருக்கும் இந்த இனிய நன்னாளில் சரஸ்வதி பூஜை ௦- ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

அனு said...

உங்களுக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லோருக்கும் இந்த இனிய நன்னாளில் சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

ராம்ஜி_யாஹூ said...

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துகள

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். சரஸ்வதி படம் மிக அழகாக இருக்கிறது.

Madhavan Srinivasagopalan said...

உங்களுக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தின நல்வாழ்த்துகள்!


thanks to Anu too..(for writing the same, what i wanted too.. hence, I simply did c & p.)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லோருக்கும் ஸ்வதி பூஜை - ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

இம்சைஅரசன் பாபு.. said...

ellorukkum saraswathi pooja valthukal