
- எப்பவாவது நாம போக நினைக்கிற 'பஸ்'சையோ ரயிலையோ தவற விட்டா வருத்தப் படாதீங்க. அந்த பஸ் ஒரு வேளை ஆக்சிடன்ட் ஆயிட்டா, நாம தப்பிச்சுடுவோமில்ல?
- செலவே இல்லாத பேப்பர் கப்பலா இருந்தாலும் சரி, பெரும் பண செலவுல கட்டின "டைட்டானிக்" கப்பலா இருந்தாலும் சரி, தண்ணி மேல அது இருந்தாதான் பெருமை, அதுமேல தண்ணி இருந்தா வேஸ்ட் தான்
- எத்தனையோ கப்பல்கள் இப்பவும் எந்த ஆக்சிடன்ட் இல்லாம கடல் மேல போயிக்கிட்டுதான் இருக்கும். ஆனா அதைப் பத்தி யாராவது பேசறாங்களா? முழுகிப் போன கப்பலைப் பத்திதான் நிறைய படம் எடுக்கறாங்க. எனவே, ஒருத்தன் கஷ்டப்பட்டா அதைப் பத்தி ஊரு முழுக்க படம் போட்டுக் காட்டறதுதான் நிதரிசனம்.
பின் டிஸ்கி:
எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான போதனை. நகைச்சுவைன்னு "லேபில்" போட்டாச்சுன்னா சிரிச்சுட்டு போயிகிட்டே இருக்கணும். ஒரு "காவியக்" காதல் உங்களுக்கு கேலியா இருக்குதான்னு யாரும் கேட்க கூடாது. ("டைட்டானிக்"நு சொன்ன உடனே லவ் தான ஞாபகம் வருது?)