அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, October 14, 2010

கைரேகை பார்ப்பது எப்படி?

முன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல

பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, அவர்கள் கையைப் பிடித்து ரேகை பார்க்க ஆரம்பித்தால், என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று ஒரு ஆர்வம் காட்டத் தான் செய்கிறார்கள்.

எனவே, உங்கள் கைரேகையைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

பொதுவாகவே கையில் மூன்று பெரிய ரேகைகள் ஓடுகின்றன. இது தவிர, சிற்றாறுகள் போல, அங்கும் இங்கும் பல வளைவுகள் மெலிதாக ஓடுகின்றன.
இதைப் பற்றிய குறிப்புகள் சில கைரேகைப் புத்தகங்களில் விரிவாக இருக்கின்றன. பெரிய நூலகங்களில் உள்ள பல புத்தகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

எனவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த நூலகங்களுக்கு சென்றோ, அல்லது காசு கொடுத்து வாங்கியோ இந்த வகைப் புத்தகங்களைப் படித்து கைரேகை பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொண்டவர்கள் என்னிடம் விளக்கமாகக் கூறினால், நான் அந்த விவரங்களை இந்த வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

எங்க கிளம்பிட்டீங்க? கைரேகை புக்ஸ் வாங்கத் தானே? என்னது ஆட்டோ வருதா? என் வீட்டுக்கா? அவ்...............................!

டிஸ்கி : முன் டிஸ்கியில் சொன்னது போல், இது மொக்கைப் பதிவு அல்ல, மரண மொக்கைப் பதிவு.

27 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க கை ரேகை படி உங்களுக்கு நேரம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்.

அருண் பிரசாத் said...

கைகுடுங்க...


வாழ்த்த இல்லை, உடைக்க

Madhavan said...

காங்கிரஸ் அனுதாபி ?

எலெக்ஷன் டயத்துல இந்த பதிவ போட்டிருந்தா, நாங்க உங்க ப்லோகுக்கு சீல் வைக்கச் சொல்லி கோர்ட்டுல கேஸு போட்டிருப்போம்.

Altruist said...

I know Palmistry!

நாகராஜசோழன் MA said...

யாரையாவது நல்லா திடகாத்திரமான ஒரு ஆளை பளார்னு அறைந்சிடுங்க. அவங்க மூஞ்சில உங்க கைரேகை தெரியும். அதை பார்த்துக்கங்க.

நாஞ்சில் பிரதாப் said...

ஆண்டவா...பிளாக்கரை இப்படில்லாம் பயன்படுத்துருங்காளே.... முடில சார்??:))

ப.செல்வக்குமார் said...

அட அட ., உங்களுக்கு மட்டும் எப்படி இத்தன அறிவு ..?

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ...ஹா ................. ரொம்ப சீரியஸ் ஆக படிக்கச் ஆரம்பிச்சேன் .

ஒரே அடியா கவுத்து புட்டின்களே சார்

மங்குனி அமைசர் said...

ஹி.ஹி.ஹி. ...... ஏன் சார் கை ரேகா பாக்க புக்க தேடனும் ? நான் இப்ப சொல்லித்தர்றேன் பாருங்க ,
உங்கள் வலது அலது இடது கையை நேராக நீட்டவும் , அந்தக் கையின் உன்லங்கை பகுதி வானத்தை நோக்கி இருக்கும் படியாக வைத்துக் கொள்ளவும் , இப்பது உள்ளங்கையை பார்க்கவும் , கொடு கோடாக தெரிகிறதல்லவா அதுதான் ரேகை , அப்படியே தேவையான நேரத்திற்கு பார்த்துக் கொள்ளவும் ....

Anonymous said...

இதான் அந்த ரகசியமா??


http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

Chitra said...

நீங்கள் ஜோசியம் கேட்டப்போ, மரண மொக்கை எழுதினால் உங்களுக்கு அமிர்த யோகம் என்று சொன்னாங்களோ? ஹா,ஹா,ஹா.....

வெங்கட் said...

முடியலை..!!

நேத்து ஒரு ஜோசியக்காரன்
என் கையை பாத்துட்டு
" சார்.., உங்களுக்கு நல்ல நேரம்
Start ஆயிடுச்சுன்னு " சொன்னான்..

இருங்க அவனை உதைச்சிட்டு
வர்றேன்..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ ரமேஷ்
//me the first//
கைய குடுங்க! அட அதிர்ஷ்ட ரேகை "தாண்டவம்"ஆடுது

//அருண் பிரசாத் said...
கைகுடுங்க...
வாழ்த்த இல்லை, உடைக்க//

அதுக்கு உங்க கை ஒழுங்கா இருக்கனும்பூ............எதுக்கும் காரமடை சோசியர்கிட்ட ஜாதகதக் கொடுத்து பாருங்க....!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Madhavan said...
காங்கிரஸ் அனுதாபி ?

எலெக்ஷன் டயத்துல இந்த பதிவ போட்டிருந்தா, நாங்க உங்க ப்லோகுக்கு சீல் வைக்கச் சொல்லி கோர்ட்டுல கேஸு போட்டிருப்போம்.
//

அப்ப மத்த டயத்துலலாம் நம்ம ப்ளாக்தான் படிக்கிறீங்க, போல? Thanks!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Altruist said...

I know Palmistry!//

It is also an art. Nice to hear that you know that!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ நாகராஜசோழன் MA

இது கூட நல்ல ஐடியாவா இருக்கே,
எப்ப நம்ம ஊரு பக்கம் வர்றீங்க?

// நாஞ்சில் பிரதாப் said...
ஆண்டவா...பிளாக்கரை இப்படில்லாம் பயன்படுத்துருங்காளே.... முடில சார்//

முடியலையா? அப்பவே பதிவை எழுதி முடிச்சுட்டேனே! ஹிஹி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// ப.செல்வக்குமார் said...
அட அட ., உங்களுக்கு மட்டும் எப்படி இத்தன அறிவு ..?
//

இன்னும் கூட நிறைய வச்சிருக்கேன் செல்வா, அட்ரஸ் மட்டும் கொடுங்க, உங்களுக்கும் அனுப்பி வக்கிறேன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// இம்சைஅரசன் பாபு.. said...
ஹ ...ஹா ................. ரொம்ப சீரியஸ் ஆக படிக்கச் ஆரம்பிச்சேன் .

ஒரே அடியா கவுத்து புட்டின்களே //

இம்சைக்கே இம்சையா, நம்ம ரேகை நல்லாத்தான் ஓடுது!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மங்குனி அமைசர் said...
ஹி.ஹி.ஹி. ...... ஏன் சார் கை ரேகா பாக்க புக்க தேடனும் ? நான் இப்ப சொல்லித்தர்றேன் பாருங்க ,
உங்கள் வலது அலது இடது கையை நேராக நீட்டவும் , அந்தக் கையின் உன்லங்கை பகுதி வானத்தை நோக்கி இருக்கும் படியாக வைத்துக் கொள்ளவும் , இப்பது உள்ளங்கையை பார்க்கவும் , கொடு கோடாக தெரிகிறதல்லவா அதுதான் ரேகை , அப்படியே தேவையான நேரத்திற்கு பார்த்துக் கொள்ளவும் ....
//

என் இனமையா, நீர்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//குவைத் தமிழன் said...
இதான் அந்த ரகசியமா??//

ரகசியத்தை வெளிய சொல்லிடாதீங்க! (உங்க ப்ளாக் பக்கம் வந்தா வார்னிங் வருது, என்னன்னு கவனிங்க!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெங்கட்

//நேத்து ஒரு ஜோசியக்காரன்
என் கையை பாத்துட்டு
" சார்.., உங்களுக்கு நல்ல நேரம்
Start ஆயிடுச்சுன்னு " சொன்னான்..

இருங்க அவனை உதைச்சிட்டு...//

என்னிக்கும் இல்லாத அதிசயமா கையில வாட்ச் கட்டிக்கிட்டு இருந்தீங்களோ? அதைப் பாத்துட்டு "டைம்" நல்லா இருக்குன்னு சொல்லியிருப்பாரு, இதுக்குப் போய்,..........சின்ன புள்ளத் தனமால்ல இருக்கு!

ஸ்ரீராம். said...

:))

philosophy prabhakaran said...

தங்களது பதிவர் ஜோக்ஸ் சிறப்பாக இருந்தது... இந்தப் பதிவு மரண மொக்கை என்று நீங்களே சொல்லிவிட்டதால் படிக்கவில்லை...

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள்.//

லைட்டா புளிப்பா இருக்கும்...

TERROR-PANDIYAN(VAS) said...

@PSV
// ஒரு ஆர்வம் காட்டத் தான் செய்கிறார்கள்//

ஆர்வத்தை என்ன பொட்டிலைய வச்சி இருக்காங்க....

RAVINDRAN said...

என்னிக்கும் இல்லாத அதிசயமா உங்க வலையில் மாட்டிக் கொண்டேன்.
ஒரு வழியாக தேடித்தேடி வெளியேறி செல்கிறேன்.

நன்றி வணக்கம்.

உங்கள் மொக்கை தொடர வாழ்துகள்: