அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, September 27, 2010

பேசுவது எப்படி - 2

போன பதிவுல பொதுவாக  பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைகிறேன்!

முதலில் நம் குழந்தைகளிடம் பேசுவது பற்றி என்னுடைய அனுபவத்தை வைத்து இந்தப் பதிவு:-

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய தந்தை தான் உலகத்திலேயே சிறந்த ஹீரோ. (அவரே முதல்தர வில்லன் ஆவதும் உண்டு, குழந்தைகள் வளர ஆரம்பித்தவுடன்!). அதனால், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம்!

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட, உங்கள் நடவடிக்கையின் மூலம் அவர்களுக்குத் தெரிய வைப்பதுதான் நல்ல பலனைக் கொடுக்கும். எனக்குத் தெரிந்து நிறைய வீட்டில் நடப்பது என்ன தெரியுமா? பிள்ளைகளைப் படிக்க சொல்வார்கள், இவர்கள் டிவியிலே மூழ்கித் திளைப்பார்கள்.

இன்னொன்று அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான்: உங்கள் பிள்ளைகளை எப்போதும் பிறரை ஒப்பிட்டு பேசவே பேசாதீர்கள்! இதனால் அவர்கள் மனம் புண்படுவதோடு, அந்த இன்னொரு பிள்ளையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்!

அடுத்த விஷயம், அட்வைஸ். கொடுப்பது சுலபம் என்பதாலேயே எல்லோரும் எல்லோருக்கும் அட்வைஸ் கொடுக்கிறார்கள்! அதுவும், தான் என்னவோ சாக்ரடீஸ் போன்ற மேதை போலவும் மற்றவருக்கு புத்திமதி சொல்வதற்காகவே இந்தப் பிறவி அமைந்தது போலவும் ஒரு நினைப்பில்! ஒரு கட்டத்தில், "உங்க வேலையைப் பாத்துகிட்டு போறீங்களா?" என்று நிராகரிக்கும் அளவுக்கு இந்த உபதேசம் இருப்பது பிள்ளைகளின் நல் வாழ்வுக்கு உதவாது!

பல பெற்றோரின் சவால், குழந்தைகளின் வயதுக்கு மீறிய கேள்விகள் தான்! குறிப்பாக குழந்தை பிறப்பு பற்றி அவர்கள் கேட்கும்போது என்ன சொல்வது என்று யாருக்கும் தோன்றாது! என் குழந்தை இது பற்றி கேட்டபோது நான் சொன்ன பதில் இதுதான்,
"இந்த கேள்விக்கு பதில் இருக்கு, ஆனா இப்ப உனக்கு சொன்னா புரியாது. உதாரணமா, ஒரு கோளத்தின் கன அளவு என்னன்னு கேட்டா
 \!V = \frac{4}{3}\pi r^3
என்று சொல்கிறாய். ஆனா இது எப்படி வந்ததுன்னு உனக்கு தெரியணும்னா அது பிளஸ் டூ சிலபஸ்ல தான் இருக்கு. அந்த வயசுல சொல்லிக் கொடுத்தாத் தான் உனக்குப் புரியும்கறதால தான் அதை இப்பவே சொல்லிக் கொடுக்கறதில்லை. அது போல, இந்த கேள்விக்கு பதிலும் நீ பிளஸ் டூ படிக்கும்போது நான் சொல்றேன்".

அந்த வயதில் நான் சொல்லி கொடுக்காமலேயே, இந்த சமுகம் அவளுக்கு அதுபற்றி சொல்லிக் கொடுக்கும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதை விடுத்து, "வயசுக்கு மீறி இப்படி கேள்வி கேட்டே, தெரியும் சேதி! ஒழுங்கா படி!" என்று சொல்வதால் நம் மீது கோபமும் அந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தான் வளருமே தவிர வேறு உருப்படியான விளைவுகள் இருக்காது.

சற்று புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், நம் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதை விட, அந்தக் கேள்விகளை பொறுமையாகக் காது கொடுத்து நாம் கேட்டாலே போதும், நம் மீது மரியாதையும் நம் பதிலை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு வந்துவிடும்.

மீண்டும் சிந்திப்போம்!

Sunday, September 19, 2010

பேசுவது எப்படி?

முன் டிஸ்கி : இது நகைச்சுவைப் பதிவு அல்ல.
மற்ற உயிரினங்களிடமிருந்து மனித இனத்தைப் பிரிப்பது ஆறாம் அறிவு மட்டுமல்ல, பேச்சுத் திறமையும்தான். அந்தப் பேச்சுத் திறன் மூலம் வெற்றி அடைந்தவர்களும் உண்டு, தோல்வி அடைந்தவர்களும் உண்டு. எப்படி பேசினால் வெற்றி அடையலாம், அதன் மூலம் மற்றவர்களைக் கவரலாம் என்பது குறித்துத் தான் இந்தப் பதிவு.

ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், எவருமே தன்னை மிகப் பெரிய புத்திசாலியாகவும், அறிவாளியாகவும், சொல்லப் போனால் தான் அழகு குறித்தும்கூட பெருமையாகவும்தான் நினைத்துக் கொள்கிறார். ஆகவே, ஒருவருடைய உடல் அழகைக் குறித்தோ, அறிவைக் குறித்தோ கேலி செய்வதை எவரும் விரும்புவதில்லை. அப்படியானால் போலியாகப் புகழ்ந்துதான் ஆக வேண்டுமா? தேவையில்லை.

உதாரணமாக, ஒருவர் குண்டாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம்,
"சார், நீங்க பாக்க நல்லாத் தான் இருக்கீங்க, ஆனா, வெயிட் மட்டும் கொஞ்சம் குறைச்சா சினிமாவுலயே நடிக்கப் போகலாம், தெரியுமா?" என்று சொல்லிப் பாருங்கள். அதன் பிறகு அவர் பார்வையில் நீங்கள் பெரிய ஆளாகவே தெரிவீர்கள். இன்னும் சொல்லப் போனால், "உண்மைதான் சார், நான் கூட வெயிட் குறைக்கணும்னு தான் நினைக்கிறேன், கொஞ்சம் அதுக்கு டிப்ஸ் கொடுங்களேன்!" என்று உங்களிடமே வேண்டுவார்.

அதேபோல், ஒருவர் ஒல்லியாக இருந்தால், அவரிடம் "ஒல்லியா இருக்கறது பிரச்சினையே இல்ல, சார், ஆனா, கன்னம் மட்டும் கொஞ்சம் உப்பினாப்ல இருந்தா நீங்க இன்னும் நல்லா இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன்!" என்று நாசூக்காக சொல்லலாம்.

அதே போல், ஒருவரிடம் ஏதாவது சந்தேகம் கேட்க விரும்பினால் ஏதோ ஏற்கெனவே தெரிந்ததுபோல் ஒருபோதும் கேட்காதீர்கள். அதே சமயத்தில் அவருக்கு அது குறித்து தெரியுமா என்ற சந்தேக தொனியில் கேட்கவும் கூடாது.

இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவரைக் கேலி செய்வது வேண்டவே வேண்டாம். திடீரென்று நம்மேல் கோபம் வர வாய்ப்புண்டு. அது நட்புக்கே வேட்டு வைத்து விடும்.

டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.

Thursday, September 16, 2010

நானும் என் முகவரியும்!


மங்குனி அமைச்சரின் இந்த பதிவைப் படித்தேன். நாமளும் எத்தனை நாளாத் தான் மக்களுக்கு நம்மைத் தெரிவிக்காமல் இருப்பது. எனவே, என் பெயரைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கும் பதிவர்களுக்காக என் முகவரி கீழே:-
..
..
என் முகவரியைத் தெரிஞ்சுக்க அவ்வளவு ஆவலாவா இருக்கீங்க?
..
..
..
..
..
..
..
..
..
..
அவ்வளவு பெரிய ஆளா நானு?
..
..
..
சரி எத்தனையோ இடங்களில் வசித்திருக்கிறேன். அதனால் ஒரு முகவரியை விட, முகவரிகளைத் தெரிவிப்பதே நலம், என்பதால், இதோ அந்த முகவரிகள்:உங்களுக்காக! (இன்னும் கொஞ்சம் கீழே போங்க!)
..
..
..
..
..
..

என் முக"வரி" (சாரி, வரிகள்) தெரியுதா?

ஓகே, ஓகே திட்டாதீங்க, டூ யு வான்ட் டு ஸீ மை அட்ரஸ்?

ஓகே, ஹியர் இஸ் அட்ரெஸ்!

Again Sorry, I did not mean address, but A "DRESS"

டிஸ்கி : மிஸ்டர் மங்குனி, நாங்களும் "மாத்தி" யோசிப்போமில்ல?

Monday, September 13, 2010

கண்டுபிடிங்க பார்க்கலாம்

 உங்க ஜெனரல் நாலெஜ் கொஞ்சம் டெஸ்ட் பண்ணுவோமா?


1. மூன்றை மூன்றால் மூன்று முறை பெருக்கினால் என்ன விடை வரும்?
மூன்றை மூன்றால் எத்தனை முறை பெருக்கினாலும் ஒன்பது தான் வரும்.
2. 217-லிருந்து எத்தனை முறை 25-ஐக் கழிக்கலாம்?
ஒரு முறைதான் கழிக்க முடியும். ஏனென்றால் ஒரு முறை கழித்த பிறகு, அந்த எண் 192 ஆகிவிடும் அல்லவா?

3. பேருந்தில் பயணம் செய்யும்போது ஒருவர் முப்பது ரூபாய்க்கு டிக்கெட் எடுத்ததால் என் கையைவிட்டு எழுபது ரூபாய் போனது, எப்படி?
பலரும் நான் கண்டக்டர் என்று விடை எழுதியிருக்கிறார்கள். அதுவும் ஒரு விடைதான். நான் நினைத்த விடை இதோ:

ஒருவர் என் மூலமாக முப்பது ரூபாய் டிக்கெட் எடுக்க என்னிடம் ஐம்பது ரூபாய் கொடுத்தார். நான் அதை கண்டக்டரிடம் கொடுக்க அவர் என்னிடம் டிக்கெட்டும் மீதி சில்லறை இருபது ரூபாயும் கொடுத்தார். நான் அதை அப்படியே டிக்கெட் உரிமையாளரிடம் கொடுத்தேன். இப்போது பார்த்தால், நான் மொத்தமாக ஐம்பது மற்றும் இருபது ஆக மொத்தம் எழுபது ரூபாய் என் கையால் கொடுத்திருக்கிறேன். எப்படி?


விடை அளித்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்!

Saturday, September 11, 2010

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!

யாருக்கும் தெரியாத விஷயத்தை நான் இப்போ சொல்லப் போறதில்லை. "முழு  முதற்கடவுள்" என்று எல்லோராலும் வணங்கப் படுகின்ற விநாயகப் பெருமானின் அருள் வேண்டி அனைவரும் இன்று விநாயக சதுர்த்தி கொண்டாடுகிறோம்.

வட இந்தியாவில் கணேஷ் சதுர்த்தி என்று இந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.

விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை (மோதகம்) படைத்து வழிபாடு செய்வது ஏன்? 


கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. 


அது மட்டுமின்றி எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது.  (இந்த சுட்டிக்கு நன்றி)


கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்! 


அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்!

டிஸ்கி : இன்று பிறந்த நாள் காணும் இன்னொரு வி.ஐ.பி. யார் தெரியுமா? என் முதல் பெண். அவளுக்கு உங்க சார்பா பிறந்த நாள் வாழ்த்துகளை வேண்டுகிறேன்!ஒன் மோர் டிஸ்கி : ஹலோ, ரெண்டு பதிவுகள் மொக்கை இல்லாம போட்டுட்டேன், இனிமே பீ கேர்புல்! (நான் என்னைய சொன்னேன்!) ஸ்டார்ட் மீசிக்!

Friday, September 10, 2010

ரமலான் நல் வாழ்த்துகள்!

உலகெங்கும் உள்ள அனைத்து முகம்மதிய சகோதரர்களுக்கும் என்  இனிய ரமலான் நல்  வாழ்த்துகள்!
ரமலான் மாதத்தின் சிறப்புகள்:

 1. நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)

 2. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)

 3. ரமலான்  (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)

 4. ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)

 5. ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)

 6. அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)

 7. நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)

 8. ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.

 9. ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது

 10. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)

 11. புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)

நோன்பு நோற்பதன் சிறப்புகள்

 1. நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)

 2. நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)

 3. நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ)

 4. நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)

 5. நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)

 6. நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)

 7. நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)

 8. நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)

 9. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

 10. நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)
  (நன்றி: http://suvanathendral.com/portal/?p=1272)

Thursday, September 9, 2010

நீயும் நானும்

முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி.

நீ அருகிலிருந்தால்
நெருப்பும் குளிர்கிறது,
வெயிலும் இதமாய் இருக்கிறது.

நீ அருகிலிருந்தால்
காயங்கள் கூட வலிக்கவில்லை


நீ விலகிப் போனால்
மழையும் சுடுகிறது, 
இதயத் துடிப்புகூட
சுமையாய்ப் போனது.


&&&&&&&&&&&&&&&&&&


உன்னைப் பார்த்த கணமே
என்னுள் நுழைந்து 
இதயத்தில் இடம் பிடித்து 
என்னை இம்சிக்கிறாயே,
என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய 
பயங்கரவாதம்?


டிஸ்கி : நல்லா பாத்துக்கோங்க, நெருப்பு, காயம், பயங்கரவாதம் - இதெல்லாம் சொல்லியிருக்கேனா? போன பதிவு டிஸ்கில சொன்னா மாதிரி சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டேன், நாங்கல்லாம் சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம்.

Tuesday, September 7, 2010

சொந்தமாக சில வரிகள்.............

நம்ம மாதவன் ஒரு பதிவு போட்டிருக்காரு! அதில சொந்த முயற்சியில தான் எதுவும் எழுதனும்னு சொல்லியிருக்காரு. நம்ம கோகுலம் வெங்கட் வேற அந்தப் பதிவுல "இனிமே நானும் உங்களை மாதிரியே சொந்தமா ( !!! ) எதாவது எழுத Try பண்றேன்"னு வேற சொல்லிட்டாரு. ஸோ, அவருக்கு முன்னாடியே நாம ஏதாவது சொந்தமா எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!

கீழே உள்ள எல்லாமே சொந்த வரிகள் என்பதை அறுதியிட்டு உறுதியாகவும், ஆணித்தரமாகவும்...........ஓகே, நீங்க நம்பினா போதும்!

தாய் சொல்லைத் தட்டக் கூடாது!
தகப்பன் தெய்வத்துக்கும் மேலானவன்!
அண்ணன் இருக்கும்வரை நமக்குக் கவலை இல்லை!
அக்கா, தங்கை உள்ளவன் அடுத்த பெண்ணை தவறாக நினைக்க மாட்டான்!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
மாமனுக்கு மிஞ்சின சொந்தமில்லை!

இது போதும்னு நினைக்கிறேன், நல்லா பாருங்க எல்லா வரியிலேயும் ஏதாவது ஒரு "சொந்தம்"பத்தி எழுதியிருக்கேன்.

டிஸ்கி : தயவு செய்து திட்டாதீர்கள்.அடுத்த பதிவு கொஞ்சம் சீரியசாவே எழுதிடறேன்!

Monday, September 6, 2010

நானும் ஒரு டாக்டர் பட்டமும்

 நேற்று ஆசிரியர் தினம். அநேகமாக எல்லாப் பதிவர்களும் ஆசிரியர்களை வாழ்த்தி எழுதிவிட்டதால் நான் எழுதவில்லை. (சரி.....சரி......கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் நேற்று எழுத விட்டுவிட்டேன், இப்ப ஓகே வா?)
சரி விடுங்க. இன்னிக்கு நான் டாக்டர் பட்டம் வாங்கிய விஷயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்திருக்கேன். அதுவும் இணையத்தின் மூலமா வாங்கியிருக்கேன் என்பதுதான் ஹைலைட்!
மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெறுவது ஒரு முறை! அதுக்கு +2-விலேயே நிறைய மார்க் வாங்கி நிறைய செலவழிச்சு நல்லா படிச்சு.............எழுதவே நாக்கு தள்ளுது!

இன்னொரு வழி, ஏதாவது ஒரு முதுகலைப் பட்டம் பெற்று ஏதாவது முக்கிய கருவை எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து தீசிஸ் எல்லாம் எழுதி............அதுவும் ரொம்ப கஷ்டமான வழிதான்!

இது ரெண்டைத் தவிர கௌரவ டாக்டர் பட்டம்னு ஒண்ணு இருக்கு. கலைத் துறை அல்லது அரசியல் இதுல ஈடுபட்டு ஏதாவது பல்கலைக் கழகத்துல இருந்து டாக்டர் பட்டம் "வாங்கறது". இதுக்கும் நமக்கும் ரொம்பத் தூரம்!
அதான் பார்த்தேன், இணையத்துல தேடி ரொம்ப சிரமப் பட்டு இந்த டாக்டர் பட்டம் வாங்கியிருக்கேன், அது உங்க பார்வைக்காக!
 
பிம்பிளிக்கு பிளாக்கி.............அதாவது தூய தமிழில்
நல்லா ஏமாந்தீங்களா?
டிஸ்கி: உங்களுக்கு வேண்டிய யாருக்கு வேண்டுமானாலும், இந்த டாக்டர் பட்டத்தையோ, அல்லது கம்பவுண்டர் பட்டமோ கொடுத்துக் கொள்ள இந்த பதிவின் மூலம் நான் அனுமதி வழங்குகிறேன்!

Thursday, September 2, 2010

ஸ்ரீ (கிருஷ்ண) ஜெயந்தி வாழ்த்துகள்!

கடமையைச் செய், பலனை எதிர் பாராதே!
நீ எதையும் அடையவும் இல்லை, இழக்கவும் இல்லை,
எல்லாம் என்னால் கொடுக்கப்பட்டது, என்னால் எடுக்கப்பட்டது 

என்றெல்லாம் மக்களுக்கு உபதேசித்த கண்ணன் பிறந்த தினம் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப் படுகிறது.

ஆவணி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் அஷ்டமி திதி அன்று கோகுலாஷ்டமி என்று கொண்டாடப் படுகிறது. வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி என்று இதைக் கூறுவார்கள்.

அதேபோல், ஆவணி மாதத்தில் வரும் ரோஹிணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ ஜெயந்தி என்று கொண்டாடப் படுகிறது.  அதன்படி நாங்கள் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம்.
மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் இன்று இரவு பத்து மணியளவில், சந்தான கிருஷ்ணன்விக்ரஹத்தை ஒரு தொட்டிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த அழகுக் காட்சியை யு-ட்யூபில் இங்கே காணுங்கள்.

உலக மக்கள் அனைவரும் நலம்மாகவும் ஒற்றுமையுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுமென்று இந்த இனிய நன்னாளில் வேண்டிக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மீண்டும் ஸ்ரீ(கிருஷ்ண)ஜெயந்தி வாழ்த்துகள்!