அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, September 6, 2010

நானும் ஒரு டாக்டர் பட்டமும்

 நேற்று ஆசிரியர் தினம். அநேகமாக எல்லாப் பதிவர்களும் ஆசிரியர்களை வாழ்த்தி எழுதிவிட்டதால் நான் எழுதவில்லை. (சரி.....சரி......கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் நேற்று எழுத விட்டுவிட்டேன், இப்ப ஓகே வா?)
சரி விடுங்க. இன்னிக்கு நான் டாக்டர் பட்டம் வாங்கிய விஷயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்திருக்கேன். அதுவும் இணையத்தின் மூலமா வாங்கியிருக்கேன் என்பதுதான் ஹைலைட்!
மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெறுவது ஒரு முறை! அதுக்கு +2-விலேயே நிறைய மார்க் வாங்கி நிறைய செலவழிச்சு நல்லா படிச்சு.............எழுதவே நாக்கு தள்ளுது!

இன்னொரு வழி, ஏதாவது ஒரு முதுகலைப் பட்டம் பெற்று ஏதாவது முக்கிய கருவை எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து தீசிஸ் எல்லாம் எழுதி............அதுவும் ரொம்ப கஷ்டமான வழிதான்!

இது ரெண்டைத் தவிர கௌரவ டாக்டர் பட்டம்னு ஒண்ணு இருக்கு. கலைத் துறை அல்லது அரசியல் இதுல ஈடுபட்டு ஏதாவது பல்கலைக் கழகத்துல இருந்து டாக்டர் பட்டம் "வாங்கறது". இதுக்கும் நமக்கும் ரொம்பத் தூரம்!
அதான் பார்த்தேன், இணையத்துல தேடி ரொம்ப சிரமப் பட்டு இந்த டாக்டர் பட்டம் வாங்கியிருக்கேன், அது உங்க பார்வைக்காக!




 
பிம்பிளிக்கு பிளாக்கி.............அதாவது தூய தமிழில்
நல்லா ஏமாந்தீங்களா?
டிஸ்கி: உங்களுக்கு வேண்டிய யாருக்கு வேண்டுமானாலும், இந்த டாக்டர் பட்டத்தையோ, அல்லது கம்பவுண்டர் பட்டமோ கொடுத்துக் கொள்ள இந்த பதிவின் மூலம் நான் அனுமதி வழங்குகிறேன்!

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

'நமக்கு நாமே' திட்டம்,
அதோட விளைவா 'பட்டம்' ?

R.Gopi said...

ஆடிப்பட்டம் தேடி விதைச்சுருந்தா, இந்நேரம் அறுவடைக்காவது தயாராயிருக்கலாம்....

ஹூம்.... விதி வலிது.... பட்டம் பார்த்தேன்... பரவசமடைந்தேன்...

உங்களுக்கு பட்டம் ரொம்ப பிடிக்குமா... பிரபுதேவா காதுல விழாம பார்த்துக்கோங்க.....

செல்வா said...

நாங்க எதுக்கு ஏமாறப்போறோம்.. உங்களுக்கு டாக்டர் பட்டம் யாரும் கொடுக்க மாட்டங்க அப்படின்னு கூட எங்களுக்கு தெரியாதா ...?

வெங்கட் said...

@ To All.,

ஹலோ.. இத பாருங்க..

இவரை எப்படியாவது கைது பண்ணி.,
எந்த Section-லயாவது ஒரு கேஸ் போட்டு..
Atleast ஒரு 6 மாசத்துக்காவது
பதிவு எழுதாத மாதிரி பண்ண
எதாவது வழி இருக்கா..??

வெங்கட் said...

ஆஹா.. மேட்டர் சிக்கிடுச்சு..
இவரை கைது பண்ண..

என்ன இருந்தாலும் இவர்
" போலி டாக்டர் " தானே..!!

பெசொவி said...

//வெங்கட் said...

ஆஹா.. மேட்டர் சிக்கிடுச்சு..
இவரை கைது பண்ண..

என்ன இருந்தாலும் இவர்
" போலி டாக்டர் " தானே..!!//

அப்ப கூட ஒரு "போலி"ஸ் வந்துதான் என்னைக் கைது பண்ணனும்!

அருண் பிரசாத் said...

யப்பா.... இவர் மொக்கை தாங்கலடா சாமி....

பெசொவி said...

//அருண் பிரசாத் said... யப்பா.... இவர் மொக்கை தாங்கலடா சாமி..//

அப்போ அந்த மொக்கைக்காகவாவது ஒரு (நிஜ) டாக்டர் பட்டம் தரலாமே!

வெங்கட் நாகராஜ் said...

ஹை இது நல்லா இருக்கே!. எனக்கு டாக்டர் பட்டமெல்லாம் வேணாம், ஏன்னா எனக்கு மட்டுமில்ல, நிறைய பேருக்கு டாக்டர்-னாலே பயம். அதுனால, நான் இதே மாதிரி என்ஜினீயர் பட்டம் வாங்கிக்கிறேன், சரியா!

நன்றி.

வெங்கட்.

என்னது நானு யாரா? said...

இப்படி ஒரு சிம்பிள் வழியிருக்குன்னு யாருக்கும் தெரியாம, ஏன் அதுக்கு கோடி கணக்கா செலவு செய்து டாக்டர் பட்டம் வாங்கறாங்கன்னு தெரியலையே?

இந்த நல்ல விஷயத்தை எல்லா டீவியிலேயும், ரேடியோவிலேயும், பேப்பரிலேயும் போடுங்க அண்ணாச்சி! எல்லோரும் பட்டம் வாங்க உங்க வீட்டு வாசல்ல க்யூ கட்டி நிப்பாங்க!

துட்டுக்கு துட்டும் ஆச்சி இல்ல! என்ன நான் சொல்றது?

கருடன் said...

நீங்க ஒன்னும் கவலைபட வேண்டாம் இது ஆரம்ப கட்டம்தான்.. இன்னும் இஞ்ஜினியர் பட்டம், வக்கில் பட்டம் போறதுக்கு முன்னாடி நீங்க ஒரிஜினல் டாக்டர் பாருங்க... :))

Chitra said...

அவ்வ்வ்வவ்.....

Prathap Kumar S. said...

அய்யோ...முடில சார்.... ஏன் சார் இப்படி அயிட்டீங்க.... அவ்வ்வ்வ்வ்...:))