அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, March 3, 2011

ஒரு துப்பறியும் கதை

அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர் இறந்துவிட்டார். ஆனால், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. துப்பறியும் புலி செல்வா அந்த இடத்தில ஆஜர்.

"இவருக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?", "நீங்கள் யாரையாவது சந்தேகப் படுகிறீர்களா?","உங்கள் சந்தேகம் என்ன?" போன்ற பல கேள்விகளுக்கு உறவினர்களின் பதில் "தெரியாது","இல்லை", "எனக்குத் தெரிந்து இல்லை" போன்ற பதில்களே.

சோர்ந்து போன செல்வாவுக்கு புத்துணர்வு கொடுத்தது அந்த தகவல். இறந்தவர் ஒரு மாதத்துக்கு முன் தன குடும்ப டாக்டரைப் பார்த்திருக்கிறார். ஆனால் அன்று முதல் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார்.
*******
தகவல் கிடைத்ததும் குடும்ப டாக்டரைச் சந்தித்தார், செல்வா. "நான் ஒன்னும் பெரிய ரகசியத்தை அவருக்கு சொல்லலையே!", மோவாயைத் தடவிய படி டாக்டர் மேலும் சொன்னது, "சார், அவர் உடல் நிலை நல்லாத்தான் இருந்தது, கொழுப்பு, சர்க்கரை பி.பி. எதுவும் கிடையாது. ஆனா, அவருக்கு உப்பு வியாதி இருந்தது, எக்காரணம் கொண்டும் உப்பு போட்டு சாப்பிடக் கூடாது, அது மட்டுமில்லை, கொஞ்சம் உப்பு சாப்பிட்டு வந்தாக் கூட ஒரே மாசத்துல இறந்துடுவார்னு அவர் கிட்ட எச்சரிச்சிருந்தேன்"

"அப்போ, அவருக்கு சாப்பாட்டுல கொஞ்சம் கொஞ்சமா உப்பு சேர்த்துப் போட்டிருந்தா, ஒரே மாசத்தில் அவர் இறந்திருக்கக் கூடுமா?" கேட்ட செல்வாவுக்கு ஒரு "எஸ்" சொன்னார் சோகமாய்.
********
பிடி கிடைத்த சந்தோஷத்தில் அந்த வீட்டு சமையல்காரனை விசாரித்தார். "ஐயோ, எஜமானை நான் போய் கொல்லுவேனா? அவர் உப்பை சாப்பிட்டு நான் வளர்ந்திருக்கேன் சார், இன்னும் சொல்லப் போனா, டாக்டர் சொன்ன விஷயத்தை என்கிட்டே சொல்லி, தானே கேட்டாலும் உப்பு போடக் கூடாதுன்னு என்கிட்டே சத்தியம் வேற வாங்கி வச்சிருந்தார், தெரியுமா?" என்றபடியே பிலாக்கணம் பாட ஆரம்பித்தான் அவன்.
*******
நொந்தபடியே வீட்டில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த செல்வாவை ஒரு இடி இடித்தாள்   அவர் மனைவி. "என்னங்க இது, காலையிலிருந்து பல்லு கூட விளக்காம அப்படி என்ன யோசனை? அந்தப் பணக்காரர் எப்படி செத்தா என்ன? செத்தவர் செத்துட்டார், விடுவீங்களா?" கேட்டுக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தார் அவர். திடீரென அவருக்கு ஒரு யோசனை, "கரெக்ட், அதுதான் சரி" என்றபடியே அந்த பணக்காரரின் வீட்டுக்குப் போனார் செல்வா.
*******
"அந்த பணக்காரர் எப்படி செத்தாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்." என்றார் செல்வா. "அப்படியா? யாரு கொலை பண்ணினாங்க?" ஆர்வமாய்க் கேட்ட மனைவியிடம், "யாரும் கொலை பண்ணலை, அவர் இயற்கையாத் தான் செத்தார்." 
"அதுதான் எப்படி?" கேட்ட மனைவிக்கு செல்வாவின் பதில்,
"அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"

டிஸ்கி: இந்த கதைல வர்ற செல்வாவும் அந்த செல்வாவும் ஒன்னுதானான்னு என்னைக் கேக்க கூடாது.  

23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பல்லு விளக்குற பன்னாடை பசங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. இது ஒரு விழிப்புணர்வு பதிவு..

கோமாளி செல்வா said...

வட போச்சே :-(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு துப்பறியும் கதை//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ..

துப்பியாச்சு

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 1
பல்லு விளக்குற பன்னாடை பசங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. இது ஒரு விழிப்புணர்வு பதிவு////
அதானே நமக்கெதுக்கு இது ஹி ஹி ....:))

கோமாளி செல்வா said...

//பதில்,"அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"//

ஹா ஹா ஹா... செம கதை அண்ணா ... உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா ?

இம்சைஅரசன் பாபு.. said...

//பல்லு விளக்குற பன்னாடை பசங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. //

நீ பல்லு தேய்க்க மாட்டான்னு இப்படியா ..முதல் ஆளா வந்து ஒத்துகிறது

Madhavan Srinivasagopalan said...

// "யாரும் கொலை பண்ணலை, அவர் இயற்கையாத் தான் செத்தார்." //

நோ.. நோ..
நாட்டாமை தீர்ப்ப மாத்து..
அது 'தற்கொலை'..

Madhavan Srinivasagopalan said...

அவராத்தான பல் வெளக்கிக் கிட்டு இருந்தாரு ?
இயற்கையா சாவுன்னா, அவரு, வேப்பங்குச்சில பல் தேய்ச்சாரா என்ன ?

Madhavan Srinivasagopalan said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said.. " கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூ..

துப்பியாச்சு "//

துப்பிட்டீங்க சரி..
என்னாத்த அறிஞ்சீங்க ?

மாணவன் said...

எஸ்.கே said...

செல்வா உங்க கல்யாணத்துக்கு எங்களை கூப்பிடவே இல்லையே!:-)

எஸ்.கே said...

எங்கள் வீட்டில் நாங்கள் பற்பொடியைதான் பயன்படுத்துகிறோம்!

Speed Master said...

ஓ செல்வா பல்லெல்லாம் விளக்குவாறா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said... 12

எங்கள் வீட்டில் நாங்கள் பற்பொடியைதான் பயன்படுத்துகிறோம்!//

உங்களோடது பொடி பல்லா இருக்கும். அதான்..

MANO நாஞ்சில் மனோ said...

ஆயிரம் பல் கொண்ட யானையே பல் வெளக்குறது இல்லை.....பின்னே நாம எதுக்கு விளக்கனும்....

டிஸ்கி : இது மொக்கையன் செல்வா சொன்னது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம நம்ம சிரிப்பு போலீசு மாதிரி பல்லே வெளக்காம இருந்திருந்தா இந்த மாதிரி ஆயிருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கணக்குல புலி கேள்விப்பட்டிருக்கேன், அது என்ன துப்பறியும் புலி? இதுக்காவது அது இருக்கா?இல்ல எடுத்தாச்சா?

sundarmeenakshi said...

yappa samy thangamudiyalada

middleclassmadhavi said...

சே.. இனி அந்த அட்வெர்டைஸ்மென்டைப் பார்த்தால் இது தான் ஞாபகம் வரும்... :)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

நாஞ்சில் பிரதாப் said...

hahaha...சூப்பர்... ))

R.Gopi said...

நல்லா அறிஞ்சான்யா துப்பு, உப்புன்னு..

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html