அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, March 29, 2011

இலங்கை நியூசிலாந்து போட்டி - பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

பஞ்சாங்கப் படி இன்று பகல் பன்னிரண்டு மணி வரை தசமி பிறகு ஏகாதசி. நட்சத்திரம் திருவோணம். செவ்வாய்க் கிழமை. யோகம் சித்த யோகம்.

கிழமைப் படி பார்த்தல் செவ்வாய்க்கிழமைக்கும் சிவப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது.  அதன்படி சிவப்புத் தோல் உள்ள நியூசிலாந்து ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.  அதே சமயம் தசமி என்பது பத்தாம் எண்ணைக் குறிக்கிறது. பத்துத் தலை கொண்ட இராவணனின் நிலமான இலங்கைக்கு சாதகமான நிலை இது. பன்னிரண்டு மணிக்கு மேல் ஏகாதசி வருகிறது. இது பதினொன்றைக் குறிக்கும் என்பதால் பதினோரு பேரைக் கொண்ட இரு அணிக்கும் சம பலன் கிட்டும்.

மேலும், திருவோணம் என்பது நட்சத்திர வரிசையில் இருபத்திரண்டாவதாக வருகிறது. கூட்டினால் நான்கு. இலங்கை என்பது நான்கு எழுத்தில் வருவதால் நட்சத்திரப் படி இலங்கைக்கு வெற்றி கிட்டலாம்.  அதே நேரம் சித்தயோகம் - ஆறு எழுத்து, நியூசிலாந்து - இதுவும் ஆறு எழுத்து. எனவே, யோகம் நியூசிலாந்துக்கே சாதகம்.

இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது, என்ன தோன்றுகிறது என்றால்,

..
..
..
..
..
..
..
..
..
இரண்டில ஏதாவது ஒன்று ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது, அதே நேரம், மேட்ச் டை ஆகவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் வேணாம், எந்த டீம் ஜெயிக்கும்னு கரெக்டா சொல்லுண்றீங்களா? 

ஓகே, சொல்லறேன், ஆனா நாளைக்கு இந்த ப்ளாக் பக்கம் வாங்க, சொல்றேன்!

டிஸ்கி : எதுக்குத் தான் பஞ்சாங்கம் பார்க்கறதுன்னு விவஸ்தையே இல்லையா, போங்க, புள்ள குட்டிய படிக்க வைங்கப்பா!

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

நீங்களா சாதாரண ஆளு..
நாளைக்கு வந்தா இந்த மேட்ச்சோட ரிசல்ட்ட மட்டும் சொல்ல முடியும்..
ஏப்ரல் ரெண்டாம் தேதி.. ராத்திரி பதினோரு மணிக்கா வாங்க..
நா, உலகக் கோப்பை ஜெயிப்பது யாருன்னே சொல்லுறேன்..

Speed Master said...

ஹி ஹி நாளைக்கு வரமாட்டேன்

இம்சைஅரசன் பாபு.. said...

காரமடை ஜோசியர் சொன்னாரு இணைக்கு பேப்பர் ப்ளாக் எல்லாம் படிக்காதீங்க தலை வலி வரும்னு ..அதையும் மீறி படிச்சேன் பாரு எண்ணை பிஞ்ச செருபாலையே அடிச்சுக்கணும் ..

கோமாளி செல்வா said...

ஹய்யோ ஹய்யோ . எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் ?
ஆனா ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. சிரிச்சேன் ..

middleclassmadhavi said...

:-))))

வெங்கட் said...

இப்படியே ஒவ்வொரு மேட்ச் நடக்கும்
போதும் நீங்க பஞ்சாகத்தை கணிச்சு
சொல்லுங்க.. நாங்க மேட்சே பாக்க
வேணாம். கரண்ட் செலவு மிச்சம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
இப்படியே ஒவ்வொரு மேட்ச் நடக்கும்
போதும் நீங்க பஞ்சாகத்தை கணிச்சு
சொல்லுங்க.. நாங்க மேட்சே பாக்க
வேணாம். கரண்ட் செலவு மிச்சம்
/////////

அவ்வளவு எதுக்கு, ஸ்ட்ரெயிட்டா கப்பு எந்த டீம் எடுக்கும்னு சொல்லிட்டா, மேட்சே நடத்த வேணாம், எல்லாமே மிச்சம்.....

cho visiri said...

//அவ்வளவு எதுக்கு, ஸ்ட்ரெயிட்டா கப்பு எந்த டீம் எடுக்கும்னு சொல்லிட்டா, மேட்சே நடத்த வேணாம், எல்லாமே மிச்சம்.....//

Excellent comment.

cho visiri said...

//அவ்வளவு எதுக்கு, ஸ்ட்ரெயிட்டா கப்பு எந்த டீம் எடுக்கும்னு சொல்லிட்டா, மேட்சே நடத்த வேணாம், எல்லாமே மிச்சம்.....//
Excellent comment. Weldone!