முன்டிஸ்கி: நாளை மகளிர் தினம்
ஒரு தத்துவம்:
கடவுள் ஏழைக்குக் கெடுத்துப் பின் கொடுக்கிறார்; பணக்காரனுக்கு கொடுத்துப் பின் கெடுக்கிறார்.
ஒரு பொன்மொழி
ஒரு பெண்ணை ஒரு ஆண் புரிந்து கொள்வது கஷ்டம், ஒரு பெண் புரிந்துகொள்வது அதைவிட கஷ்டம்.
ஒரு ஜோக்:
டாக்டர் பேஷன்ட்டிடம்: உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு.
பேஷன்ட் : நல்ல செய்தி என்ன?
டாக்டர் : லேப் லேர்ந்து டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு, உங்களுக்கு இருபத்து நாலு மணி நேரம்தான் கெடு கொடுத்திருக்காங்க.
பேஷன்ட் : ஓ, காட்! அப்ப கெட்ட செய்தி?
டாக்டர் : ரிசல்ட் நேத்து வந்துச்சு!
ஒரு குவிஸ்
ஒரு பெண்மணியோட கண்ணில தூசி படறதுக்கும், ஒரு அழகிய புடவை படறதுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்மணியோட கண்ணில தூசி படறதுக்கும், ஒரு அழகிய புடவை படறதுக்கும் என்ன வித்தியாசம்?
தூசி பட்டா, அவங்க கண்ணில தண்ணி வரும், புடவை பட்டா, அவங்க புருஷன் கண்ணில தண்ணி வரும்.
ஒரு கவிதை
நாளைய செய்திகள்:
"பெண் சிசுக் கொலை"
"சிறுமி கற்பழிப்பு"
"7 பேரை ஏமாற்றிய கயவன்"
"புது மணப்பெண் எரித்துக் கொலை"
செய்திகளுக்கு மத்தியில்
ஒரு பக்கம்
"மகளிர் தின வாழ்த்துகள்"
14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
கவிதை அருமை
//தூசி பட்டா, அவங்க கண்ணில தண்ணி வரும், புடவை பட்டா, அவங்க புருஷன் கண்ணில தண்ணி வரும்.//
ரொம்ப வாடி கண்ணீர் விடுருபீங்க போல PSV சார்
கவிதை அருமை
கவிதை மிக அருமை!
இன்றைய சந்தை நல்லா இருக்கு!
கடவுள் ஏழைக்குக் கெடுத்துப் பின் கொடுக்கிறார்; பணக்காரனுக்கு கொடுத்துப் பின் கெடுக்கிறார்.///
ஏழையா இருந்து கடவுள் கொடுத்ததுக்கு பிறகு பணக்காரன் ஆனவங்களுக்கு?
// கவிதை அருமை //
கவிதையா..? எது..?
அது நியூஸ் பேப்பர்ல தினமும்
வர்ற செய்தியாச்சே..!!
நல்ல செய்தி :
லேப் லேர்ந்து டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு
கெட்ட செய்தி :
உங்களுக்கு இருபத்து நாலு மணி நேரம்தான் கெடு கொடுத்திருக்காங்க.
ரொம்ப கெட்ட செய்தி :
ரிசல்ட் நேத்தே வந்துச்சு!
மகளிர் தினத்துக்கு மகளிரைக் கிண்டல் செய்து பதிவா என்று கேட்க வந்த என்னை, கடைசி கவிதை தடுத்து விட்டது!
ஒரு கவிதை
நாளைய செய்திகள்:
"பெண் சிசுக் கொலை"
"சிறுமி கற்பழிப்பு"
"7 பேரை ஏமாற்றிய கயவன்"
"புது மணப்பெண் எரித்துக் கொலை"
செய்திகளுக்கு மத்தியில்
ஒரு பக்கம்
"மகளிர் தின வாழ்த்துகள்"
.....நச்னு இன்றைய அவல நிலையை சொல்லியாச்சு.
கலகலப்பாக இருந்த வாரச்சந்தை கவிதையோடு இறுக்கமாக முடிந்தது...!
Very Nice!
வார சந்தை வழக்கம் போல கலகலவென களை கட்டியது...
கடைசி கவிதை (!!?) சூப்பர் தல...
வாழ்த்துக்கள்ள்ள்.......
அருமையான கவிதை
Post a Comment