அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, June 27, 2011

பார்ஷியல் டேமேஜ் (குட்ஸ் பதிவு)

இது இந்தப் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல..................................தொடர் பதிவு!

இரவு மீட்டிங் முடிந்ததும் வெங்கட் கோபமாக வருகிறார்.

பி.ஏ.: வாங்க சார், மீட்டிங் நல்லா முடிஞ்சுதா?
வெங்கட் : எங்கய்யா நல்லா நடக்க,
அது சரி, நம்ம ஆளுங்களுக்கு போன் போட்டு மீட்டிங்
 பத்தி சொன்னியா இல்லையா?
பி.ஏ.: அதெல்லாம் சொன்னேன், சார்!
வெங்கட் : ஷாலினிய காணோமேப்பா!
பி.ஏ.:சார், முதல் போனே அவங்களுக்குதான் போட்டேன்
சார், அவங்களும் சந்தோஷமா, ஹையா ஜாலி, me the first
அப்படின்னு சொன்னாங்களே?
வெங்கட்: கிழிஞ்சது அவங்களுக்கு me the first-க்கு
அர்த்தமே தெரியாதே, அதான் மீட்டிங் முடிஞ்சதும் வந்திருப்பாங்க.
பி.ஏ.: செல்வா வந்திருப்பானே?
வெங்கட் : (சோகத்துடன்) அதை ஏன்பா கேக்கறே?
வந்த வுடனே மைக்கைப் பிடிச்சுகிட்டு
"யாருய்யா, அது?  என் தலைவருக்கு ஒரு லட்சம் அடி குடுத்தது?" அப்படின்னு கேட்டான், நான் உடனே,
"ஐயோ, செல்வா, அது வேற ஹிட்டு,
இது வேற ஹிட்டு"ன்னேன்.
உடனே, அவன் மறுபடியும், "ஓஹோ, உங்க வீட்டில
கரப்பான்பூச்சி அதிகமா, அதான் ஒரு லட்சம் "ஹிட்" டப்பா
வாங்கியிருக்கீங்களா?" அப்படின்னு கேட்டு சொதப்பிட்டான்.
பி.ஏ.: அட கடவுளே!
வெங்கட்: அது சரி, அருணை   கடத்திட்டு வரச் சொன்னேனே, என்ன ஆச்சு?
பி.ஏ.: சார், நீங்க சொன்ன வுடனே, நம்ம செல்வாவுக்கு போன் போட்டு அதான் செய்யச் சொன்னேன், அதுக்கு அவரு,
 "பைக்கெல்லாம் வேண்டவே வேண்டாம்.  வேற ஐடியா இருக்கு. உடனே அருணுக்கு ஒரு கான்பரன்ஸ் கால் போட்டுடறேன்,
அவர் கான்பரன்சுக்கு வந்துட்டா  அவரால  மீட்டிங் போக
முடியாதே?"ன்னு சொன்னாரு.
வெங்கட்: (தலையில் அடித்துக் கொண்டு) கிழிஞ்சது, அதான்
மீட்டிங் முழுசும்  அருண்  போன்லயே  இருந்தாரா?
அது சரி, ரமேஷ், பி.எஸ்.வி. இவங்களை இங்க
கட்டிப் போட்டுட்டுதான போனேன், அவங்க எப்படி அங்க  வந்தாங்க?"
பி.ஏ.: நான் தான் சார் அவங்களை அனுப்பிட்டேன். ரமேஷ் என்கிட்டே,
"என்னை மட்டும் நீ விடலைனா, எங்க ஆளுங்களுக்கு போன் போட்டு உனக்கு "சுறா" டிவிடி anuppa சொல்லிடுவேன்"னு மிரட்டினாரு, நான் பயந்து போய் அவரை அனுப்பிட்டேன், அது சரி, அவர் ஏன் சார், போகும்போது
என்னை நாலஞ்சு போட்டோ எடுத்துட்டுப் போனாரு?"
வெங்கட்: போட்டோ வேற எடுத்தாரா?
கிழிஞ்சுது, இந்த போட்டோவை வச்சே
நாலு ஆல்பம் போஸ்ட் தேத்திடுவாரே,
எல்லாம் என் நேரம், ஏன்யா, பி.எஸ்.வியை ஏன்யா விட்டுட்டே?"
பி.ஏ.: போங்க சார், நான் இத்தனை நாளா உங்ககிட்ட
வேலை செய்யறேனே,ஒரு நாளாவது  என்னை சின்ன
சேலமாவது கூட்டிகிட்டு  போயிருக்கீங்களா? ஆனா, அவரு
எனக்கு சிங்கப்பூர் சுத்தி காட்டறேன்னு சொல்லியிருக்கார், அதான்,
அவரையும் விட்டுட்டேன்.
வெங்கட்: யோவ், அவர்தானே?
உனக்கு நல்லா சிங்கப்பூர் சுத்தி காட்டுவார், பாரு!
(டென்ஷனோடு உள்ளே போகிறார்)


Saturday, June 25, 2011

உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்க வில்லையா?

முக்கிய முன்டிஸ்கி: வேலைன்னு நான் சொல்றது ஆபீஸ்ல சம்பளம்னு ஒண்ணு கொடுக்கிறாங்களே, அந்த சம்பளத்துக்கு நாம செய்ய வேண்டிய வேலையைத்தான்.

பொதுவாகவே "அப்புறம், உங்க வேலை எப்படி இருக்கு?" என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில், "ச்சே, இந்த பொழைப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்!". ஆனால், உண்மையில் அப்படிதான் நம் வேலையை நினைக்கிறோமா என்றால் இல்லை, பல நேரங்களில் நம் வேலை நம் மனதுக்குப் பிடிக்கத் தான் செய்கிறது.

நான் என் வேலையை ரசிக்கிறேன், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவது என்னுடைய பணிதான். பொய் சொல்லவில்லை, உண்மைதான் இது, ஆனால் எப்படி? அதற்குதான் இந்தப் பதிவு!

பல நேரங்களில் நாம் செய்யும் வேலை நமக்கே எரிச்சல் தருவது, நம்முடைய முதலாளி/மேனேஜர் இவர்கள் கொடுக்கும் டார்ச்சர் காரணமாகத் தானே தவிர, அந்த வேலை பிடிக்காமல் இல்லை.  அதுவும், நாம் ஆர்வமாக ஒரு பணியைச் செய்துவிட்டு மேனேஜரின் பாராட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஸ்பெஷல் திறமையைக் கொண்டு அதில் ஒரு குற்றம் காணும்போது நாம் நிச்சயம் எரிச்சல் அடைவோம்.
அது மட்டுமல்ல, நம் சக அலுவலக ஊழியர்கள் சிலரும் நம்மைக் கிண்டல் செய்து எரிச்சலூட்டி நம்முடைய மூடைக் கெடுப்பதும் உண்டு. பல நேரங்களில் நாம் நம் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் பெறுவது பொறுக்காமல், நம் மேல் பொறாமைப் படும் சக ஊழியர்களும் இருக்கிறார்கள்.

அப்படியானால், நம்முடைய வேலை நமக்குப் பிடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

- தொடரும் 

Monday, June 20, 2011

வாரச் சந்தை - 20.06.2011

தத்துவம் 
எது நடந்ததோ நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ நன்றாகவே நடக்கிறது, எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்...........ஆனா அதுக்கு வாழைப்பழத் தோலை ரோட்டில போடாம குப்பைத் தொட்டில போடணும்.

பொன்மொழி

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

- யாரோ சொன்னது!
(ஆனா, ஓட்டைப்பை இல்லாத சட்டையை கொடுத்து நல்லாவே உதவி செய்யலாம், - இது மட்டும் நான் சொன்னது,ஹிஹி!)
குவிஸ் 
ஒரு முட்டையை ஏழு அடி உயரத்திலிருந்து தரையில் போடணும், ஆனா உடையக் கூடாது, எப்படி?
(அது கஷ்டமே இல்லை, நிச்சயம் உடையாது, தரையைச் சொன்னேன்)
ஜோக்
"அந்த டாக்டர் ஒரு Blogger-னு எப்படி சொல்ற?"
"எனக்கு இருக்கற வியாதியை சொன்னபோது, same blood-னு சொல்லி சிரிக்கிறாரே!"
கவிதை
பந்தயத்தில்
தோற்றது 
முயல் - 
ஆமையால் அல்ல,
முயலாமையால்!

Saturday, June 18, 2011

நெல்லை பதிவர் சந்திப்பு

நேற்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இதுவரை இணையம் மூலம் மட்டுமே சந்தித்து வந்த பலரையும் முன் பின் பழக்கம் இல்லாத சிலரையும் சந்திக்க முடிந்தது.
நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பு மிக அமைதியாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றது.

விரிவான செய்திகளை இம்சை அரசன் பாபுவும், உணவுலகம் சங்கரலிங்கமும் எழுத வாய்ப்பு இருப்பதால், நான் சில துளிகளை மட்டும் எழுதுகிறேன்.

  • பத்து மணிக்கு ஆரம்பிப்பது என்று முடிவு செய்ததால், இந்திய வழக்கப் படி பத்து பத்துக்கே நான் சென்று விட்டேன்; மீட்டிங்கும் சரியாக பதினோரு மணிக்கெல்லாம் முறைப்படி(?) தொடங்கியது.
  • சங்கரலிங்கம் எல்லோரையும் வரவேற்றார், ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.
  • வலையுலகத்துக்கு நன்கு பரிச்சயமான வலைச்சரம் சீனா ஐயா வந்திருந்தார்.
  • விவசாய உலகத்துக்கு நல்ல யோசனைகளை சொல்லி வரும் ஐயா டாக்டர் கந்தசாமி அவர்களும் வந்திருந்தார் 
  • சி.பி. செந்தில்குமாரை காப்பி பேஸ்ட் செந்தில்குமார் என்று கிண்டலோடு வரவேற்றார் சங்கரலிங்கம்.
  • நல்ல விஷயங்களை எடுத்து சொல்ல காப்பி பேஸ்ட் செய்வதில் தப்பில்லை என்று எடுத்துரைத்தார் செந்தில். (என்னுடைய அபிப்ராயமும் அதுதான்)
  • பிரபல பதிவர் தண்டோரா மணிஜி அவர்களும் வந்திருந்தார்.
  • பதிவுலகில் நிலவும் நட்பு வட்டத்தை வைத்து நல்ல முறையில் சமுதாய சேவை செய்யலாம் என்று யோசனை தந்தார் ஐயா சீனா அவர்கள்.
  • பதிவுலகில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் சிலர் தங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்க முயல்கிறார்கள் என்றும் தன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சகோதரி சித்ரா
  • பல விஷயங்களை இழந்துவிட்ட சோகத்தை ப்ளாக் மூலம் ஆற்றிக் கொள்ள முடிகிறது என்று ப்ளாகின் நல்ல பக்கத்தை விளக்கினர், ஜோசபினும் கல்பனாவும்.
மொத்தத்தில் மிக அருமையான சந்திப்பு அது. நான் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பும் அதுதான். இதுபோல் இன்னும் பல பதிவுலக சொந்தங்களை நேரில் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறது, பார்ப்போம், எல்லாம் இறைவன் கருணை!
சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்த சகோதரி கௌசல்யா அன்புத் தம்பி பாபு, அண்ணன் சங்கரலிங்கம் மற்றும் நாஞ்சில் மனோவுக்கும் என் நன்றிகள்! 
டிஸ்கி : நான் என்ன கருத்துகளைக் கூறினேன் என்பதை மற்றவர்கள் ப்ளாகில் எழுதட்டும் என்று விட்டு விட்டேன். (நான் ஒரு தடவை சொன்னா, அதுக்கப்புறம் நானே என் பேச்சை மறந்துவிடுவேன், ஹிஹி) 

டிஸ்கிக்கு டிஸ்கி : ஜோக் என்ற பெயரில் செல்வா என்னவோ சொன்னான், அது பற்றி அவனே சொல்லட்டும்.(என்ன இருந்தாலும், மத்தவங்களை நாம குறை சொல்லக் கூடாதுல்ல!):

Wednesday, June 15, 2011

யப்பாடி..................நாங்களும் ஹீரோ ஆயிட்டோமில்ல?

யார் தருவார் இந்த அரியாசனம்?

நாம  என்ன இட்லிவடை போல நவரசம் ததும்ப கட்டுரை கொடுக்கிறோமா?

இல்ல, வெங்கட் மாதிரி சொந்தமா வாங்கின பல்பு பத்தி எழுதி மத்தவங்களை சந்தோஷப் 'படுத்துறோமா'?

இருந்தாலும், நம்மளையும் மதிச்சு நம்ம ப்ளாக் பக்கம் வர்றாங்களே, அதை நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

என்னுடைய ப்ளாகை follow செய்யும் அந்த இருநூறு பேருக்கும் நன்றி!

டிஸ்கி :  நம்மளை நாமலே முதுகில தட்டிக்கறதில ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்யுது.

எல்லோருக்கும் நன்றி, நன்றி, நன்றி!

Monday, June 13, 2011

ஊழலை ஒழிப்பது எப்படி?இப்போது எங்கு பார்த்தாலும் ஊழல் பற்றித் தான் பேச்சு!
அன்னா ஹசாரே மாதிரி ராம் தேவும் உண்ணா விரதம் நடத்தினார். "எல்லாரும் சொல்றா மாதிரி ஊழலை அவ்வளவு ஈசியா ஒழிக்க முடியாது" அப்படின்னு பிரதமரே சொல்றார், என்ன செய்ய?
அது போகட்டும், ஊழலை ஒழிக்க முடியாது வேணும்னா குறைக்க செய்யலாம் என்று கூட சிலர் சொல்றாங்க, அதாவது நடக்கக் கூடியதா?

"இந்த நாட்டில மட்டுமில்ல, எந்த நாட்டிலேயும் ஊழலை ஒழிக்க முடியாது" என்று வாதம் செய்பவர்களும் இருக்காங்க, இல்லையா? 

சரி, விடுங்க. சுலப முறையில் ஊழலை கண் காணாமல் செய்ய ஒரு வழி இருக்கிறது.

அந்த சுலபமான வழி......

......
...


......


......


......

......

ஊழல்னு எழுதும்போது, பேக் கிரௌண்ட் என்ன கலர்ல இருக்கோ, அந்த கலர்ல எழுதினா ஊழல் கண்ணுக்குத் தெரியவே தெரியாது, உதாரணமா, வெள்ளை கலர் போர்டில வெள்ளை கலர்லயும், கருப்பு போர்டில கருப்பு கலரிலும், பச்சை போர்டில் பச்சை கலரிலும் எழுதணும். சோ, ஊழலை கண் காணாம செய்துடலாம், எப்புடீ?

அதெல்லாம் வேணாம், ஊழலைக் குறைச்சா போதும்னு சொல்றவங்களுக்கு, ஊழலைப் படிப் படியா குறைக்க வழி கீழே:

ஊழல்

ஊழல்

ஊழல்

ஊழல்

ஊழல்

எப்புடீ, படி படியா ஊழலைக் "குறைச்சுட்"ட்டோமில்ல?
ஊழல்  

Wednesday, June 8, 2011

பதிவர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள அனைத்து பதிவர்களுக்கும் வணக்கங்கள்!

நேற்று இரவு நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் பேசினார். "சில நாட்களுக்கு முன், சில பதிவர்கள் கொடைக்கானல் டூர் போனாங்களே, நீங்க ஏன் போகலை?" என்று கேட்டார்.  "எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் போக முடியவில்லை" என்று சொன்னேன்.

"அதுனால என்ன? அடுத்த வாரம் நெல்லையில ஒரு பதிவர் சந்திப்பு இருக்குது, அதுக்காவது போகலாம்னு இருக்கேன்" என்றும் சொன்னேன்.  

"அதெல்லாம் சரி, நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போறதில்லை?" என்று கேட்டேன், அதுக்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்க...................சான்சே இல்லை. இப்படியெல்லாம் வெங்கட்டால் மட்டுமே யோசிக்க முடியும்.

அது என்னன்னு யோசிச்சு சொல்லுங்க, பார்ப்போம். சரியான பதிலை அப்புறம் சொல்றேன்.

டிஸ்கி: யாரால முடியுமோ அவங்க எல்லாரும் வர்ற 17-ந்தேதி காலையில நெல்லையில நடக்க இருக்கிற பதிவர் சந்திப்புக்கு வாங்க, இது ஒரு அரிய வாய்ப்பு (அப்பாடி பதிவோட தலைப்பை ஒட்டி எழுதியாச்சு). அது மட்டுமில்ல, ஒருவரை ஒருவர் அறிய வாய்ப்பும் கூட(நம்ம அறிவுத் திறமையையும் காட்டிட்டோமில்ல......!)

Monday, June 6, 2011

அமெரிக்கா செய்வது சரியா?

அன்று என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். குழந்தைகள் இருந்ததால், பிஸ்கட், பழம் வாங்கிக் கொண்டு சென்றேன். என்னைக் கண்டு "அடடே, வாடா, என்னடா, ரொம்ப நாள் ஆச்சு, பார்த்து?" என்று வாய் நிறைய வரவேற்றான்.

"சும்மா இந்த பக்கம் வந்தேன், அப்படியே உன்னையும் பார்த்து விட்டு வரலாம் என்றுதான்........." என்று சொல்லி பழம், பூ இருந்த பையை அவனிடம் கொடுத்தேன்.  அவனுடைய ஏழு வயது பையனிடம் பிஸ்கட்டைக் கொடுத்தேன்.

கொடுத்தவுடனேயே அவன் என்னைப் பார்த்து, "தேங்க்ஸ் மாமா, ஆனா இந்த ஒரு பாக்கெட் எனக்கு போதாதே!" என்றான். உடனே என் நண்பன் "அவன் அப்படிதாண்டா, உன்னை மாதிரியே ஓப்பன் டைப்" என்று இளித்தான். 

"அடப் பாவி,  நான் என்னிக்குடா பிஸ்கட்டுக்கு பறந்தேன்?" என்று கேட்க நினைத்தேன், ஆனால், போகட்டும் என்று விட்டுவிட்டேன்.  கொஞ்ச நேரம் ஆச்சு, பையன் அப்பாகிட்ட வந்தான், "அப்பா, கிரிக்கெட் பேட் கேட்டிருந்தேனே, என்ன ஆச்சு?" என்றான். என் நண்பன், "கொஞ்ச நாள் போகட்டும் கண்ணு, அப்புறம் வாங்கித் தரேன்" என்று சொல்ல, வந்ததே கோபம், பையனுக்கு,"இப்பவே வாங்கித் தரனும், இல்ல.........."என்று சொன்னபடியே கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டால் அவனை அடித்தான். "இவன் எப்பவுமே இப்படிதான், ரொம்ப கோபம் வந்துடும்"என்று என்னிடம் சொன்னான்.

"என்னடா, இது? பையனைக் கொஞ்சம் கவனிச்சு வளர்க்கனும்டா, இப்படியே விட்டா, ரொம்ப பிடிவாதம் வந்துடும். அப்புறம் வளர்ந்தப்புறம் முரடனா வரப் போறான்டா, பார்த்துக்க! செல்லம் கொஞ்ச வேண்டியதுதான், ஆனா, அப்பப்ப கஷ்டத்தையும் கத்துக் குடுடா" என்று என் நண்பனிடம் சொன்னேன்.

"இதோ பாரு, என் பையனை நான் எப்படி வளர்க்கனும்னு நீ சொல்ல வேண்டியதில்லை, அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம்" என்று கோபமாகவே சொல்லிவிட்டான். "நமக்கு என்ன ஆச்சு"ன்னு நானும் அது பற்றி பிறகு பேசவே இல்லை.

இப்ப சொல்லுங்க, என் நண்பன் செய்வது சரியா?

டிஸ்கி: தலைப்புக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு: என் நண்பன் காலேஜ் நாட்களில் ரொம்பவே இங்கிலீஷ் பேசியதால், அவனை நாங்கள் எல்லோரும் "அமெரிக்கா" என்றுதான் அழைப்போம்.


டிஸ்கிக்கு டிஸ்கி: ஒபாமா, ஒசாமா, இஸ்ரேல் என்று வேறு எதைப் பற்றியாவது இருக்கும் என்று நினைத்து வந்தவர்களுக்கு : "ஐ ஆம் சாரி"

Sunday, June 5, 2011

உங்கள் பெசொவி வலைப்பூவில்.....................

உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக, உங்கள் பெசொவி வலைப்பூவில்.................................

1. அமெரிக்கா செய்வது சரியா?

2. அருளும் சில அபத்தங்களும்

3. உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

விரைவில் எதிர்பாருங்கள்!

டிஸ்கி: இதெல்லாம் ஒரு பதிவான்னு கேக்கக்கூடாது.  கொஞ்சம் முன்னாடியே தெரிய வைக்கலாமேன்னு ஒரு விளம்பரம்தான்........... ஹிஹி!