அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, June 25, 2011

உங்கள் வேலை உங்களுக்குப் பிடிக்க வில்லையா?

முக்கிய முன்டிஸ்கி: வேலைன்னு நான் சொல்றது ஆபீஸ்ல சம்பளம்னு ஒண்ணு கொடுக்கிறாங்களே, அந்த சம்பளத்துக்கு நாம செய்ய வேண்டிய வேலையைத்தான்.

பொதுவாகவே "அப்புறம், உங்க வேலை எப்படி இருக்கு?" என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில், "ச்சே, இந்த பொழைப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்!". ஆனால், உண்மையில் அப்படிதான் நம் வேலையை நினைக்கிறோமா என்றால் இல்லை, பல நேரங்களில் நம் வேலை நம் மனதுக்குப் பிடிக்கத் தான் செய்கிறது.

நான் என் வேலையை ரசிக்கிறேன், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவது என்னுடைய பணிதான். பொய் சொல்லவில்லை, உண்மைதான் இது, ஆனால் எப்படி? அதற்குதான் இந்தப் பதிவு!

பல நேரங்களில் நாம் செய்யும் வேலை நமக்கே எரிச்சல் தருவது, நம்முடைய முதலாளி/மேனேஜர் இவர்கள் கொடுக்கும் டார்ச்சர் காரணமாகத் தானே தவிர, அந்த வேலை பிடிக்காமல் இல்லை.  அதுவும், நாம் ஆர்வமாக ஒரு பணியைச் செய்துவிட்டு மேனேஜரின் பாராட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஸ்பெஷல் திறமையைக் கொண்டு அதில் ஒரு குற்றம் காணும்போது நாம் நிச்சயம் எரிச்சல் அடைவோம்.
அது மட்டுமல்ல, நம் சக அலுவலக ஊழியர்கள் சிலரும் நம்மைக் கிண்டல் செய்து எரிச்சலூட்டி நம்முடைய மூடைக் கெடுப்பதும் உண்டு. பல நேரங்களில் நாம் நம் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் பெறுவது பொறுக்காமல், நம் மேல் பொறாமைப் படும் சக ஊழியர்களும் இருக்கிறார்கள்.

அப்படியானால், நம்முடைய வேலை நமக்குப் பிடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

- தொடரும் 

17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேலை பிடிக்கனும்னா தொடரும்னு போடனுமா?

பெசொவி said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

அதில்லை ராம்ஸ், பதிவு பிடிச்சிருந்தா, தொடரும்னு அர்த்தம்!

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////, "ச்சே, இந்த பொழைப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்!".//////

இது பிரபல பதிவர் ரமேஷ் பண்றதாச்சே?

பெசொவி said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
//
இது பிரபல பதிவர் ரமேஷ் பண்றதாச்சே?

//
அப்படியா, அவரு கோவில் வாசல்ல பிச்சை எடுக்கிறதா ஒரு நியூஸ் வந்துச்சே, அது பொய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நம்ம ரமேசு மாதிரி காலைல இருந்து ஆப்பீஸ்ல தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு எதுவும் டிப்ஸ் இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 1

வேலை பிடிக்கனும்னா தொடரும்னு போடனுமா?//

இல்லை நல்ல பிகர தொடாம தொடரனும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////, "ச்சே, இந்த பொழைப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்!".//////

இது பிரபல பதிவர் ரமேஷ் பண்றதாச்சே?//


சத்திய சோதனை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெசொவி said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//
இது பிரபல பதிவர் ரமேஷ் பண்றதாச்சே?

//
அப்படியா, அவரு கோவில் வாசல்ல பிச்சை எடுக்கிறதா ஒரு நியூஸ் வந்துச்சே, அது பொய்யா?////////

அது பார்ட் டைம் ஜாப்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 1

வேலை பிடிக்கனும்னா தொடரும்னு போடனுமா?//

இல்லை நல்ல பிகர தொடாம தொடரனும்.////////

எதுக்கு? செருப்படி வாங்கவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நம்ம ரமேசு மாதிரி காலைல இருந்து ஆப்பீஸ்ல தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு எதுவும் டிப்ஸ் இல்லியா?//


எல்லோரும் ரமேஷ் அக்கவுண்டுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ நம்ம ரமேசு மாதிரி காலைல இருந்து ஆப்பீஸ்ல தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு எதுவும் டிப்ஸ் இல்லியா?//


எல்லோரும் ரமேஷ் அக்கவுண்டுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பவும்
////////

டீக்கடை அக்கவுண்டுக்கெல்லாம் பணம் அனுப்ப முடியாதுன்னு பேங்குக்காரன் வெரட்டி விட்டுட்டான் மச்சி......!

Mahan.Thamesh said...

என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க தொடரும் ஏன்னு போட்டு இருக்கீங்க
பாஸ் தொடருக நல்ல தகவல்

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

:-) follow ups

Madhavan Srinivasagopalan said...

மொதல்ல.. வேலை எப்படி பெறனும்னு சொல்லுங்க..
அப்புறம் பிடிக்குதா இல்லையானு பாத்துக்கலாம்..

வெங்கட் said...

// நம்முடைய வேலை நமக்குப் பிடிக்க
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? //

இப்படி வெட்டியா நெட்ல உக்காந்து
டைம் வேஸ்ட் பண்ணாம.. வாங்கற
சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை
செய்யணும்..!

cho visiri said...

//////இல்லை நல்ல பிகர தொடாம தொடரனும்.////////

//எதுக்கு? செருப்படி வாங்கவா?//

You had bettter follow the figure withing the premises of a Temple. (There is no question of getting beated with chappel.....Hi..Hi..