அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, June 27, 2011

பார்ஷியல் டேமேஜ் (குட்ஸ் பதிவு)

இது இந்தப் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல..................................தொடர் பதிவு!

இரவு மீட்டிங் முடிந்ததும் வெங்கட் கோபமாக வருகிறார்.

பி.ஏ.: வாங்க சார், மீட்டிங் நல்லா முடிஞ்சுதா?
வெங்கட் : எங்கய்யா நல்லா நடக்க,
அது சரி, நம்ம ஆளுங்களுக்கு போன் போட்டு மீட்டிங்
 பத்தி சொன்னியா இல்லையா?
பி.ஏ.: அதெல்லாம் சொன்னேன், சார்!
வெங்கட் : ஷாலினிய காணோமேப்பா!
பி.ஏ.:சார், முதல் போனே அவங்களுக்குதான் போட்டேன்
சார், அவங்களும் சந்தோஷமா, ஹையா ஜாலி, me the first
அப்படின்னு சொன்னாங்களே?
வெங்கட்: கிழிஞ்சது அவங்களுக்கு me the first-க்கு
அர்த்தமே தெரியாதே, அதான் மீட்டிங் முடிஞ்சதும் வந்திருப்பாங்க.
பி.ஏ.: செல்வா வந்திருப்பானே?
வெங்கட் : (சோகத்துடன்) அதை ஏன்பா கேக்கறே?
வந்த வுடனே மைக்கைப் பிடிச்சுகிட்டு
"யாருய்யா, அது?  என் தலைவருக்கு ஒரு லட்சம் அடி குடுத்தது?" அப்படின்னு கேட்டான், நான் உடனே,
"ஐயோ, செல்வா, அது வேற ஹிட்டு,
இது வேற ஹிட்டு"ன்னேன்.
உடனே, அவன் மறுபடியும், "ஓஹோ, உங்க வீட்டில
கரப்பான்பூச்சி அதிகமா, அதான் ஒரு லட்சம் "ஹிட்" டப்பா
வாங்கியிருக்கீங்களா?" அப்படின்னு கேட்டு சொதப்பிட்டான்.
பி.ஏ.: அட கடவுளே!
வெங்கட்: அது சரி, அருணை   கடத்திட்டு வரச் சொன்னேனே, என்ன ஆச்சு?
பி.ஏ.: சார், நீங்க சொன்ன வுடனே, நம்ம செல்வாவுக்கு போன் போட்டு அதான் செய்யச் சொன்னேன், அதுக்கு அவரு,
 "பைக்கெல்லாம் வேண்டவே வேண்டாம்.  வேற ஐடியா இருக்கு. உடனே அருணுக்கு ஒரு கான்பரன்ஸ் கால் போட்டுடறேன்,
அவர் கான்பரன்சுக்கு வந்துட்டா  அவரால  மீட்டிங் போக
முடியாதே?"ன்னு சொன்னாரு.
வெங்கட்: (தலையில் அடித்துக் கொண்டு) கிழிஞ்சது, அதான்
மீட்டிங் முழுசும்  அருண்  போன்லயே  இருந்தாரா?
அது சரி, ரமேஷ், பி.எஸ்.வி. இவங்களை இங்க
கட்டிப் போட்டுட்டுதான போனேன், அவங்க எப்படி அங்க  வந்தாங்க?"
பி.ஏ.: நான் தான் சார் அவங்களை அனுப்பிட்டேன். ரமேஷ் என்கிட்டே,
"என்னை மட்டும் நீ விடலைனா, எங்க ஆளுங்களுக்கு போன் போட்டு உனக்கு "சுறா" டிவிடி anuppa சொல்லிடுவேன்"னு மிரட்டினாரு, நான் பயந்து போய் அவரை அனுப்பிட்டேன், அது சரி, அவர் ஏன் சார், போகும்போது
என்னை நாலஞ்சு போட்டோ எடுத்துட்டுப் போனாரு?"
வெங்கட்: போட்டோ வேற எடுத்தாரா?
கிழிஞ்சுது, இந்த போட்டோவை வச்சே
நாலு ஆல்பம் போஸ்ட் தேத்திடுவாரே,
எல்லாம் என் நேரம், ஏன்யா, பி.எஸ்.வியை ஏன்யா விட்டுட்டே?"
பி.ஏ.: போங்க சார், நான் இத்தனை நாளா உங்ககிட்ட
வேலை செய்யறேனே,ஒரு நாளாவது  என்னை சின்ன
சேலமாவது கூட்டிகிட்டு  போயிருக்கீங்களா? ஆனா, அவரு
எனக்கு சிங்கப்பூர் சுத்தி காட்டறேன்னு சொல்லியிருக்கார், அதான்,
அவரையும் விட்டுட்டேன்.
வெங்கட்: யோவ், அவர்தானே?
உனக்கு நல்லா சிங்கப்பூர் சுத்தி காட்டுவார், பாரு!
(டென்ஷனோடு உள்ளே போகிறார்)


10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கோமாளி செல்வா said...

எங்க தலைக்கு இதெல்லாம் சாதாரணம் :-)

கோமாளி செல்வா said...

//" என் பிளாக் லட்சம் ஹிட்ஸ் அடிக்க
உதவியாய் இருந்து தங்கள் பொன்னான
ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும்
என் இனிய VKS நண்பர்களே....... /

ஹி ஹி ஹி :-)

Madhavan Srinivasagopalan said...

அல்லாரும் ஒரு மார்கமாத்தான் இருக்கானுக.. !!

வெங்கட் said...

எங்க பசங்க உங்களை கட்டி வெச்சு
அடி பின்னி எடுத்தாங்களே.. அதை
பத்தி ஏன் மூச்சு விடலை..??

அருண் பிரசாத் said...

VKS வாழ்க வாழ்க
PSV வாழ்க வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடி கொடுத்தது யாரு, அடி வாங்குனது யாருன்னே வெளங்கலியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவேள எல்லாத்தையும் வேற எவனோ வந்து பின்னிட்டு போய்ட்டானோ?

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்னய்யா சொல்றீங்க ஒரு மண்ணும் புரியலை இந்த பச்சை மண்ணுக்கு ம்ஹும்....

cheena (சீனா) said...

எனக்கும் புரியல வெங்கட் / பிஎஸ்வி - ஆக டேமேஜ் ஆச்சு - அது மட்டும் புரியுது . சரி சரி - நட்புடன் சீனா

THOPPITHOPPI said...

//யோவ் என்னய்யா சொல்றீங்க ஒரு மண்ணும் புரியலை இந்த பச்சை மண்ணுக்கு ம்ஹும//

HAHAH..........