அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, March 31, 2011

நீதிக் கதை

அந்த மிகப் பெரிய பணக்காரருக்கு கோபமான கோபம். போயும் போயும் தன் ஒரே பெண் அந்த பரம ஏழைப் பையனைக் காதலிக்கிறாளே என்று.
பெண்ணுக்கு பலமுறை புத்தி சொன்னார், அவள் கேட்கவில்லை, கட்டினால் அந்தப் பையனைத் தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டாள்.

தனக்குத் தெரிந்த ஒரு கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆளைக் கூப்பிட்டு அவனைக் காலி செய்யும்படி சொன்னார்.  ஆனால் அவன் அந்த ஆட்களை அடித்து நொறுக்கி விட்டான்.

பொறுக்க முடியாத அவர் தானே அவனை நேரில் சந்தித்து அவனை தன் பெண்ணை மறக்கும்படி கூறினார். அவன் மறுத்தான். கொதித்துப் போன அவர் தன்னுடைய கத்தியால் அவனைக் குத்திவிட்டார். குத்தும்போது அவருடைய கையைக் கத்தி கீறி விட்டது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அவனை மலையிலிருந்து கீழே உருட்டிவிட்டு நிம்மதியாய் வீடு வந்து சேர்ந்தார்.

மலையிலிருந்து விழுந்த அவன் சிலரால் காப்பாற்றப் பட்டு சில நாளில் முழுதும் குணம் அடைந்து விட்டான். காதலியைச் சந்தித்த அவன் அவளுடைய தந்தையின் சதிச் செயலைப் பற்றி சொன்னான். ஆத்திரமடைந்த அவள் போலீசில் புகார் செய்தாள். ஆனால் ஆதாரம்?

சட்டென்று அவனுக்குத் தோன்றியது. தன்னை அவர் கொல்ல முயன்றபோது போட்டிருந்த சட்டையில் இன்னும் ரத்தக் கறை இருந்தது. அது மட்டுமல்லாமல், கத்தி அந்தப் பணக்காரருடைய கையைக் கீறியபோது வந்த அவருடைய ரத்தக் கறையும் அந்த சட்டையில் இருந்தது. எனவே அந்த ரத்தக் கறையில் இருந்த DNA டெஸ்ட் மூலம் அது அவருடைய ரத்தம்தான் என்று நீதிமன்றத்தில் ஊர்ஜிதம் செய்யப் பட்டது.  

நீதிமன்றம் அந்தப் பணக்காரருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கொடுத்தது. மனம் திருந்திய அவர் தன்னுடைய பெண்ணை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.

இந்தக் கதையில் இருந்து தெரியும் நீதி என்ன?

..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..


அந்தப் பணக்காரர்தான் கொலை செய்ய முயற்சி செய்தார் என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க உதவியதால் 

கறை நல்லது 



Tuesday, March 29, 2011

இலங்கை நியூசிலாந்து போட்டி - பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

பஞ்சாங்கப் படி இன்று பகல் பன்னிரண்டு மணி வரை தசமி பிறகு ஏகாதசி. நட்சத்திரம் திருவோணம். செவ்வாய்க் கிழமை. யோகம் சித்த யோகம்.

கிழமைப் படி பார்த்தல் செவ்வாய்க்கிழமைக்கும் சிவப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது.  அதன்படி சிவப்புத் தோல் உள்ள நியூசிலாந்து ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.  அதே சமயம் தசமி என்பது பத்தாம் எண்ணைக் குறிக்கிறது. பத்துத் தலை கொண்ட இராவணனின் நிலமான இலங்கைக்கு சாதகமான நிலை இது. பன்னிரண்டு மணிக்கு மேல் ஏகாதசி வருகிறது. இது பதினொன்றைக் குறிக்கும் என்பதால் பதினோரு பேரைக் கொண்ட இரு அணிக்கும் சம பலன் கிட்டும்.

மேலும், திருவோணம் என்பது நட்சத்திர வரிசையில் இருபத்திரண்டாவதாக வருகிறது. கூட்டினால் நான்கு. இலங்கை என்பது நான்கு எழுத்தில் வருவதால் நட்சத்திரப் படி இலங்கைக்கு வெற்றி கிட்டலாம்.  அதே நேரம் சித்தயோகம் - ஆறு எழுத்து, நியூசிலாந்து - இதுவும் ஆறு எழுத்து. எனவே, யோகம் நியூசிலாந்துக்கே சாதகம்.

இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது, என்ன தோன்றுகிறது என்றால்,

..
..
..
..
..
..
..
..
..
இரண்டில ஏதாவது ஒன்று ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது, அதே நேரம், மேட்ச் டை ஆகவும் வாய்ப்புள்ளது. இதெல்லாம் வேணாம், எந்த டீம் ஜெயிக்கும்னு கரெக்டா சொல்லுண்றீங்களா? 

ஓகே, சொல்லறேன், ஆனா நாளைக்கு இந்த ப்ளாக் பக்கம் வாங்க, சொல்றேன்!

டிஸ்கி : எதுக்குத் தான் பஞ்சாங்கம் பார்க்கறதுன்னு விவஸ்தையே இல்லையா, போங்க, புள்ள குட்டிய படிக்க வைங்கப்பா!

Monday, March 28, 2011

வாரச் சந்தை - 28.03.2011

தத்துவம் 

என்னதான் நமக்கு ரெண்டு காது இருந்தாலும், ரெண்டு தடவை சொல்லித்தான் ஒரு விஷயம் புரியணும்னு இல்லை. அதே மாதிரி ஒரே வாய்தான் இருந்தாலும் பல விஷயங்களை ரெண்டு மூணு தடவை சொல்லித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கு.


பொன்மொழி

ஒரு போட்டியில் நாம் மட்டும் கலந்து கொண்டு பரிசு கிடைத்தால் வரும் சந்தோஷத்தை விட, பலர் பங்கேற்ற போட்டியில் நாம் பரிசு பெற்றால் வரும் சந்தோஷமே மிகப் பெரியது. எனவே, போட்டிக்கு ஆள் இருந்தால் சந்தோஷப் படுங்க!

ஜோக் 

ஒரு ஆள் பஸ்ஸில் ரெண்டு டிக்கெட் எடுத்தார். கூட வந்தவர் கேட்டார், "நீங்க ஒரு ஆளுதான இருக்கீங்க, ஏன் ரெண்டு டிக்கெட் எடுத்தீங்க?"
அவர் சொன்னார், "ஒரு டிக்கெட் தொலைஞ்சுட்டா, இன்னொன்னு ஹெல்ப் பண்ணுமே!"
இவர் கேட்டார், "அந்த இன்னொரு டிக்கெட்டும் தொலைஞ்சுட்டா என்ன பண்ணுவீங்க?"
அவர் பதில் சொன்னார், "நான் யாரு, என்கிட்டதான் மன்த்லி பாஸ் இருக்கே!"
:

குவிஸ் 


பத்தும் மூன்றும் சேர்ந்தால் ஒன்று -  எப்படி?

விடை: 10 AM + 3 Hours = 1 PM
கவிதை

பழையது 
சாப்பிட்டு
கஷ்டப்பட்டு 
வளர்ந்து
நல்ல வேலை 
கிடைத்து
அமெரிக்கா 
சென்றான் 
இப்பவும் பழையதுதான்
ஃபிரிட்ஜில் வைத்து!

Monday, March 21, 2011

வாரச் சந்தை - 21.03.2011

தத்துவம்

ஒரு ஆண் அரிச்சந்திரனா இருக்கறது அவன் மனைவி கையில்தான் இருக்கு.......................புருஷனை கேள்வி கேக்காம இருந்தா போதும்!
  
பொன்மொழி


உங்களைப் பற்றி பிறர் விமரிசனம் செய்யும்போது, அது உண்மை என்றால் நீங்கள் வருந்துவது தவறு. அது பொய் என்றால் வருந்துவதில் பொருள் இல்லை, ஏனென்றால் அது உங்களைப் பற்றி இல்லை.  எனவே உங்களைப் பற்றிய விமரிசனத்தைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள், உங்கள் வழியில் போங்கள்!


குவிஸ் 
ஒரு நோஞ்சான் குத்துசண்டைப் போட்டிக்குப் போவதற்கும், ஒரு பலசாலி மனைவியிடம் வாக்குவாதம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

போட்டியில் ஜெயிக்க நோஞ்சானுக்கு வாய்ப்பிருக்கிறது.

ஜோக்

இரு ராணுவ வீரர்கள் பேசிக் கொண்டார்கள்:
"நீ ஏன் ராணுவத்தில சேர்ந்தே?"
"எனக்கு கல்யாணம் ஆகலை, சண்டைல விருப்பம் இருந்தது, அதான்! நீ ஏன் இங்க வந்தே?"
"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அமைதில விருப்பம் இருந்தது, அதான்!"


கவிதை

தான் மட்டும்
சிரிக்காமல் 
ஏழையையும்  
சிரிக்க வைக்கிறார்
காந்தி - 
தேர்தல் நேரத்தில்
மட்டும்.
பின்னர் 
ஐந்து வருடமும்
தான் மட்டும்
சிரிக்கிறார்
வாழ்க
ஜனநாயகம்.
என்று!

Friday, March 18, 2011

பயனுள்ள போஸ்ட்

என் பிரெண்ட் ஒருத்தன் என்னைப் பார்த்துக் கேட்டான். "என்னங்கடா ப்ளாக் வச்சிருக்கீங்க? எவனாவது உருப்படியா ஏதாவது எழுதறீங்களா? ஒண்ணு  உங்களுக்குள்ளேயே அடிச்சுக்கறீங்க, இல்லைனா வெளிய இருக்கற எவனையாவது 
இழுத்து வச்சு அடிக்கறீங்க!"

நான் சொன்னேன், "அதெல்லாம் இல்லைப்பா, நானும் உருப்படியா பதிவுலாம் போடறேன். பேசுவது எப்படின்னு இதுவரைக்கும் நாலஞ்சு போஸ்ட் போட்டிருக்கேன், தெரியுமா?"

"இதெல்லாம் போங்கு. மக்களுக்கு பயனுள்ள, நாலு பேருக்கு சாப்பாடு போடற, படிச்சாலே "டக்"னு பிடிச்சுக்கற மாதிரி நல்ல போஸ்ட் போடணும், அதுக்குதான் ப்ளாக் இருக்கு, புரியுதா?" என்று கேட்டு என்னை உசுப்பி விட்டுவிட்டான்.

அதுக்குதான் இந்த போஸ்ட். நிச்சயமா மக்களுக்குப் பயனுள்ள போஸ்ட் இது;நாலு பேருக்கு இல்ல, நாலு லட்சத்துக்கும் மேல மக்களுக்கு சாப்பாடு போடற போஸ்ட்; அப்படிப்பட்ட போஸ்ட் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.  அப்படி என்ன போஸ்ட்னு கேக்கறீங்களா?
..
.
..
..
..
..
..
..
.
..
..
..
..
..
..


ஆமா, இது எலக்ட்ரிக் போஸ்ட் தான். (பவர் கட் நேரம் போக) மக்களுக்கு பயனுள்ள போஸ்ட், மின்வாரிய ஊழியர்களுக்கு சாப்பாடு போடற போஸ்ட். அது மட்டுமில்ல, கேட்டவுடனேயே "ஷாக்" அடிச்சா மாதிரி "டக்"னு பிடிச்சுக்கற போஸ்ட் தான இது?

டிஸ்கி : ங்கொய்யால, இனிமே எவனாவது பயனுள்ள போஸ்ட், அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணுவீங்க?

Monday, March 14, 2011

வாரச் சந்தை - 14-03-2011

தத்துவம்

ஒரு கடிகாரத்தை எவ்வளவுதான் பெரிசா தயாரிச்சாலும், மணி காட்டும் முள்ளை "சின்ன" முள்னுதான் சொல்ல முடியும். அதே மாதிரி எவ்வளவு சின்ன கடிகாரமா இருந்தாலும், நிமிஷம் காட்டுற முள் "பெரிய" முள்தான்.

(ரெண்டாவதா சொன்னதை தனி தத்துவமா போட்டிருக்கலாம், வட போச்சோ?)


பொன்மொழி

மற்றவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டுவது நல்லது, அவர்களுக்கு! ஏனென்றால், நாளை நீங்கள் அதே தவறைச் செய்யும்போது உங்களைக் குறை சொல்ல உரிமை கிடைக்கிறது.


(நான் அப்படி நிறைய பேருக்கு உரிமை கொடுத்திருக்கிறேன்)


ஜோக்

மூன்று பேர் இறந்ததும் நரகத்துக்கு சென்றார்கள். அங்கே நரகத்தின் தலைவன் சொன்னான், "இங்க நிறைய கோழிங்க இருக்கு, அதை மிதிக்காம இருக்கணும், மீறினா தண்டனை உண்டு"னு மிரட்டி வச்சிருந்தான். அதுனால மூணு பெரும் ஜாக்கிரதையா இருந்தாங்க.
ஆனா அடுத்த நாளே, முதல் ஆள் ஒரு கோழிய மிதிசிட்டான். கடுப்பான தலைவன், ஒரு அசிங்கமான பெண்ணை கூட்டிட்டு வந்து அவனோட சேர்த்து சங்கிலியால கட்டிப் போட்டுட்டான்.
அடுத்த நாள், ரெண்டாவது ஆளும் தெரியாம கோழிய மிதிச்சிட்டான். இப்பவும் தலைவன் வந்து வேற ஒரு அசிங்கமான பொண்ணை அவனோட சேர்த்து சங்கிலியால கட்டிப் போட்டுட்டான்.
மூணாவது ஆள் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தான். கிட்டத்தட்ட ஒரு வாரம் எந்தக் கோழியையும் அவன் மிதிக்கலை. ஆனாலும் தலைவன் வந்து அவனை ஒரு பொண்ணோட சங்கிலியால கட்டிப் போட்டுட்டான். ஆனா, அந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்தா. இவன் கேட்டான், "நான் எந்தக் கோழியையும் மிதிக்காததால இப்படி ஒரு அழகான பொண்ணோட சேர்த்து என்னைக் கட்டிபோட்டீங்களா?" அதுக்கு நரகத்தின் தலைவன் சொன்னான்,
 "அதெல்லாம் இல்லை, அந்தப் பொண்ணு ஒரு கோழிய மிதிச்சிடுச்சு!"

(அப்ப எனக்கு நிச்சயம் நரகத்துல அழகான பெண் உறுதி)


குவிஸ்  

அன்புக்கும் வம்புக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டா அது அன்பு.
அது அவளோட அண்ணனுக்குத் தெரிஞ்சுட்டா வம்பு.


(சொந்த அனுபவம் எல்லாம் இல்லீங்கோ!)


கவிதை 

நீ காதலித்தால்
அவளும் காதலிக்க
காதல் ஒன்றும்
பண்டமாற்று இல்லை,
ஆனால்
காதலியே பண்டமாற்றுதான்,
அவள் இல்லையென்றால்
இவள்!
கெளப்புடா ராசா,
 என்சாய்!

(இது சிரிக்க மட்டுமே, கடைப்பிடிக்க இல்லை)

Monday, March 7, 2011

வாரச் சந்தை - 07.03.2011

முன்டிஸ்கி: நாளை மகளிர் தினம்

ஒரு தத்துவம்:

கடவுள் ஏழைக்குக் கெடுத்துப் பின் கொடுக்கிறார்; பணக்காரனுக்கு கொடுத்துப் பின் கெடுக்கிறார்.

ஒரு பொன்மொழி

ஒரு பெண்ணை ஒரு ஆண் புரிந்து கொள்வது கஷ்டம், ஒரு பெண் புரிந்துகொள்வது அதைவிட கஷ்டம்.
ஒரு ஜோக்:

டாக்டர் பேஷன்ட்டிடம்: உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு.

பேஷன்ட் : நல்ல செய்தி என்ன?

டாக்டர் : லேப் லேர்ந்து டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு, உங்களுக்கு இருபத்து நாலு மணி நேரம்தான் கெடு கொடுத்திருக்காங்க.

பேஷன்ட் : ஓ, காட்! அப்ப கெட்ட செய்தி?

டாக்டர் : ரிசல்ட் நேத்து வந்துச்சு!
 
ஒரு குவிஸ்

ஒரு பெண்மணியோட கண்ணில தூசி படறதுக்கும், ஒரு அழகிய புடவை படறதுக்கும் என்ன வித்தியாசம்?

தூசி பட்டா, அவங்க கண்ணில தண்ணி வரும், புடவை பட்டா, அவங்க புருஷன் கண்ணில தண்ணி வரும்.

ஒரு கவிதை

நாளைய செய்திகள்:
"பெண் சிசுக் கொலை"
"சிறுமி கற்பழிப்பு"
"7 பேரை ஏமாற்றிய கயவன்"
"புது மணப்பெண் எரித்துக் கொலை"
செய்திகளுக்கு மத்தியில்
ஒரு பக்கம்
"மகளிர் தின வாழ்த்துகள்"

Thursday, March 3, 2011

ஒரு துப்பறியும் கதை

அந்த ஊரின் மிகப் பெரிய பணக்காரர் இறந்துவிட்டார். ஆனால், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. துப்பறியும் புலி செல்வா அந்த இடத்தில ஆஜர்.

"இவருக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?", "நீங்கள் யாரையாவது சந்தேகப் படுகிறீர்களா?","உங்கள் சந்தேகம் என்ன?" போன்ற பல கேள்விகளுக்கு உறவினர்களின் பதில் "தெரியாது","இல்லை", "எனக்குத் தெரிந்து இல்லை" போன்ற பதில்களே.

சோர்ந்து போன செல்வாவுக்கு புத்துணர்வு கொடுத்தது அந்த தகவல். இறந்தவர் ஒரு மாதத்துக்கு முன் தன குடும்ப டாக்டரைப் பார்த்திருக்கிறார். ஆனால் அன்று முதல் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார்.
*******
தகவல் கிடைத்ததும் குடும்ப டாக்டரைச் சந்தித்தார், செல்வா. "நான் ஒன்னும் பெரிய ரகசியத்தை அவருக்கு சொல்லலையே!", மோவாயைத் தடவிய படி டாக்டர் மேலும் சொன்னது, "சார், அவர் உடல் நிலை நல்லாத்தான் இருந்தது, கொழுப்பு, சர்க்கரை பி.பி. எதுவும் கிடையாது. ஆனா, அவருக்கு உப்பு வியாதி இருந்தது, எக்காரணம் கொண்டும் உப்பு போட்டு சாப்பிடக் கூடாது, அது மட்டுமில்லை, கொஞ்சம் உப்பு சாப்பிட்டு வந்தாக் கூட ஒரே மாசத்துல இறந்துடுவார்னு அவர் கிட்ட எச்சரிச்சிருந்தேன்"

"அப்போ, அவருக்கு சாப்பாட்டுல கொஞ்சம் கொஞ்சமா உப்பு சேர்த்துப் போட்டிருந்தா, ஒரே மாசத்தில் அவர் இறந்திருக்கக் கூடுமா?" கேட்ட செல்வாவுக்கு ஒரு "எஸ்" சொன்னார் சோகமாய்.
********
பிடி கிடைத்த சந்தோஷத்தில் அந்த வீட்டு சமையல்காரனை விசாரித்தார். "ஐயோ, எஜமானை நான் போய் கொல்லுவேனா? அவர் உப்பை சாப்பிட்டு நான் வளர்ந்திருக்கேன் சார், இன்னும் சொல்லப் போனா, டாக்டர் சொன்ன விஷயத்தை என்கிட்டே சொல்லி, தானே கேட்டாலும் உப்பு போடக் கூடாதுன்னு என்கிட்டே சத்தியம் வேற வாங்கி வச்சிருந்தார், தெரியுமா?" என்றபடியே பிலாக்கணம் பாட ஆரம்பித்தான் அவன்.
*******
நொந்தபடியே வீட்டில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்த செல்வாவை ஒரு இடி இடித்தாள்   அவர் மனைவி. "என்னங்க இது, காலையிலிருந்து பல்லு கூட விளக்காம அப்படி என்ன யோசனை? அந்தப் பணக்காரர் எப்படி செத்தா என்ன? செத்தவர் செத்துட்டார், விடுவீங்களா?" கேட்டுக் கொண்டிருந்த மனைவியையே பார்த்தார் அவர். திடீரென அவருக்கு ஒரு யோசனை, "கரெக்ட், அதுதான் சரி" என்றபடியே அந்த பணக்காரரின் வீட்டுக்குப் போனார் செல்வா.
*******
"அந்த பணக்காரர் எப்படி செத்தாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்." என்றார் செல்வா. "அப்படியா? யாரு கொலை பண்ணினாங்க?" ஆர்வமாய்க் கேட்ட மனைவியிடம், "யாரும் கொலை பண்ணலை, அவர் இயற்கையாத் தான் செத்தார்." 
"அதுதான் எப்படி?" கேட்ட மனைவிக்கு செல்வாவின் பதில்,
"அவர் டூத் பேஸ்ட்ல உப்பு இருந்துச்சு!"

டிஸ்கி: இந்த கதைல வர்ற செல்வாவும் அந்த செல்வாவும் ஒன்னுதானான்னு என்னைக் கேக்க கூடாது.