அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, July 31, 2011

வாரச் சந்தை - 02.08.2011

முன் டிஸ்கி : பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடங்கிய காரணமாக வாரச் சந்தை ஒரு நாள் டிலே # ஏதோ ஒரு சாக்கு

தத்துவம் 

என்னதான் ஆடு "மே", "மே"ன்னு கத்தினாலும் அதுக்கு எல்லா இங்கிலீஷ் மாசமும் தெரியும்னு நாம நினைக்க முடியாது.

பொன்மொழி 

எனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது
- தத்துவ ஞானி சாக்ரடீஸ் 

கேள்வி

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரக் கூடிய ஆனால் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை வரக்கூடிய ஒன்று, அது எது?
(What comes once a year but twice a week?)

விடை:  "." ஆமாங்க, புள்ளிதான் விடை. பாருங்க "வருடம்"னு எழுதும்போது ஒரு புள்ளி வைக்கிறோம் ("ம"வுக்கு மேல).  ஆனா "ஒவ்வொரு வாரம்"னு எழுதும்போது ரெண்டு புள்ளி வைக்கிறோம் ("வ"வுக்கும், "ம"வுக்கும் மேல).
அதுனால புள்ளி தான் வருடத்திற்கு ஒரு முறையும், ஒவ்வொரு வாரமும் ரெண்டு முறையும் வரும்.

((இப்ப எனக்கு புள்ளி வச்சுடாதீங்க, மீ பாவம்!)

ஜோக்  & கவிதை (டூ இன் ஒன்)


பெண்ணின் சேலையை
இழுத்தவனை
அடித்துப் புரட்டி
விரட்டிவிட்டு
அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்
பெண்ணும் ஆடினாள்
"டூ பீஸ்" உடையில்.


Saturday, July 30, 2011

ஒரு ப்ளாக்கரின் (எதிர்) பீலிங்!


முன் முன் டிஸ்கி: இந்தப் பதிவைப் படிக்காமல் இந்தப் பதிவைப் படிக்காதீங்க!
முன் டிஸ்கி: இது கவிதை அல்ல..............................................................................................................................................................எதிர் கவிதை, ஹிஹி!


அந்தந்த கால 
நடப்புகள் தெரிய
சினிமா பார்த்தேன்

கிரிக்கெட் கமெண்டரி
கேட்டுக் கேட்டே
ஹிந்தி கற்றுக் கொண்டேன்

பொழுதை இனிதாய்
போக்குவதற்கே
Twitter Facebook-களை
பயன்படுதினேன்  

நட்பை follow
செயயவே
நண்பர்களின்
"பஸ்"ஸை
follow
செய்தேன் 

குரல் வளத்தை
பாழ்படுத்தாத
"சாட்டிங்"
குறைவில்லாமல்
பயன்படுத்தினேன்

இன்னும் தொங்கிக்கிடப்பது
அதை படித்தால்தான்
பிழைக்க முடியும்
என்றால்,
இப்போதே இறந்துவிடுகிறேன்

கவி முதுவரசு பெசொவி 
ஷி....ஷி....ஷி!

பின் டிஸ்கி : இது என் இருநூறாவது பதிவு!

Monday, July 25, 2011

வாரச் சந்தை - 25.07.2011

தத்துவம் 

ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு  இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் 

கேள்வி

பூரிக்கும் சப்பாத்திக்கும் என்ன வித்தியாசம்?

பூரிங்கற பேருல ஒரு ஊரு இருக்கு, சப்பாத்தி பேர்ல ஊரே கிடையாது! அது மட்டுமில்லை பூரி(நரோத்தம் பூரி, அம்ரீஷ் பூரி) சப்பாத்தி சாப்பிடலாம், சப்பாத்தி பூரியை சாப்பிட்டதா இதுவரை தகவல் இல்லை. 

பொன்மொழி

கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான்.   ௦ - மகாத்மா காந்தி 

ஜோக்

ஒருவர்:  நானே சமைச்சு, நானே துணி துவைச்சு, ரொம்ப நொந்துட்டேன் அதுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்

மற்றவர் : கிழிஞ்சுது போ, நான் அதுக்காகத் தான் டைவோர்ஸ் பண்ணிட்டேன்.


கவிதை 

சந்தைக்கு வந்தான்
வில்லன்
சட்டி பானை எல்லாம்
சேதம் -
வில்லனால் அல்ல
அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்!


Thursday, July 21, 2011

இண்டர்வியூ மாட்டிபிகேஷன்

 வெங்கட் இன்டர்வியூவுல சமாளிக்கிறது எப்படின்னு சொல்லியிருக்காரு இதைப் படிச்சுட்டு யாராவது நீங்க நடத்தற இண்டர்வியூவுக்கு வந்துட்டா அவங்களை எப்படி சமாளிக்கிறது? 

அது Very Simple..

If they can pressurise you,
you can terrorise them!
அதாவது எப்படியாவது அவங்களை "தெரியாது"ன்னு சொல்ல வச்சிடணும், இப்படி!

Question No.1 :

நீங்க: " அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

அவரு :" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

இப்ப நீங்க : அதெல்லாம் இல்லை, குள்ளமா சிவப்பு கலர்ல வெள்ளை வாலோட கண்ணுக்குக் கீழே பழுப்பு மச்சம் இருந்துச்சே,அந்த குதிரை பேர் என்ன?

Question No.2 : 
நீங்க: " பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அவரு : அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

இப்ப நீங்க: sorry, clockwiseனு சொன்னது பெர்னாண்டோ ஆல்ப்ஸ், anti-
clockwiseசொன்னது யாரு, அதான் கேள்வி!

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அறிவுடை நம்பி கலியபெருமாள்..! "

இப்ப நீங்க: அவரு தமிழ்நாட்டுல வளர்ந்தவரு, கர்நாடகாவுல பொறந்தாரு, நான் கேட்டது தமிழ்நாட்டுல பொறந்த சுதந்திர போராட்ட வீரர் பேரைத்தான்!

Question No 4 :

நீங்க :" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

அவரு : " நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

இப்ப நீங்க : நாளைக்கு யாரு, அதான் கேள்வி!

இதெல்லாம் பத்தலைனா, இருக்கவே இருக்கு, ஒரு அதிரடி கேள்வி இப்படி -

இப்ப சமீபத்துல நடந்த மும்பை வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துல ஈடுபட்ட தீவிரவாதிகள் பேரு என்ன?
"தெரியாதுன்னு சொன்னா, வேலை காலி, 
தெரியும்னு சொன்னா, ஆளே காலி (அரெஸ்ட் தான்!)


Monday, July 18, 2011

வாரச் சந்தை - 18.07.2011

தத்துவம்
என்னதான் Night Lamp-னு பேர் வச்சாலும் பகல்ல போட்டா balbu எரியத் தான் செய்யும். அதே சமயம் கரண்ட் இல்லைனா ராத்திரியில கூட எரியாம இருக்கும். 

பொன்மொழி

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற- எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.  - விவேகனந்தர் 
 
கேள்வி
 
இந்த உலகத்தில பல பேர் எந்த கேள்வி கேட்டாலும் முட்டாள்தனமா "இல்ல"னே பதில் சொல்றாங்க. இப்ப நீங்க 
சொல்லுங்க, நீங்க அந்த மாதிரி ஆளா?  

ஜோக் 

ஒரு கடையில் ஒரு சிறுவன் வேலை பார்த்து வந்தான். கடைக்காரரை சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடம் சொன்னார், "இந்த பையனைப் போல ஒரு முட்டாளைப் பார்க்க முடியாது" என்றார். எப்படி என்று நண்பர் கேட்க, அவர் பையனைக் கூப்பிட்டு "தம்பி இந்தக் கையில ஒரு ரூபாய் இருக்கு, அந்தக் கையில அம்பது காசு இருக்கு, எது வேணும்?" என்று கேட்டார்,பையன் "அம்பது காசு வேணும்" என்று சொல்லி அந்த காசை வாங்கிக் கொண்டான். 
கடைக்காரர் சிரித்துக் கொண்டே, தன் நண்பரிடம்,"இப்படிதான் நானும் கடையில இவனை சேர்த்த நாளிலிருந்தே இப்படிதான் செய்யறேன், ஒரு தரம் கூட அவன் ஒரு ரூபாய் வேணும்னு கேட்கவே இல்லை" என்றார்.
பிறகு ஒரு சமயம் அந்த சிறுவனை சந்தித்த அந்த நண்பர், "ஏன் தம்பி அம்பது காசை விட ஒரு ரூபாய் பெரிசு என்று உனக்கு தெரியாதா?" என்று கேட்டார்.
பையன் சொன்னான், "அது தெரியும், ஆனா என்னிக்கு நான் ஒரு ரூபாயை வாங்கிக்கறேனோ, அன்னிக்கே என்  வருமானம் போயிடுமே!"      

கவிதை 

முக்கியத்துவம் 

நடிகை விவாகரத்து -
எட்டு பத்தி
தலைப்பு செய்திக்கு
அருகில்
சிறிதாய்
ஓரிரு வரிகளில்
"வறுமையில் 
விவசாயி தற்கொலை" 

Monday, July 11, 2011

வாரச் சந்தை - 11.07.2011

தத்துவம்
நீங்களே வேணாம்னாலும், விதி உங்ககிட்ட விளையாடத் தான் செய்யும் - நேத்து நான் போன பஸ்ல "சுறா" படம் போட்டா மாதிரி!

பொன்மொழி 
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர, தம்மை ஒருபோதும் மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை - லியோ டால்ஸ்டாய் ரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள
ஜோக்

ஜான் டாக்டரிடம் வந்து "டாக்டர், என் மனைவிக்கு சரியாவே காது கேக்க மாட்டேங்குது, எதையும் ரெண்டு தடவை கேட்டாதான், பதில் சொல்றா"

டாக்டர் ,"முதல்ல ஒரு பதினஞ்சு அடி தூரத்துலேர்ந்து கேளுங்க, அப்புறம் ஒரு பத்து அடி தள்ளி நின்னுகிட்டு கேளுங்க, அப்புறம் அஞ்சு அடி, அப்புறம் ஒரு அடி தள்ளி நின்னு கேளுங்க, அப்புறம் என்கிட்டே வந்து சொல்லுங்க, அப்போதான் ட்ரீட்மென்ட் பத்தி யோசிக்க முடியும்" என்று சொன்னார்.

வீட்டுக்கு வந்த ஜான் பதினஞ்சு அடி தள்ளி நின்றுகொண்டு  "டிபன் என்ன செய்யப் போறே?" என்றான். பதில் இல்லை, பாத்து அடி தள்ளி நின்றுகொண்டு  ."டிபன் என்ன செய்யப் போறே?" என்றான். பதில் இல்லை, அஞ்சு அடி கிட்ட வந்து "டிபன் என்ன செய்யப் போறே?" என்றான் பதில் இல்லை, ஒரு அடி தூரத்தில் நின்றுகொண்டு "டிபன் என்ன செய்யப் போறே?" என்று இரைந்து கேட்டான்.

மனைவி சொன்னாள், "நாலாவது தடவையா சொல்றேன், சப்பாத்தி செய்யப் போறேன்".நி


கேள்வி

அப்படி ஒன்னு இருந்ததே இல்லை, யாரும் பார்த்ததும் இல்லை, இருந்தாலும் நிச்சயம் இருக்கு. அது என்ன?

Answer: நாளை (Tomorrow)
(பதிலே அதுதான்பா!)

கவிதை 
என் மூளையின்
ஒவ்வொரு செல்லிலும் 
நிறைந்துவிட்டாய்
நீ
இல்லாத நாளை
நினைத்துக் கூடப் 
பார்க்க முடியவில்லை
என் உயிர் நீ,
என் இயக்கம் நீ
என் எல்லாமும் நீ
என் இனிய
இண்டர்நெட்டே!

Monday, July 4, 2011

வாரச் சந்தை - 04.07.2011

தத்துவம்
வாழ்க்கையில் விழுவதும் எழுவதும் சகஜம்.. எங்காவது நீங்கள் சறுக்கி விழுந்து விட்டால் பயப்பட வேண்டாம்; எழுங்கள், தூசியைத் தட்டிவிட்டு தைரியமாக நிமிர்ந்து நில்லுங்கள், நின்று சொல்லுங்கள் ................................................................................................................................................... "நல்ல வேளை, யாரும் பார்க்கலை"

பொன்மொழி

"முதலில் உங்களை அவர்கள் உதாசினப்படுத்துவர், பிறகு உங்களைக் கண்டு அவர்கள் எள்ளி நகையாடுவர், பிறகு உங்களுக்கு எதிராக சண்டையிடுவர், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்"                            - மகாத்மா காந்தி 

குவிஸ்

ஒரு செய்தியை எளிதில் உலகம் முழுதுவதும் பரவச் செய்வது எப்படி?

ஏதாவது ஒரு பெண்ணிடம் அந்தச் செய்தியைச் சொல்லி "இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது" என்று சொல்லிவிட்டால் போதும்.

கவிதை

என்னுடையது
உன்னுடையது
என்ற 
சண்டையே எதற்கு
நானே
உனது
என்னும்போது
ஆதலால்
கண்ணே
..
..
..
..
..
..
..
..
..
..
..
என் செல்லுக்கும்
நீயே 
ரீசார்ஜ்
செய்துவிடு!


ஜோக் 
நடு இரவில் மனைவி கணவனை எழுப்பி,"என்னங்க, யாரோ நம்ம கிச்சன்ல நுழைஞ்சுட்டாங்கன்னு நினைக்கிறேன், அங்க நான் சமைச்சு வச்சதை எடுத்து சாப்பிடற சத்தம் கேக்குது"
கணவன் கேட்டான், "இப்ப நான் யாருக்கு போன் போடறது, போலீசுக்கா, இல்லை ஆம்புலன்சுக்கா?"