அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, July 25, 2011

வாரச் சந்தை - 25.07.2011

தத்துவம் 

ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு  இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் 

கேள்வி

பூரிக்கும் சப்பாத்திக்கும் என்ன வித்தியாசம்?

பூரிங்கற பேருல ஒரு ஊரு இருக்கு, சப்பாத்தி பேர்ல ஊரே கிடையாது! அது மட்டுமில்லை பூரி(நரோத்தம் பூரி, அம்ரீஷ் பூரி) சப்பாத்தி சாப்பிடலாம், சப்பாத்தி பூரியை சாப்பிட்டதா இதுவரை தகவல் இல்லை. 

பொன்மொழி

கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான்.   ௦ - மகாத்மா காந்தி 

ஜோக்

ஒருவர்:  நானே சமைச்சு, நானே துணி துவைச்சு, ரொம்ப நொந்துட்டேன் அதுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்

மற்றவர் : கிழிஞ்சுது போ, நான் அதுக்காகத் தான் டைவோர்ஸ் பண்ணிட்டேன்.


கவிதை 

சந்தைக்கு வந்தான்
வில்லன்
சட்டி பானை எல்லாம்
சேதம் -
வில்லனால் அல்ல
அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்!


13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

//கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். //

கண்ணுக்கு 'கால்'னு மாத்திடலாமா ?

Madhavan Srinivasagopalan said...

// அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்! //

ஹீரோ ஒழிக.. (போதுமா ?)

kggouthaman said...

// எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். //

கண்ணுக்கு 'கால்'னு மாத்திடலாமா //

அப்போ அலைய முடியாது! :))

வழக்கமான திங்கள் சந்தை; சுவையான பதிவு.

சேட்டைக்காரன் said...

// பூரிங்கற பேருல ஒரு ஊரு இருக்கு, சப்பாத்தி பேர்ல ஊரே கிடையாது! அது மட்டுமில்லை பூரி(நரோத்தம் பூரி, அம்ரீஷ் பூரி) சப்பாத்தி சாப்பிடலாம், சப்பாத்தி பூரியை சாப்பிட்டதா இதுவரை தகவல் இல்லை.//

சூப்பருங்கோ! ))))))))

அருண் பிரசாத் said...

//ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் //

ஸ்சப்பா.... முடியல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போ உங்களுக்கு சப்பாத்தி வேணுமா, பூரி வேணுமா?

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

எஸ்.கே said...

ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் ///

மொய்யெல்லாம் வைப்பீங்களா?:-)

எஸ்.கே said...

//
கண்ணுக்குக் கண் என்று பழி வாங்க ஆரம்பித்தால் எல்லோரும் குருடாக அலைய வேண்டியதுதான். ௦ - மகாத்மா காந்தி //

இதையெல்லாம் பார்த்தா தமிழ்படம் ஏன் இந்தியாவில படமே எடுக்க முடியாது!:-)

எஸ்.கே said...

சந்தைக்கு வந்தான்
வில்லன்
சட்டி பானை எல்லாம்
சேதம் -
வில்லனால் அல்ல
அவனோடு
ஹீரோ போட்ட
சண்டையால்!//

இதுக்குதான் வாய்ச்சண்டையோட நிறுத்திக்கனும்கிறது!

Rathnavel said...

அருமை.

வெங்கட் said...

// ஆயிரம்தான் காசு பணம் இருந்தாலும்..............................இன்னும் ஒன்னு இருந்தாதான் ஆயிரத்தோரு ரூபாய் மொய் வைக்க முடியும் //

ஏன் ஐநூத்தி ஒண்ணு வெக்கலாமே..!

கையில ஒரு ரூபா இல்லாததால
499 ரூபா இப்ப மிச்சம்..!

cho visiri said...

சப்பாத்தி et al.....

A slightly altered term," Chowpati" (pronounced as Chappathi) is a famous place at Bombay (Mumbai).... and most of the northern cities have an area as Chowpati.... Thi, I think is a a solace to the Chappati.

As for Poori eating Chappati, there are two things...

(i) At the said Chowpati, Bhel Poori and PaaNi Poori are available for the taking.

II) How about a Sabapathi ( (mis)pronounced by North Indians generally as Sappati or Chappati..... ??!!