அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, July 18, 2011

வாரச் சந்தை - 18.07.2011

தத்துவம்
என்னதான் Night Lamp-னு பேர் வச்சாலும் பகல்ல போட்டா balbu எரியத் தான் செய்யும். அதே சமயம் கரண்ட் இல்லைனா ராத்திரியில கூட எரியாம இருக்கும். 

பொன்மொழி

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற- எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.  - விவேகனந்தர் 
 
கேள்வி
 
இந்த உலகத்தில பல பேர் எந்த கேள்வி கேட்டாலும் முட்டாள்தனமா "இல்ல"னே பதில் சொல்றாங்க. இப்ப நீங்க 
சொல்லுங்க, நீங்க அந்த மாதிரி ஆளா?  

ஜோக் 

ஒரு கடையில் ஒரு சிறுவன் வேலை பார்த்து வந்தான். கடைக்காரரை சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடம் சொன்னார், "இந்த பையனைப் போல ஒரு முட்டாளைப் பார்க்க முடியாது" என்றார். எப்படி என்று நண்பர் கேட்க, அவர் பையனைக் கூப்பிட்டு "தம்பி இந்தக் கையில ஒரு ரூபாய் இருக்கு, அந்தக் கையில அம்பது காசு இருக்கு, எது வேணும்?" என்று கேட்டார்,பையன் "அம்பது காசு வேணும்" என்று சொல்லி அந்த காசை வாங்கிக் கொண்டான். 
கடைக்காரர் சிரித்துக் கொண்டே, தன் நண்பரிடம்,"இப்படிதான் நானும் கடையில இவனை சேர்த்த நாளிலிருந்தே இப்படிதான் செய்யறேன், ஒரு தரம் கூட அவன் ஒரு ரூபாய் வேணும்னு கேட்கவே இல்லை" என்றார்.
பிறகு ஒரு சமயம் அந்த சிறுவனை சந்தித்த அந்த நண்பர், "ஏன் தம்பி அம்பது காசை விட ஒரு ரூபாய் பெரிசு என்று உனக்கு தெரியாதா?" என்று கேட்டார்.
பையன் சொன்னான், "அது தெரியும், ஆனா என்னிக்கு நான் ஒரு ரூபாயை வாங்கிக்கறேனோ, அன்னிக்கே என்  வருமானம் போயிடுமே!"      

கவிதை 

முக்கியத்துவம் 

நடிகை விவாகரத்து -
எட்டு பத்தி
தலைப்பு செய்திக்கு
அருகில்
சிறிதாய்
ஓரிரு வரிகளில்
"வறுமையில் 
விவசாயி தற்கொலை" 

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

kggouthaman said...

good.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
இந்த உலகத்தில பல பேர் எந்த கேள்வி கேட்டாலும் முட்டாள்தனமா "இல்ல"னே பதில் சொல்றாங்க. இப்ப நீங்க
சொல்லுங்க, நீங்க அந்த மாதிரி ஆளா?
//

நல்ல கேள்வி next ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

என்ன கன்றாவி இது ?

Madhavan Srinivasagopalan said...

என்ன இந்தவாரம் ஜோக் மிஸ்ஸிங்..?

எஸ்.கே said...

Nice nice!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த உலகத்தில பல பேர் எந்த கேள்வி கேட்டாலும் முட்டாள்தனமா "இல்ல"னே பதில் சொல்றாங்க. இப்ப நீங்க
சொல்லுங்க, நீங்க அந்த மாதிரி ஆளா?
நானும் அதையேதாங்க கேக்கிறேன்...

சேட்டைக்காரன் said...

//நடிகை விவாகரத்து -
எட்டு பத்தி
தலைப்பு செய்திக்கு
அருகில்
சிறிதாய்
ஓரிரு வரிகளில்
"வறுமையில்
விவசாயி தற்கொலை" //

ம்! கசப்பான உண்மை!

வெங்கட் said...

// இந்த உலகத்தில பல பேர் எந்த கேள்வி
கேட்டாலும் முட்டாள்தனமா "இல்ல"னே
பதில் சொல்றாங்க. இப்ப நீங்க சொல்லுங்க,
நீங்க அந்த மாதிரி ஆளா? . //

எந்த மாதிரி ஆளா..?! # கேள்வி கேட்டால்
திருப்பி கேள்வி கேப்போர் சங்கம்..