அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, December 24, 2012

வைகுண்ட ஏகாதசி


இன்று (24.12.2012) எல்லா வைணவக் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி என்னும் புண்ணிய தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. பரமபத வாசல் திறப்பு என்னும் வைபவமும் நடைபெறுகிறது. பலரும் அதை சொர்க்க வாசல் திறப்பு என்றே கூறி வருகிறார்கள்.

இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.அருள்மிகு அரங்கநாதர்,
பூலோக வைகுண்டம் எனப்படும் திருவரங்கத்தில் 
அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.
சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பது இருபது நாட்கள் கொண்டாடப் படுவது. முதல் பத்து நாட்கள் "பகல் பத்து" என்றும் இரண்டாம் பத்து நாட்கள் "ராப்பத்து" என்றும் சொல்வார்கள். பகல் பத்து என்கிற முதல் பத்து நாட்களில் பெரியாழ்வார்,ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்,  திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் பிரபந்தங்களும் "ராப்பத்து" என்கிற இரண்டாம் பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பிரபந்தமும் கோயில்களில் ஓதப்படும்.

இந்த இராண்டாம் பத்தின் முதல் நாளே "வைகுண்ட ஏகாதசி" என்று கொண்டாடப் படுகிறது. (இன்னும் நிறைய சொல்லலாம், இருந்தாலும் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்)

வைகுண்ட ஏகாதசி கொண்டாடும் எல்லா வைணவ அன்பர்களுக்கும் என்னுடைய வைகுண்ட ஏகாதசி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எண்ணப் படி, இந்த பூவுலகை நீக்கும் காலம் வரும்போது, அந்த எம்பெருமானின் திருப்பாதங்களில் சேவை செய்யும் பாக்கியத்தை உங்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் அருளட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

அதே சமயம், இந்தப் பூமியில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் வறுமை விட்டு வளமை பெற்று பெருமையோடு வாழ அந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரியவேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.

கொஞ்சம், எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்களேன், ப்ளீஸ்!

டிஸ்கி : ஏற்கெனவே போட்ட பதிவையே கொஞ்சம் மாற்றி இந்த வருடமும் மீள்பதிவாகப் போட்டு விட்டேன் (நல்லதை எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லவா)

Tuesday, September 18, 2012

2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ?

என்னோட இந்தப் பதிவுல நான் கிண்டலடிசேன்  ஆனா இப்போ பயமா இருக்கு 2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ? என்னடா இப்படி கேக்கறேன்னு யோசிக்கிறீங்களா?


பின்ன என்ன சார்? ஒரு கொடுமையை தாங்கிக்கவே மனசுல தைரியம் கிலோ கணக்குல வேணும் ஆனா ரெண்டு கொடுமையை அதுவும் அடுத்தடுத்து வந்தா, ஆண்டவன் மேல பாரத்தை போட வேண்டியதுதான்.

டைட்டில பார்த்துட்டு வந்தா இவரு இப்படி பில்டப் கொடுத்துகிட்டே போறாரே தவிர விஷயத்துக்கு வரவே இல்லையேன்னு மண்டையைப் பிச்சுக்காதீங்க  இன்னிக்கு தெரியாத்தனமா ஆபீஸ்லேர்ந்து சீக்கிரமே வந்தது தப்பு, கரண்ட் இருக்கேன்னு டிவியைப் பார்த்தது அதை விட தப்பு. என்னன்னா நாளைக்கு சன்டிவியில மதியம் "சுறா" மாலை "மூணு" படம் போடறாங்க  (காலையிலேயே சந்திரமுகி போடறாங்க, ஆனா பிராயச்சித்தம்  தப்பு பண்ணினப்புறம் தானே பண்ணனும் முன்னாடியே பண்ற  பிராயச்சித்தத்துக்கு பலன் இருக்காதே!)

அதுனால எனக்கு என்ன தோணுதுன்னா "அது நம்மகிட்ட தான் வந்துகிட்டிருக்கு எல்லாரும் ஒடுங்க!"

டிஸ்கி 1: விளம்பரத்துல என்ன வேடிக்கைன்னா மதியம் சுறா படம்னு சொன்னப்புறம் தனுஷ் வந்து "ஒய் திஸ் கொலைவெறி"ன்னு பாடறது நல்ல "டைமிங்".

டிஸ்கி 2 : ஆனா மாலை "மூணு"ன்னு சொன்னப்புறம் அதே சாங்கை விஜய் பாடறதா நினைச்சுப் பார்த்தேன்.

டிஸ்கி 3 : இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு, கரண்ட் இருந்தாதானே படம் பார்க்கறதை பத்தி யோசிக்கணும் "அம்மா வாழ்க"ன்னு அட்வான்சா சொல்லி வச்சுக்கறேன் 

Monday, September 10, 2012

புதிர்கள் (விடைகள்) & Hunt for Hint an Advertisement


சென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே:
1. என்னிடம் இரண்டு காசுகள் (coins)  இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இன்னொரு காயின் மதிப்பு என்ன?

விடை : இன்னொரு காயின் வெளிநாட்டு காசு எனவே ரூபாய் என்று பார்த்தல் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது 
2. ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?

விடை : எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவரை நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்று பிடித்தவர் போலீஸ் எனவே முன்னவர் மட்டுமே குற்றவாளி 

3. என்னிடம் இரண்டு காயின் இருக்கிறது. மொத்தம் ஏழு ரூபாய் இருக்கிறது. ஆனால் என்னிடம் இருந்த ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. எப்படி?

விடை : அந்த இன்னொரு காயின் தான் ஐந்து ரூபாய். இந்த காயின் இரண்டு ரூபாய்.மொத்தம் ஏழு ரூபாய்.  (நோ.....நோ....பேட் வேர்ட்ஸ்,ப்ளீஸ்) 

விடைகள் அப்பாதுரை   சொல்லிவிட்டார்  வாழ்த்துகள்!

ஓகே ஆக உங்க மூளையை தட்டிவிட்டாச்சு  புதன் கிழமை மாலை எங்களுடைய www.terrorkummi.com பெருமையுடன் வழங்கும் Hunt for Hint போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்

Sunday, September 9, 2012

புதிர்கள் (அறிவாளிகளுக்கு மட்டும்)


1. என்னிடம் இரண்டு காசுகள் (coins)  இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இன்னொரு காயின் மதிப்பு என்ன?


2. ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?

3. என்னிடம் இரண்டு காயின் இருக்கிறது. மொத்தம் ஏழு ரூபாய் இருக்கிறது. ஆனால் என்னிடம் இருந்த ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. எப்படி?


விடைகள் நாளை மாலை! விடைகள் மட்டறுத்தப் படும்.

Sunday, August 5, 2012

மழை வேண்டி ஒரு பிரார்த்தனை

என் சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று ஒரு முக்கியமான பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தற்போது மழை பெய்ய வேண்டிய காலமாக இருந்தாலும் எங்கும் மழையே இல்லை. இதற்காக பிரார்த்தனை செய்யப் போகிறோம்.  

முன் காலத்தில் வருண ஜபம் என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். கழுத்து அளவு தண்ணீரில் இருந்துகொண்டு இந்த ஜபத்தை செய்தாள் மழை வரும் என்று ஒரு ஐதீகம். இன்றைய தேதியில் வருண ஜபம் செய்ய அந்த அளவு ஆட்கள் இல்லை என்பதால் எங்கள் ஊர்ப்  பெரியவர்கள் வேறு ஒரு வழியை தேர்ந்தெடுத்திருக்கிரார்கள். ஆண்டாளின் "திருப்பாவை"யில் வரும் நான்காவது பாடலான "ஆழிமழைக்கண்ணா" என்ற பாசுரத்தை ஓதுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். உங்களுக்காக அந்த பாசுரம் இங்கே:
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: உலகில் நல்ல செயலைச் செய்யத் தொடங்கினால் பலரும் வந்து தன்னாலியன்ற உதவியைச் செய்வார்கள். நல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர் நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு மழையைத் தரும் வருணதேவன் இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான். அவனை ஆழிமழைக்கண்ணா! என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள். மழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே! உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல் மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும். நிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது என்று நினையாதே! நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு; ஆரவாரித்துக்கொண்டு வானத்திற்குச் செல்; ஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு; மிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு; பகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு; ராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்! நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள்.  

Wednesday, July 25, 2012

ஒரு முக்கிய செய்தி

ரொம்ப நாட்களாகவே (மாதங்களாகவே?) பதிவுலகம் பக்கம் வர முடிவதில்லை அப்படியே வந்தாலும் பிற பதிவுகளை மேலோட்டமாக படித்து விட்டு பின்னூட்டாங்கள் கூட போட முடியாமல் அப்படியே சென்று விட்டேன்.

அதேபோல்என்னாலும் பதிவுகள் போட முடியவில்லை (அது உங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாகக் கூட இருக்கலாம்)

அதற்காக என்னை நம்பி வந்துவிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை ஏமாற்ற முடியுமா?

எனவே உங்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும் முக்கிய செய்தி என்னவென்றால் அடுத்தாற்போல் எனக்கு தோன்றும் உணர்வுகளை நிச்சயமாக ஒரு பதிவாக போடுவேன் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே நான் தரும் முக்கிய செய்தியாகும்.

ஒ..............நோ...........நோ..............நோ பேட் வேர்ட்ஸ்!   

Thursday, July 12, 2012

பல கேள்விகளுக்கு ஒரே பதில்

கேள்விகள்
1. இப்போ "டைம்" என்ன ஆச்சு?

2. நான்கு திசைகள் என்னென்ன?

3. ஒரு ஐஸ்-கிரீம் இருபது ரூபாய். அப்போ இருபது ஐஸ்-கிரீம் என்ன விலை?

4. வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் பொருள் என்ன?

இந்த நான்கு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் அது
"ஆளை விடுப்பா சாமி!"

ஆச்சரியமா இருக்கா? Ctrl+a போட்டு கீழே படிங்க. யார்கிட்ட இந்த கேள்விய கேட்டாங்கன்னு புரியும்.

முதல் கேள்வி கேட்டது மன்மோகன் சிங் கிட்ட 
ரெண்டாவது கேள்வி கேட்டது கருணாநிதிகிட்ட 
மூணாவது கேள்வி கேட்டது சிதம்பரம் கிட்ட 
நாலாவது கேள்வி கேட்டது கர்நாடக பிஜேபி காரங்ககிட்ட 

Monday, June 4, 2012

மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஒன்று

முன் டிஸ்கி: மாம்பழம் சீசன் முடிஞ்சுடிச்சு இப்போ போயி சொன்னா எப்படி? என்று கேட்போருக்காக பின் டிஸ்கியைப் படிக்கவும் (போஸ்டை படிச்சப்புறம்பா)


முக்கனிகளில் முக்கியமான கனி மாம்பழம். சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை (சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தவிர) எல்லோருக்கும் பிடிச்ச பழம்.

விஷயத்துக்கு வருவோம்.  நீங்க மாம்பழம் வாங்கச் செல்லும்போது முதல்ல வெரைட்டியை முடிவு பண்ணிக்குவீங்களா? நல்லது. அப்படி வெரைட்டியை முடிவு பண்ணலைனா கூட ஒன்னும் குடி முழுகிடாது. கடைக்கு போயி உங்க பேவரைட் பழத்தை பார்த்து வாங்கிக்கலாம்

அப்படி பழத்தை செலக்ட் பண்ணி வாங்கறதுக்கு முன்னாடி, நீங்க என்ன கவனிக்கனும்னா...........

....................

........................

......................................

பொறுங்க, ஒரு சஸ்பென்ஸ் தான்

......................................
...................................சஸ்பென்ஸ் போதும்ல? ஓகே, சொல்லிடறேன். அதாவது பழத்தை செலக்ட் பண்ணி வாங்கறதுக்கு முன்னாடி பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம்................பர்ஸ் கொண்டு வந்திருக்கீங்களான்னு பார்க்கனும். அப்பதானே நினைச்ச மாம்பழத்தை வாங்க முடியும்?


பின் டிஸ்கி:  மாம்பழம்தான்னு இல்லை, எந்தப் பொருள் வாங்கறதுக்கும் முன்னாடி நீங்க கவனிக்க வேண்டிய விஷயம், அந்தப் பொருளை வாங்கறதுக்கு போதுமான பணம் உங்க பர்ஸ்ல இருக்குதான்னு பார்க்க வேண்டியதுதானே? அதைதானே சொன்னேன்? இதை சொன்னா நம்மளை லூசுங்கறாங்க, என்ன செய்ய?


......ஓகே, ஓகே, நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்     
   


Monday, April 16, 2012

டைட்டானிக்கும் சில போதனைகளும்

முன் டிஸ்கி : பிரபலமான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி நூறு வருடங்கள் இன்றோடு ஆகிறது.  இந்த விபத்து நமக்கு சொல்லும் செய்தி என்ன? இதோ:


  1. எப்பவாவது நாம போக நினைக்கிற 'பஸ்'சையோ ரயிலையோ தவற விட்டா வருத்தப் படாதீங்க. அந்த பஸ் ஒரு வேளை ஆக்சிடன்ட் ஆயிட்டா, நாம தப்பிச்சுடுவோமில்ல? 
  2. செலவே இல்லாத பேப்பர் கப்பலா இருந்தாலும் சரி, பெரும் பண செலவுல கட்டின "டைட்டானிக்" கப்பலா இருந்தாலும் சரி, தண்ணி மேல அது இருந்தாதான் பெருமை, அதுமேல தண்ணி இருந்தா வேஸ்ட் தான்
  3. எத்தனையோ கப்பல்கள் இப்பவும் எந்த ஆக்சிடன்ட் இல்லாம கடல் மேல போயிக்கிட்டுதான் இருக்கும். ஆனா அதைப் பத்தி யாராவது பேசறாங்களா? முழுகிப் போன கப்பலைப் பத்திதான் நிறைய படம் எடுக்கறாங்க. எனவே, ஒருத்தன் கஷ்டப்பட்டா அதைப் பத்தி ஊரு முழுக்க படம் போட்டுக் காட்டறதுதான் நிதரிசனம்.

பின் டிஸ்கி:

எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான போதனை. நகைச்சுவைன்னு "லேபில்" போட்டாச்சுன்னா சிரிச்சுட்டு போயிகிட்டே இருக்கணும். ஒரு "காவியக்" காதல் உங்களுக்கு கேலியா இருக்குதான்னு யாரும் கேட்க கூடாது. ("டைட்டானிக்"நு சொன்ன உடனே லவ் தான ஞாபகம் வருது?) 

Thursday, March 15, 2012

மகளிர் தினம் - கவிதை

எங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே:

பெண்ணிற் பெருந்தக்க யாவுள
இது
பொய்யாமொழிப் புலவனின் வாக்கு
பொருள் பொதிந்த பொருத்தமான வாக்கு

அகிலத்தையே ஆளும் ஈசனும்
அம்மைக்குள் அடக்கம்
இது
அவ்வையின் தமிழ் பாட்டு
இதற்குண்டோ ஒரு எதிர் பாட்டு?
பெண்ணின் பெருமையை
எண்ணிடத் துணிந்தேன்
என்னே என் மடமை!
பேராழியின் அலையை
எண்ணிடத் துணிந்தால்
இதுவும் சாத்தியமே!

அன்னையாய் வந்து
என் பசி தீர்த்தது ஒரு பெண்
அருந்தமிழ் வந்து
கற்பித்ததும் ஒரு பெண்
சிறுபிள்ளை விளையாட்டிலே
ஆனந்தம் தந்தது ஒரு பெண்
சீரான கல்லூரி வாழ்வில்
நட்பின் இலக்கணம் வகுத்தது ஒரு பெண்
தமக்கையாய், தங்கையாய்
உறவின் பெருமை தந்தது ஒரு பெண்
வாழ்வில் வளம் பொங்க
வாழ்க்கை நலம் சிறக்க
வந்தாள் குலம் விளங்க
ஒரு பெண் -என் மனைவியாய்
தந்தாள் குலம் சிறக்க
இரு பெண்கள் - குழந்தைகளாய்
இப்படி
என்னை சுற்றி
எத்தனைதான்  பெண்கள்
அவர்களே
என் அறிவுக்கண் திறந்த கண்கள்
பெண்கள் வீட்டின் கண்கள்
அல்ல
அவர்கள் நாட்டின் கண்கள்
பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்
நாட்டின் நன்மையைக் கருதினால்
பெண்மையைப் போற்றுவோம்

Wednesday, February 15, 2012

புதிர் விடைகள்

முந்தைய பதிவில் கேட்டிருந்த புதிர்களுக்கு விடைகள்:1. காதலர் தினத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதில் : காதலர் தினத்தன்னிக்கு நமக்குன்னு ஒரு ஜோடி கிடைக்காதான்னு  ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.  தமிழக மக்கள் நமக்குன்னு ஒரு நல்ல ஆட்சி வராதான்னு எப்பவும் எதிர்பார்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

2. வரும், போகும், மறுபடியும் வரும், மறுபடியும் போகும், ஆனா திரும்ப வருமான்னு தெரியாது, அது என்ன?

பதில் : இதுக்கு உலகம் முழுக்க ஒரே விடை தான் : பல்
ஆனா தமிழ் நாட்டுக்கு மட்டும் இன்னொரு விடையும் இருக்கு.
அது : மின்சாரம்

3. பவருக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பவர்ல இருக்கறவங்க பவர் கட் செய்வாங்க. பவர் "கட்" ஆனவங்க பவர்-கட் பத்தி புகார் பண்ணுவாங்க.

4. கரண்ட் இல்லைனா என்ன வசதி? கரண்ட் இருந்தா என்ன கஷ்டம்?

கரண்ட் இல்லைனா மெழுகுவத்தி வச்சு candle-light Dinner சாப்பிடலாம். கரண்ட் இருந்தா சாப்பிடவே முடியாது. (சாப்பாடு போடறவங்க சீரியல் பார்த்துகிட்டு இருப்பாங்களே!)

5. தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

முந்தைய ஆட்சியில கரண்ட் எப்பவாவது போகும். இந்த ஆட்சியில எப்பவாவது வரும்.


டிஸ்கி : சரியா சொன்னவங்களுக்கு சபாஷ்!

Tuesday, February 14, 2012

காதலர் தின ஸ்பெஷல்

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, பெசொவி மீண்டும் வந்துவிட்டார்!

விடுகதைகள்

1. காதலர் தினத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வித்தியாசம்?

2. வரும், போகும், மறுபடியும் வரும், மறுபடியும் போகும், ஆனா திரும்ப வருமான்னு தெரியாது, அது என்ன?

3. பவருக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

4. கரண்ட் இல்லைனா என்ன வசதி? கரண்ட் இருந்தா என்ன கஷ்டம்?

5. தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

பதில்கள் நாளை மாலை! அது வரை உங்கள் பதில்களை இங்கே "கமென்ட்"டுங்கள்!

டிஸ்கி : முதல் புதிர் தவிர மற்றைய கேள்விகளுக்கும் காதலர் தினத்துக்கும் சம்பந்தம் இல்லையேன்னு கேக்க வேணாம். இன்னிக்கு எந்தப் பதிவு போட்டாலும் காதலர் தினம் சம்பந்தப்படாம போடக் கூடாதுன்னு St. Valantine என்கிட்டே கேட்டுக்கிட்டார், நான் என்ன செய்ய?

Monday, January 2, 2012

புதிய ஆண்டு எப்படி இருக்கும்?

 


நேற்று இரவு எத்தனை பேர் விஜய் டிவியில் "நீயா நானா?" சிறப்பு ஒளிபரப்பு பார்த்தீர்கள் என்று தெரியவில்லை நான் பார்த்தேன். அதில் சில ஜோதிடர்களை அழைத்து இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என்று கோபி கேட்க, பலரும் பல விதமாய் ஜோசியம் சொன்னார்கள்.
அதில் ஒரு ஜோதிடர் அறிவு பூர்வமாய் ஒரு கணிப்பு சொன்னார் பாருங்கள், அதிர்ந்து போய்விட்டேன். அதாவது, இந்த ஆண்டு குடும்பப் பெண்கள் பலர் காசுக்காக குடும்ப கௌரவத்தை விட்டுவிட்டு சீரழிந்து போவார்களாம், இவர் ஜோதிடம் சொன்னாரா, அல்லது யாருக்காவது சாபம் விட்டாரா என்று எனக்குப் புரியவில்லை.  ஜோதிடர் ஷெல்வி  பெரும்பாலும் சோகக் கணிப்புகள் தான் கூறினார். ஒரு ஜோதிடர் ஒரு படி மேல் போய் இலங்கையில் ராஜ பக்சே பதவி விலகுவார் என்றும் அல்லது அவர் அரசியலை விட்டே விலகுவார் என்றும் ஆரூடம் கூறினார்.

சரி போகட்டும், இந்தப் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்று ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை என்றாலும் நான் சொல்ல வில்லை என்றால் நன்றாக இருக்காது அல்லவா? (அதாவது எனக்கு இதை வைத்து ஒரு பதிவு தேத்தும் வாய்ப்பு இருக்கிறது, ஹிஹி!) அதனால் சொல்கிறேன். என்னுடைய இந்தக் கணிப்பு உண்மைதான் என்றும் எந்த ஜோதிடரிடம் சென்று நீங்கள் கேட்டாலும்  அவரால் இந்த உண்மையை மறைக்க முடியாது என்று உறுதி கூறுகிறேன்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக் கிழமையில் அஷ்டமி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது. கிரக சஞ்சாரங்களையும்  எனக்குத் தெரிந்த பலாபலன்களையும் வைத்துப் பார்க்கும்போது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்றால்
..
..
..
..
..
..
இப்படிதான் இருக்கும்

2012

டிஸ்கி: இப்படி தான் ஏதாவது எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்களை ஏமாற்ற விரும்புவதால் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதற்கு உண்மையான பதில்  கீழே:

ஆண்டு எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்குது ஆனா மனுஷங்களோட மன நிலையை வைத்துதான் நல்ல ஆண்டாகவோ கெட்ட ஆண்டாகவோ மாறும் என்பதால் உங்கள் மன நிலையை நல்ல முறையிலும் அமைதியாகவும் வைத்துக் கொண்டு நல்லதே செய்து வாருங்கள், இந்தப் புதிய ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டுமே நல்லதாகவே அமையும்.

அனைத்து தோழமைகளுக்கும் என் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!