அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, February 14, 2012

காதலர் தின ஸ்பெஷல்

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, பெசொவி மீண்டும் வந்துவிட்டார்!

விடுகதைகள்

1. காதலர் தினத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வித்தியாசம்?

2. வரும், போகும், மறுபடியும் வரும், மறுபடியும் போகும், ஆனா திரும்ப வருமான்னு தெரியாது, அது என்ன?

3. பவருக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

4. கரண்ட் இல்லைனா என்ன வசதி? கரண்ட் இருந்தா என்ன கஷ்டம்?

5. தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

பதில்கள் நாளை மாலை! அது வரை உங்கள் பதில்களை இங்கே "கமென்ட்"டுங்கள்!

டிஸ்கி : முதல் புதிர் தவிர மற்றைய கேள்விகளுக்கும் காதலர் தினத்துக்கும் சம்பந்தம் இல்லையேன்னு கேக்க வேணாம். இன்னிக்கு எந்தப் பதிவு போட்டாலும் காதலர் தினம் சம்பந்தப்படாம போடக் கூடாதுன்னு St. Valantine என்கிட்டே கேட்டுக்கிட்டார், நான் என்ன செய்ய?

11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

1. காதலர் தினம் காலண்டர்ல இருக்கு, தமிழக மக்கள் தமிழகத்துல இருக்காங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

2. ஜலதோசம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

3. பவர் ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

4. கரண்ட் இல்லேன்னா பதிவுகளை படிசு கமெண்ட் போடுற வேலை இல்ல. கரண்ட் வந்துட்டா சீரியல் பார்க்கனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

5. முந்தைய ஆட்சி 3 மணி நேரம். தற்போதைய ஆட்சி 12 மணி நேரம்.

Madhavan Srinivasagopalan said...

இதால என்ன ஆகும் ?

NAAI-NAKKS said...

முடியலை...

ஸ்ரீராம். said...

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தானோ....!

எஸ்.கே said...

1. காதலர் தினம் - ஒரு நாள் ஆசைகளுடன்
தமிழக மக்கள் - பல நாள் ஆசைகளுடன்
2. கரண்ட்
3. பவர் - ஷாக் அடிக்கும்
பவர்கட் - ஷாக்கிங்கா இருக்கும்
4. கரண்ட் இல்லன்னாதான் மக்கள் வெளியுலகத்தையே ஒழுங்கா பார்ப்பாங்க:-)
5. கட்சி

Madhavan Srinivasagopalan said...

1) 'காதலர் தினம்' தமிழக (தமிழ் பேசும்) மக்களுக்கு மட்டுமே சம்பந்தம் இருக்கும்..
ஏன் தெரியுமா.. ---ரெண்டுமே தமிழ் வார்த்தைகள்.... மத்தவங்களுக்கு தெரியாது..

2)உங்கள் பிளாக் போஸ்டு..

3) Power = current * voltage -- neither current is zero, nor voltage is zero. But Power_cut = 0 ie either current or votage or both zero....

ஸ்ஸ்ஸ் அப்பா.. எனக்கே தாங்க முடியலியே... உங்களுக்குலாம்..? .

4a) Y this Q ?
'வசதி' இருந்தா Generator.. அட்லீஸ்ட் Invertor வாங்கிடலாமே..
4b) நீங்க போஸ்டு போடுவீங்களே.. நாங்களும் படிச்சுடுவோமே...

5) இந்தக் கேள்விய சாய்ஸ்ல விடுறேன்

அனு said...

1. காதலர் தினத்துக்கு கையில பூ கொடுப்பாங்க.. தமிழக மக்களுக்கு காதுல பூ சுத்துவாங்க..

2. (முதல்வர்) பதவி

3. பவர்ல(அரசியல்) இருந்தா பவர்கட் (மின்சாரம்) பண்ணலாம்.. ஆனா பவர் கட் ஆகிடுச்சுன்னா பவர் கொடுக்க முடியாது..

4. கரண்ட் இல்லன்னா வேலை செய்ய வேணாம்.. கரண்ட் இருந்தா வேலை செய்யனும் :(

5. முந்தைய ஆட்சியில் நாலு மணி நேரம் பவர் போகும்.. தற்போதைய ஆட்சியில் நாலு மணி நேரம் பவர் வரும்..

( இன்னிக்கு எந்த கமெண்ட் போட்டாலும் காதலர் தினம் சம்பந்தமா போடக் கூடாதுன்னு St. Valantine என்கிட்டே கேட்டுக்கிட்டார், நான் என்ன செய்ய? :) )