அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, September 9, 2012

புதிர்கள் (அறிவாளிகளுக்கு மட்டும்)


1. என்னிடம் இரண்டு காசுகள் (coins)  இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இன்னொரு காயின் மதிப்பு என்ன?


2. ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?

3. என்னிடம் இரண்டு காயின் இருக்கிறது. மொத்தம் ஏழு ரூபாய் இருக்கிறது. ஆனால் என்னிடம் இருந்த ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. எப்படி?


விடைகள் நாளை மாலை! விடைகள் மட்டறுத்தப் படும்.

16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பட்டிகாட்டான் Jey said...


// (அறிவாளிகளுக்கு மட்டும்)-//

அண்ணே நான் அப்பீட்டு..... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

1. அது கோல்டு காயின்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

2. இன்னொருவர் எதிர்திசையில் சென்று கொண்டிருந்தார் (இருவழிச்சாலை?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

3. ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், இரண்டு 1 ரூபாய் காயின்களும் இருக்கின்றன. (காயின் மட்டும்னு சொல்லலையே?)

Philosophy Prabhakaran said...

1. இன்னொன்று இந்திய நாணயம் அல்ல...

2. நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வேறு ஏதோ சாலையில் சென்றுக்கொண்டிருக்கிறார்...

3. இரண்டு காயின்கள் தவிர ரூபாய் நோட்டும் இருக்கிறது... (உ.தா: ஒரு ஐந்து ரூபாய் நோட்டு, இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள்)

வெளங்காதவன்™ said...

1. வேற நாட்டுக் காயினா இருக்கும்...

2. நூறு கிலோமீட்டர் வேகத்துல போனவங்கள புடிக்க முடியலப்பா...

3. ஆனா, மற்றொரு காயின் அஞ்சு ரூவா தான?

பெசொவி said...

@ Philosophy Prabakaran
முதல் கேள்விக்கு பதில் சரி. மற்ற இரண்டும் மீண்டும் முயற்சி செய்யவும்
@ வெளங்காதவன்
முதல் மற்றும் மூன்றாம் கேள்விகளுக்கு பதில் சரி. இரண்டாவது கேள்விக்கு வேறு பதில் இருக்கிறது

பெசொவி said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

1. ரூபாயல்லாத நாணயம்
2. எண்பது கிமிக்காரர் பிடிபட்டவர், நூறு கிமிக்காரர் பிடித்தவர்
3. அது இன்னொரு காயின் (வாழைப்பழ ஜோக் இதிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்)

பெசொவி said...

அப்பாதுரை சார், கலக்கிட்டீங்க! மூன்று விடைகளுமே சரி! வாழ்த்துகள்!

பெசொவி said...

@ பன்னிகுட்டி
உங்க பதில் ஓரளவுக்கு சரியா இருந்தாலும் Logicகா பார்த்தா வேற பதில்கள் இருக்கின்றன.

Madhavan Srinivasagopalan said...

// ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்? //


B'cost that was Super star Rajnikanth. If he goes @ 1 km/hr legally he can't be charged. But, we know that's equal to 100 km/hr speed.

Madhavan Srinivasagopalan said...

// அறிவாளிகளுக்கு மட்டும் -- //

அப்பாடி தப்பிச்சோம்..

Madhavan Srinivasagopalan said...

//பெசொவி said...

@ Philosophy Prabakaran
முதல் கேள்விக்கு பதில் சரி. மற்ற இரண்டும் //

முதல் கேள்விக்கு பதில் சரி
மற்ற இரண்டும்... சாரி..

அப்பாதுரை said...

//B'cost that was Super star Rajnikanth
funny.. கலக்குறீங்க Madhavan :)

kalai said...

AGARAM KALAI: 1+5 ORU CIN 5RUPEES INNORU COIN 1RUPEES OK VA SIR