அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, February 15, 2012

புதிர் விடைகள்

முந்தைய பதிவில் கேட்டிருந்த புதிர்களுக்கு விடைகள்:1. காதலர் தினத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதில் : காதலர் தினத்தன்னிக்கு நமக்குன்னு ஒரு ஜோடி கிடைக்காதான்னு  ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.  தமிழக மக்கள் நமக்குன்னு ஒரு நல்ல ஆட்சி வராதான்னு எப்பவும் எதிர்பார்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.

2. வரும், போகும், மறுபடியும் வரும், மறுபடியும் போகும், ஆனா திரும்ப வருமான்னு தெரியாது, அது என்ன?

பதில் : இதுக்கு உலகம் முழுக்க ஒரே விடை தான் : பல்
ஆனா தமிழ் நாட்டுக்கு மட்டும் இன்னொரு விடையும் இருக்கு.
அது : மின்சாரம்

3. பவருக்கும் பவர் கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பவர்ல இருக்கறவங்க பவர் கட் செய்வாங்க. பவர் "கட்" ஆனவங்க பவர்-கட் பத்தி புகார் பண்ணுவாங்க.

4. கரண்ட் இல்லைனா என்ன வசதி? கரண்ட் இருந்தா என்ன கஷ்டம்?

கரண்ட் இல்லைனா மெழுகுவத்தி வச்சு candle-light Dinner சாப்பிடலாம். கரண்ட் இருந்தா சாப்பிடவே முடியாது. (சாப்பாடு போடறவங்க சீரியல் பார்த்துகிட்டு இருப்பாங்களே!)

5. தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

முந்தைய ஆட்சியில கரண்ட் எப்பவாவது போகும். இந்த ஆட்சியில எப்பவாவது வரும்.


டிஸ்கி : சரியா சொன்னவங்களுக்கு சபாஷ்!

7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

இராஜராஜேஸ்வரி said...

மின்சாரப் புதிர்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

nice

வெங்கட் said...

ஹா., ஹா., ஹா...

கலக்கல் பதில்கள்..!!

Madhavan Srinivasagopalan said...

வெங்கட் said... 3

ஹா., ஹா., ஹா...

கலக்கல் பதில்கள்..!!

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

அடாடா.. காபி பண்ணச்சே பேரையும் சேத்து காப்பி பண்ணிட்டேனே..!!
சரி.. விடு.. விடு.. வண்டிய நேர அடுத்த பிளாகுக்கு விடு..

NAAI-NAKKS said...

:)))))))))))))
super...