அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, June 4, 2012

மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஒன்று

முன் டிஸ்கி: மாம்பழம் சீசன் முடிஞ்சுடிச்சு இப்போ போயி சொன்னா எப்படி? என்று கேட்போருக்காக பின் டிஸ்கியைப் படிக்கவும் (போஸ்டை படிச்சப்புறம்பா)


முக்கனிகளில் முக்கியமான கனி மாம்பழம். சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை (சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தவிர) எல்லோருக்கும் பிடிச்ச பழம்.

விஷயத்துக்கு வருவோம்.  நீங்க மாம்பழம் வாங்கச் செல்லும்போது முதல்ல வெரைட்டியை முடிவு பண்ணிக்குவீங்களா? நல்லது. அப்படி வெரைட்டியை முடிவு பண்ணலைனா கூட ஒன்னும் குடி முழுகிடாது. கடைக்கு போயி உங்க பேவரைட் பழத்தை பார்த்து வாங்கிக்கலாம்

அப்படி பழத்தை செலக்ட் பண்ணி வாங்கறதுக்கு முன்னாடி, நீங்க என்ன கவனிக்கனும்னா...........

....................

........................

......................................

பொறுங்க, ஒரு சஸ்பென்ஸ் தான்

......................................
...................................சஸ்பென்ஸ் போதும்ல? ஓகே, சொல்லிடறேன். அதாவது பழத்தை செலக்ட் பண்ணி வாங்கறதுக்கு முன்னாடி பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம்................பர்ஸ் கொண்டு வந்திருக்கீங்களான்னு பார்க்கனும். அப்பதானே நினைச்ச மாம்பழத்தை வாங்க முடியும்?


பின் டிஸ்கி:  மாம்பழம்தான்னு இல்லை, எந்தப் பொருள் வாங்கறதுக்கும் முன்னாடி நீங்க கவனிக்க வேண்டிய விஷயம், அந்தப் பொருளை வாங்கறதுக்கு போதுமான பணம் உங்க பர்ஸ்ல இருக்குதான்னு பார்க்க வேண்டியதுதானே? அதைதானே சொன்னேன்? இதை சொன்னா நம்மளை லூசுங்கறாங்க, என்ன செய்ய?


......ஓகே, ஓகே, நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்     
   


9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஹாலிவுட்ரசிகன் said...

அடடா ... என்னா ஒரு அறிவுபூர்வ சிந்தனை. ஆனாலும் இந்தப் பிரச்சினை எனக்கும் அவ்வப்போது வருவதுண்டு. ஹி ஹி

வெங்கட் said...

// இதை சொன்னா நம்மளை லூசுங்கறாங்க, //

நம்மளை இல்ல.. உங்களை...

ஏன்னா இந்த மாதிரி அறிவாளிதனமா(?)
எல்லாம் உங்களால மட்டும் தான் சிந்திக்க முடியும்...

TERROR-PANDIYAN(VAS) said...

அப்படியா?? நான் டெய்லி ஹோட்டல் போரேன் பிடிச்சது எல்லாம் வாங்கி தின்னுட்டு வரேன். பர்ஸ் இருக்கான்னு கவனிச்சதே இல்லியே!!!

(ஹோட்டல்ல அக்கவுண்ட் வச்சி இருக்கேன்)

வெளங்காதவன்™ said...

@terror- idha appudiye tanjavoor kalvettula yezhuthi vachittu okkaaru. Rascal.
:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் பர்சே யூஸ் பண்றதில்ல, சட்டை பாக்கெட்ல தான் பணம் வெச்சிக்கிறேன்........... எப்பூடி.........?

Madhavan Srinivasagopalan said...

வெயிலோட கொடுமை..
எப்படி இருந்த பெ.சோ.வி இப்படி ஆயிட்டாரு...

@ ராமசாமி...
சட்டையை வீட்டிலேயே வெச்சிட்டு போகாமா பாத்துக்கங்க...!!

சேலம் தேவா said...

ஆஹா..அருமையான ஆலோசனை.இப்டிதான் விஞ்ஞானிகளை இந்த ஒலகம் முதல்ல எப்பயும் திட்டிட்டே இருக்கும்.அப்புறம் பேட்டர்ன் ரைட்ஸ் வாங்கி வச்சுக்கும். சோ..நீங்க இதே மாதிரி அட்வைஸ தொடருங்க.. :)

எஸ்.கே said...

பெரும்பாலான பர்ஸ்களில் பணம் இருப்பதில்லை. ஆனாலும் அவை பாக்கெட்டில் இருக்கும்...

வல்லிசிம்ஹன் said...

கொடுமைதான் வெயில்:)
இனிமே பணம் எடுத்துக் கிட்டே வெளியில் கிளம்பறோம்.