அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, March 21, 2011

வாரச் சந்தை - 21.03.2011

தத்துவம்

ஒரு ஆண் அரிச்சந்திரனா இருக்கறது அவன் மனைவி கையில்தான் இருக்கு.......................புருஷனை கேள்வி கேக்காம இருந்தா போதும்!
  
பொன்மொழி


உங்களைப் பற்றி பிறர் விமரிசனம் செய்யும்போது, அது உண்மை என்றால் நீங்கள் வருந்துவது தவறு. அது பொய் என்றால் வருந்துவதில் பொருள் இல்லை, ஏனென்றால் அது உங்களைப் பற்றி இல்லை.  எனவே உங்களைப் பற்றிய விமரிசனத்தைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள், உங்கள் வழியில் போங்கள்!


குவிஸ் 
ஒரு நோஞ்சான் குத்துசண்டைப் போட்டிக்குப் போவதற்கும், ஒரு பலசாலி மனைவியிடம் வாக்குவாதம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

போட்டியில் ஜெயிக்க நோஞ்சானுக்கு வாய்ப்பிருக்கிறது.

ஜோக்

இரு ராணுவ வீரர்கள் பேசிக் கொண்டார்கள்:
"நீ ஏன் ராணுவத்தில சேர்ந்தே?"
"எனக்கு கல்யாணம் ஆகலை, சண்டைல விருப்பம் இருந்தது, அதான்! நீ ஏன் இங்க வந்தே?"
"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அமைதில விருப்பம் இருந்தது, அதான்!"


கவிதை

தான் மட்டும்
சிரிக்காமல் 
ஏழையையும்  
சிரிக்க வைக்கிறார்
காந்தி - 
தேர்தல் நேரத்தில்
மட்டும்.
பின்னர் 
ஐந்து வருடமும்
தான் மட்டும்
சிரிக்கிறார்
வாழ்க
ஜனநாயகம்.
என்று!

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

சேட்டைக்காரன் said...

//ஒரு ஆண் அரிச்சந்திரனா இருக்கறது அவன் மனைவி கையில்தான் இருக்கு.......................புருஷனை கேள்வி கேக்காம இருந்தா போதும்!//

முத பந்துலேயே சிக்ஸரா? :-)

நல்லாயிருக்கு பகிர்வு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் கமெண்டே சேட்டை கிட்டேயிருந்தா..........?
ரொம்ப சந்தோஷம்!
நன்றி!

middleclassmadhavi said...

:))

Madhavan Srinivasagopalan said...

காசு.. காசுனு மனுஷன் பறக்குறான் பாருங்க..
அதப் பாத்துதான் காந்தியடிகள் சிரிக்கறாரு..

மங்குனி அமைச்சர் said...

ஒரு ஆண் அரிச்சந்திரனா இருக்கறது அவன் மனைவி கையில்தான் இருக்கு.......................புருஷனை கேள்வி கேக்காம இருந்தா போதும்!////

ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பிங்க போல

எஸ்.கே said...

இன்றைய தொகுப்பு செம சூப்பர்!

வெங்கட் said...

// ஒரு நோஞ்சான் குத்துசண்டைப் போட்டிக்குப்
போவதற்கும், ஒரு பலசாலி மனைவியிடம்
வாக்குவாதம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்? //

இப்படி இருந்தா எப்படி இருக்கும்..

ஒரு நோஞ்சான் குத்துசண்டைப் போட்டிக்குப்
போவதற்கும், ஒரு புத்திசாலி மனைவியிடம்
வாக்குவாதம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

போட்டியில் ஜெயிக்க நோஞ்சானுக்கு வாய்ப்பிருக்கிறது.

வெங்கட் said...

கவிதை இப்படி இருந்தா
எப்படி இருக்கு..?

" ஏழையை சிரிக்க வைக்கிறார்
காந்தி - தேர்தல் நேரத்தில்..

பின்னர் ஐந்து வருடமும்
தான் மட்டும் சிரிக்கிறார்

வாழ்க ஜனநாயகம் என்று...!