அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, March 14, 2011

வாரச் சந்தை - 14-03-2011

தத்துவம்

ஒரு கடிகாரத்தை எவ்வளவுதான் பெரிசா தயாரிச்சாலும், மணி காட்டும் முள்ளை "சின்ன" முள்னுதான் சொல்ல முடியும். அதே மாதிரி எவ்வளவு சின்ன கடிகாரமா இருந்தாலும், நிமிஷம் காட்டுற முள் "பெரிய" முள்தான்.

(ரெண்டாவதா சொன்னதை தனி தத்துவமா போட்டிருக்கலாம், வட போச்சோ?)


பொன்மொழி

மற்றவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டுவது நல்லது, அவர்களுக்கு! ஏனென்றால், நாளை நீங்கள் அதே தவறைச் செய்யும்போது உங்களைக் குறை சொல்ல உரிமை கிடைக்கிறது.


(நான் அப்படி நிறைய பேருக்கு உரிமை கொடுத்திருக்கிறேன்)


ஜோக்

மூன்று பேர் இறந்ததும் நரகத்துக்கு சென்றார்கள். அங்கே நரகத்தின் தலைவன் சொன்னான், "இங்க நிறைய கோழிங்க இருக்கு, அதை மிதிக்காம இருக்கணும், மீறினா தண்டனை உண்டு"னு மிரட்டி வச்சிருந்தான். அதுனால மூணு பெரும் ஜாக்கிரதையா இருந்தாங்க.
ஆனா அடுத்த நாளே, முதல் ஆள் ஒரு கோழிய மிதிசிட்டான். கடுப்பான தலைவன், ஒரு அசிங்கமான பெண்ணை கூட்டிட்டு வந்து அவனோட சேர்த்து சங்கிலியால கட்டிப் போட்டுட்டான்.
அடுத்த நாள், ரெண்டாவது ஆளும் தெரியாம கோழிய மிதிச்சிட்டான். இப்பவும் தலைவன் வந்து வேற ஒரு அசிங்கமான பொண்ணை அவனோட சேர்த்து சங்கிலியால கட்டிப் போட்டுட்டான்.
மூணாவது ஆள் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தான். கிட்டத்தட்ட ஒரு வாரம் எந்தக் கோழியையும் அவன் மிதிக்கலை. ஆனாலும் தலைவன் வந்து அவனை ஒரு பொண்ணோட சங்கிலியால கட்டிப் போட்டுட்டான். ஆனா, அந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்தா. இவன் கேட்டான், "நான் எந்தக் கோழியையும் மிதிக்காததால இப்படி ஒரு அழகான பொண்ணோட சேர்த்து என்னைக் கட்டிபோட்டீங்களா?" அதுக்கு நரகத்தின் தலைவன் சொன்னான்,
 "அதெல்லாம் இல்லை, அந்தப் பொண்ணு ஒரு கோழிய மிதிச்சிடுச்சு!"

(அப்ப எனக்கு நிச்சயம் நரகத்துல அழகான பெண் உறுதி)


குவிஸ்  

அன்புக்கும் வம்புக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டா அது அன்பு.
அது அவளோட அண்ணனுக்குத் தெரிஞ்சுட்டா வம்பு.


(சொந்த அனுபவம் எல்லாம் இல்லீங்கோ!)


கவிதை 

நீ காதலித்தால்
அவளும் காதலிக்க
காதல் ஒன்றும்
பண்டமாற்று இல்லை,
ஆனால்
காதலியே பண்டமாற்றுதான்,
அவள் இல்லையென்றால்
இவள்!
கெளப்புடா ராசா,
 என்சாய்!

(இது சிரிக்க மட்டுமே, கடைப்பிடிக்க இல்லை)

20 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வைகை said...

காதலியே பண்டமாற்றுதான்,
அவள் இல்லையென்றால்
இவள்!
கெளப்புடா ராசா,
என்சாய்//

என்னைப்போன்ற இளைஞர்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை சொன்ன அண்ணன் வால்க.. :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said... 1

காதலியே பண்டமாற்றுதான்,
அவள் இல்லையென்றால்
இவள்!
கெளப்புடா ராசா,
என்சாய்//

என்னைப்போன்ற இளைஞர்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை சொன்ன அண்ணன் வால்க.. :))
//

(இது சிரிக்க மட்டுமே, கடைப்பிடிக்க இல்லை). இதையும் மீறி நீங்க வழக்கம் போல் செருப்படி வாங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல..

Madhavan Srinivasagopalan said...

// கடைப்பிடிக்க //

எனக்கு கடை பிடிக்கும்- பிடிக்காம இருக்கும்..
இதப் பத்தி சொல்லுறதுக்கு நீங்க யாரு ?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

(இது சிரிக்க மட்டுமே, கடைப்பிடிக்க இல்லை). இதையும் மீறி நீங்க வழக்கம் போல் செருப்படி வாங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல..//

இதுக்கெல்லாம் நிர்வாகம் இருக்கா?

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்ப எனக்கு நிச்சயம் நரகத்துல அழகான பெண் உறுதி)//

எப்படி? நீங்க அவ்வளாவு அசிங்கமானவரா? கோழிய மிதிக்கவே மாட்டிங்களா? நீங்க போற அப்போ ஒரு அழகான பெண் கோழிய மிதிப்பானு என்ன கேரண்டி? டிட்டெய்ல்ஸ் ப்ளீஸ்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//இது சிரிக்க மட்டுமே,//

அப்போ ஏன் இதை ஜோக் செக்‌ஷன்ல போடமா கவிதைல போட்டு இருக்கிங்க? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//செருப்படி வாங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல..//

பொறுப்பில்லா நிர்வாகம்.. :)

middleclassmadhavi said...

வாரச் சந்தையில் தத்துவமும் பொன்மொழியும் fresh!

எஸ்.கே said...

தத்துவம் பொன்மொழி சூப்பர்!

சமுத்ரா said...

joke super

மங்குனி அமைச்சர் said...

அந்த முள்ளு மேட்டர் சூப்பர் சார்

சி.பி.செந்தில்குமார் said...

>>>
ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டா அது அன்பு.
அது அவளோட அண்ணனுக்குத் தெரிஞ்சுட்டா வம்பு.ரமேஷை இப்படி எல்லாம் கேவலப்படுத்துனதை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கெளப்புடா ராசா என்சாய்ய்ய்ய்ய்ய்ய்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வைகை said...
காதலியே பண்டமாற்றுதான்,
அவள் இல்லையென்றால்
இவள்!
கெளப்புடா ராசா,
என்சாய்//

என்னைப்போன்ற இளைஞர்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை சொன்ன அண்ணன் வால்க.. :))///////////

இல்லேன்னா மட்டும்.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said... 1

காதலியே பண்டமாற்றுதான்,
அவள் இல்லையென்றால்
இவள்!
கெளப்புடா ராசா,
என்சாய்//

என்னைப்போன்ற இளைஞர்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை சொன்ன அண்ணன் வால்க.. :))
//

(இது சிரிக்க மட்டுமே, கடைப்பிடிக்க இல்லை). இதையும் மீறி நீங்க வழக்கம் போல் செருப்படி வாங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல..///////////

இதுக்குத்தான் அததுக்கு ஒரு ஆளு வேணும்கறது..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

(இது சிரிக்க மட்டுமே, கடைப்பிடிக்க இல்லை). இதையும் மீறி நீங்க வழக்கம் போல் செருப்படி வாங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல..//

இதுக்கெல்லாம் நிர்வாகம் இருக்கா?////////

நிர்வாகம் மட்டுமா? அதுக்கு ஒரு டேமேஜரும் இருக்காரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
//அப்ப எனக்கு நிச்சயம் நரகத்துல அழகான பெண் உறுதி)//

எப்படி? நீங்க அவ்வளாவு அசிங்கமானவரா? கோழிய மிதிக்கவே மாட்டிங்களா? நீங்க போற அப்போ ஒரு அழகான பெண் கோழிய மிதிப்பானு என்ன கேரண்டி? டிட்டெய்ல்ஸ் ப்ளீஸ்... :)///////

ஆமா எல்லா டீடெயில்சும் கொடுத்தா அவரே கரெக்டா ஏற்பாடு பண்ணிக் கொடுப்பார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//செருப்படி வாங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல..//

பொறுப்பில்லா நிர்வாகம்.. :)////////

அட நம்ம சிரிப்பு போலீசு நிர்வாகம்தான்... கொஞ்சம் சோறு போட்டா போதும்.... பொறுப்பு, கருப்பு, செருப்பு எல்லாம் கெடைக்கும்..........

வெங்கட் said...

// அப்ப எனக்கு நிச்சயம் நரகத்துல
அழகான பெண் உறுதி //

உங்களுக்கு எப்படி அழகான பொண்ணு
கிடைக்கும்..??!!

அதான் உங்ககூட ரமேஷ் இருக்காரே..!

R.Gopi said...

வார சந்தையில் “ஜோக்” படு டாப்...