அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, June 8, 2011

பதிவர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள அனைத்து பதிவர்களுக்கும் வணக்கங்கள்!

நேற்று இரவு நம்ம கோகுலத்தில் சூரியன் வெங்கட் பேசினார். "சில நாட்களுக்கு முன், சில பதிவர்கள் கொடைக்கானல் டூர் போனாங்களே, நீங்க ஏன் போகலை?" என்று கேட்டார்.  "எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் போக முடியவில்லை" என்று சொன்னேன்.

"அதுனால என்ன? அடுத்த வாரம் நெல்லையில ஒரு பதிவர் சந்திப்பு இருக்குது, அதுக்காவது போகலாம்னு இருக்கேன்" என்றும் சொன்னேன்.  

"அதெல்லாம் சரி, நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போறதில்லை?" என்று கேட்டேன், அதுக்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்க...................சான்சே இல்லை. இப்படியெல்லாம் வெங்கட்டால் மட்டுமே யோசிக்க முடியும்.

அது என்னன்னு யோசிச்சு சொல்லுங்க, பார்ப்போம். சரியான பதிலை அப்புறம் சொல்றேன்.

டிஸ்கி: யாரால முடியுமோ அவங்க எல்லாரும் வர்ற 17-ந்தேதி காலையில நெல்லையில நடக்க இருக்கிற பதிவர் சந்திப்புக்கு வாங்க, இது ஒரு அரிய வாய்ப்பு (அப்பாடி பதிவோட தலைப்பை ஒட்டி எழுதியாச்சு). அது மட்டுமில்ல, ஒருவரை ஒருவர் அறிய வாய்ப்பும் கூட(நம்ம அறிவுத் திறமையையும் காட்டிட்டோமில்ல......!)

8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"அதெல்லாம் சரி, நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போறதில்லை?" என்று கேட்டேன், அதுக்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்க...................சான்சே இல்லை. இப்படியெல்லாம் வெங்கட்டால் மட்டுமே யோசிக்க முடியும்.//

பதிவர் சந்திப்புல மாடரேசன் இல்லியாம்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள் நண்பரே . அப்புறம் அந்தக் கேள்விக்கான பதிலை எப்ப சொல்லுவிங்க !??????????????

THOPPITHOPPI said...

//பதிவர் சந்திப்புல மாடரேசன் இல்லியாம் //

ஹஹஹா......... இந்தமாதிரி எல்லாம் யோசிக்க சிரிப்பு போலிசாலதான் முடியும்

மதுரை சரவணன் said...

பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...என்னாத்த வந்து கிழிக்க போறோம்ன்னு சொன்னாரா...?

நிரூபன் said...

அதெல்லாம் சரி, நீங்க ஏன் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போறதில்லை?//

உங்களுக்கு வேலை பிசி என்று நினைக்கிறேன்.
சரியா?

நிரூபன் said...

உங்களின் பதிவர் சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துக்கள் சகோ.

வெங்கட் said...

"பதிவர் சந்திப்புக்கு நான் வரலாமா..?
அங்கெல்லாம் பதிவரா இருந்தா தான்
வரணும்னு சொல்றாங்கன்னு " ஒரு
டவுட் கேட்டது ஒரு குத்தமா..?

அதுக்கு இவ்ளோ பெரிய பில் டப்பா..?!

FOOD said...

நெல்லை பதிவர் சந்திப்பிற்கு அனைவரையும் மகிழ்வோடு அழைக்கிறோம்.