அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, February 28, 2011

வாரச் சந்தை - 28.02.2011


ஒரு தத்துவம் 

தற்கொலை பண்ணிக்கறது சரிதான், ஏன்னா, கோழைகளுக்கு இந்த பூமியில் இடம் கிடையாது!

ஒரு பொன்மொழி

ஒரு முறை போனால் திரும்ப வராதது நான்கு:
உயிர், அம்பு, சொல்லிய வார்த்தை, வாய்ப்பு.

ஒரு ஜோக்

ஒருவருக்கு போன் வந்தது,"சார், உங்க மனைவி ஒரு குளத்தில விழுந்துட்டாங்க, அந்த குளத்தில ஒரு முதலை இருக்கு!"

"அதுக்கு ஏன் எனக்கு போன் பண்றீங்க, முதல்ல அந்த முதலையைக் காப்பாத்தற வழியப் பாருங்க!" 

ஒரு கவிதை

"அன்பே, ஆருயிரே"
வார்த்தைகள் இருக்க, 
"அண்ணே"தான் கிடைத்ததா?
இனிய உளவாக
இன்னாத கூறல் ஏன், கண்ணே?

ஒரு குவிஸ் 

சமூக விரோதிக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம்?

சமூக விரோதி "wanted" லிஸ்ட்ல இருப்பாரு!  அரசியல்வாதி "Unwanted" லிஸ்ட்ல இருப்பாரு.

15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

//ஒரு முறை போனால் திரும்ப வராதது நான்கு:
உயிர், அம்பு, சொல்லிய வார்த்தை, வாய்ப்பு.//

அருமையான பொன்மொழி!

எஸ்.கே said...

ஜோக், கவிதை, குவிஸ்லாம் ரொம்ப நல்லா இருக்கு!:-)

வெங்கட் said...

// ஒரு முறை போனால் திரும்ப வராதது நான்கு:
உயிர், அம்பு, சொல்லிய வார்த்தை, வாய்ப்பு. //

அப்ப Bullet ( குண்டு ) போனா திரும்பி
வரும்களா..?

Madhavan Srinivasagopalan said...

வழக்கம் போல கலக்கல் வாரச் சந்தை..

ஒரு சிறு திருத்தம் (என்னைப் பொறுத்த வரையில்)
'வாய்ப்பு' மறுபடியும் வரலாம்.... அதற்கானா 'வாய்ப்பு' இருப்பதாக நன் நினைக்கிறேன்..

Madhavan Srinivasagopalan said...

@ Vekat (who) said "
அப்ப Bullet ( குண்டு ) போனா திரும்பி
வரும்களா..?"//

bullet , ஸ்கூட்டி, ஸ்ப்லேண்டர் .. இதுலாம் போனா திரும்ப வரும்....
வரலேன்னா, போலிஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan said...

@ Vekat (who) said "
அப்ப Bullet ( குண்டு ) போனா திரும்பி
வரும்களா..?"//

bullet , ஸ்கூட்டி, ஸ்ப்லேண்டர் .. இதுலாம் போனா திரும்ப வரும்....
வரலேன்னா, போலிஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க.//

முதல்ல மாமூல் கொடுங்க

நாஞ்சில் பிரதாப்™ said...

அட....அட.... பின்றீங்க...சார்...

முதலை காமெடி கலக்கல்...:)))

சேட்டைக்காரன் said...

//"அன்பே, ஆருயிரே"
வார்த்தைகள் இருக்க,
"அண்ணே"தான் கிடைத்ததா?//

இந்த இடத்துலே ஒரு "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" சேர்த்திருந்தா கவிதையிலே இன்னொரு பரிமாணம் கிடைச்சிருக்குமோ? :-)))))))

Chitra said...

பார்ரா...... தற்கொலைக்கும் நியாயப்படுத்த காரணம் கண்டுபிடிக்கிறாங்க.... ஹா,ஹா,ஹா,ஹா,....

சங்கவி said...

:)

இம்சைஅரசன் பாபு.. said...

//"அன்பே, ஆருயிரே"
வார்த்தைகள் இருக்க,
"அண்ணே"தான் கிடைத்ததா?
இனிய உளவாக
இன்னாத கூறல் ஏன், கண்ணே?//

இன்னும் லவ் மூடுல தான் இருக்கீங்க போல இருக்கே ..சார்

VELU.G said...

அந்த ஹ ஹ ஹ ஹ ஹா அந்த ஹ ஹ ஹ ஹ ஹா அந்த ஜோக் ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

உன்மைதாங்க

vasan said...

The last but NOT the Least but the BEST.

middleclassmadhavi said...

சந்தை சூப்பர்!

R.Gopi said...

ஆஹா...

சந்தை களைகட்டுதே!!!

உயிர், அம்பு, சொல்லிய வார்த்தை, வாய்ப்பு, ”தல” வாங்கிய அமவுண்ட் இந்த ஐந்தும் போனால் திரும்ப வராது.. சூப்பர் பொன்மொழி...