அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, February 7, 2011

வாரச் சந்தை - 07-02-2011

ஒரு தத்துவம் 


மிளகாயைப் பொடி பண்ணி மிளகாப்பொடி பண்ணலாம், ஆனா மூக்கைப் பொடி பண்ணி மூக்குப் பொடி பண்றதில்லை.


ஒரு குவிஸ்


1989-ல் முதன்முதலாக பிரமிடைச் சுத்திப் பார்த்த ஒருவர்,  தன்னுடைய மனைவி மக்களுடன் பார்க்க  ஆசைப்பட்டார். அதே போல், 1956ல் வந்து தன் மனைவி மக்களுடன் அதே பிரமிடைச் சுற்றிப் பார்த்தார். இது எப்படி?

ஒரு பொன்மொழி 

தண்டிக்க மட்டுமல்ல, மன்னிக்கவும் வலிமை வேண்டும்.

ஒரு கவிதை 


தவழ்ந்தேன்,
தடுமாறி நின்றேன்
தள்ளாடி நடந்தேன்
புகழ்ந்தார்கள்,
"சமத்து" என்று!
தவழ்கிறேன்,
தடுமாறி நிற்கிறேன்
தள்ளாடி நடக்கிறேன்
ஏசுகிறார்கள்,
"இவன் குடிகாரன்" என்று!

ஒரு ஜோக் 

ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த நண்பனிடம் அவன் கேட்டான், "ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிடுச்சு, எப்படி இருக்கே?"
"நல்லா இருக்கேன், ஆபரேஷனுக்கு முன்னால, நர்ஸ் வந்து 'சின்ன ஆபரேஷன்தான் தான் கவலைப் படாதீங்க'ன்னு சொன்னதும்தான் எனக்கு பயம் வந்துடிச்சு!"
"இதில என்ன பயம் இருக்கு?"
"நர்ஸ் சொன்னது என்னிடம் இல்லை, ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர்கிட்ட!"

21 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

ஜோக் நல்லாருக்கு

Speed Master said...

அருமை

MANO நாஞ்சில் மனோ said...

//தவழ்கிறேன்,
தடுமாறி நிற்கிறேன்
தள்ளாடி நடக்கிறேன்
ஏசுகிறார்கள்,
"இவன் குடிகாரன்" என்று!////

அதானே........முட்டாபசங்க......ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//"நர்ஸ் சொன்னது என்னிடம் இல்லை, ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர்கிட்ட!"//

யாத்தே.......
எழும்பி ஓடுலே மக்கா......

MANO நாஞ்சில் மனோ said...

//ஆனா மூக்கைப் பொடி பண்ணி மூக்குப் பொடி பண்றதில்லை//

நான் அங்கே வந்தேம்னா உம்ம மூக்குலே குத்தி புடுவேன்.....

middleclassmadhavi said...

தத்துவ முத்து 2 : பல்லைப் பொடி பண்ணி பல்ப்பொடியும் பண்றதில்லை

பிரமிடை B.C. யில் சுத்திப் பார்த்தாரோ?!

பொன்மொழி வலிமை!

கவிதை தெளியும் குடிகாரனுடையது?!!

வாரச் சந்தையில் எல்லாம் வாங்கியாச்சு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ middleclassmadhavi

the answer for the quiz is correct.

மங்குனி அமைச்சர் said...

தடுமாறி நிற்கிறேன்
தள்ளாடி நடக்கிறேன்
ஏசுகிறார்கள்,
"இவன் குடிகாரன்" என்று!///

பொறாமை புடிச்ச பேட் உலகம் சார் இது

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ middleclassmadhavi

the answer for the quiz is correct.///


மாதவி மேடம் தயவு செய்து நான் தான் உங்களுக்கு இந்த ஆன்ஸ்வர் சொல்லிகுடுத்தேன்னு யாருகிட்டயும் சொல்லிடாதிங்க

ஸ்ரீராம். said...

ஜோக்குக்கு வோட்டு.

அனு said...

ஒரு கொலை வெறியோட போட்ட போஸ்ட் மாதிரி இருக்கு.. :) வாழ்க்கை தத்துவத்தை சொன்ன கவிதைக்கு ஒரு ஸ்பெஷல் ஓ!!!

அனு said...

க்விஸுக்கு விடை: அவர் BCஇல் வாழ்ந்திருப்பார்.. :)

Madhavan Srinivasagopalan said...

ஜோக் சூப்பர்..
கவிதை அருமை..
Quiz : bc 89 வந்தப்புறம்தான் bc 56 வரும்.. அதான்..

Philosophy Prabhakaran said...

// 1989-ல் முதன்முதலாக பிரமிடைச் சுத்திப் பார்த்த ஒருவர், தன்னுடைய மனைவி மக்களுடன் பார்க்க ஆசைப்பட்டார். அதே போல், 1956ல் வந்து தன் மனைவி மக்களுடன் அதே பிரமிடைச் சுற்றிப் பார்த்தார். இது எப்படி? //

அது கி.மு...

வெங்கட் said...

1989 & 1965 ரெண்டும் கார் நமபர் தானே..?!!

கோமாளி செல்வா said...

ஹி ஹி .. எனக்கு கவிதையும் சொக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு ..

R.Gopi said...

தலைவா....

சந்தை களை கட்டுதே...

கடைசியில் வந்த அந்த ஜோக்... நிஜமாவே ஹீ...ஹீ...ஹீ.... சூப்பர்.

R.Gopi said...

//ஒரு கவிதை


தவழ்ந்தேன்,
தடுமாறி நின்றேன்
தள்ளாடி நடந்தேன்
புகழ்ந்தார்கள்,
"சமத்து" என்று!
தவழ்கிறேன்,
தடுமாறி நிற்கிறேன்
தள்ளாடி நடக்கிறேன்
ஏசுகிறார்கள்,
"இவன் குடிகாரன்" என்று!//

இவ்ளோ தெளிவா நம்ம டாக்டர் கேப்டன் என்னிக்கு பேசினாரு? அவருக்காக எழுதின மாதிரியே இருக்கே தல?