அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, February 21, 2011

வாரச் சந்தை - 21.02.11

ஒரு தத்துவம்

காலையில பேஸ்டுக்கப்புறம்தான் காப்பி ஆனா, கம்பியூட்டர்ல மட்டும் காப்பிக்கு(copy) அப்புறம் தான் பேஸ்ட். 

ஒரு பொன்மொழி

(இது இங்கிலிஷ்ல இருந்தாதான் சுவையா இருக்கும்)
Success has many parents while failure is an orphan.

ஒரு ஜோக்

லைப்ரரியில் மிஸ்டர் எக்ஸ்: என்னய்யா புக் இது, நிறைய காரெக்டர் பேர் இருக்கு, ஆனா ஒரு சம்பவமும் வரவே இல்ல?

லைப்ரரியன்: அடப் பாவி இங்க இருந்த டெலிபோன் டைரக்டரிய எடுத்துட்டுப் போனது நீதானா? 

ஒரு கவிதை

அன்று 
பொய் சொன்னேன், 
பிறரை அடித்து நொறுக்கினேன்
காசு களவாண்டேன்
சீர்திருத்தப் பள்ளி சென்றேன்!

இன்று 
பொய் சொல்லி
பிறரை அடித்து நொறுக்கி
காசும் களவாண்டு  
களிப்போடு இருக்கிறேன்,
"அண்ணன் வாழ்க" கோஷங்களோடு!

ஒரு குவிஸ் 

நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விடப் போவதில்லை, ஏன்?

எனக்கு புகை பிடிக்கும் பழக்கமே கிடையாது, இருந்தாதானே விட முடியும்? 

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

சங்கவி said...

சந்தை களை கட்டுது...

Chitra said...

கலகலப்பான சந்தை!!!

வேடந்தாங்கல் - கருன் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

எஸ்.கே said...

கவிதை சூப்பர்!

நல்லாயிருக்கு சந்தை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சந்தைல இன்னிக்கு எல்லாச் சரக்குமே சூப்பர்.............

Madhavan Srinivasagopalan said...

// காலையில பேஸ்டுக்கப்புறம்தான் காப்பி //

அப்ப பெட் காபி ?

Others are nice.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Madhavan Srinivasagopalan said...
// காலையில பேஸ்டுக்கப்புறம்தான் காப்பி //

அப்ப பெட் காபி ?

//

பன்னிகுட்டி
ஒரு ஆடு சிக்கியிருக்கு, நோகாம அறுக்கணும் ரெடியா?

அனு said...

ஏன்? ஏன்? ஏன்??

MANO நாஞ்சில் மனோ said...

//பொய் சொல்லி
பிறரை அடித்து நொறுக்கி
காசும் களவாண்டு
களிப்போடு இருக்கிறேன்,
"அண்ணன் வாழ்க" கோஷங்களோடு!//

சாட்டையடி....
அசத்துங்க மக்கா அசத்துங்க...

சேட்டைக்காரன் said...

//எனக்கு புகை பிடிக்கும் பழக்கமே கிடையாது, இருந்தாதானே விட முடியும்? //

நானும் அப்படித்தான். புகையைப் பிடிச்சு வைச்சுக்கிரதில்லை; வெளியே விட்டிருவேன்!

வைகை said...

(இது இங்கிலிஷ்ல இருந்தாதான் சுவையா இருக்கும்)
Success has many parents while failure is an orphan./////

நானும் பிரின்ட் பண்ணி தின்னு பார்த்தேன்... சுவையாவே இல்லையே?

ஓட்ட வட நாராயணன் said...

all items are super/./ market kalai kadduthu....!

வினோ said...

கவிதை ஹைலைட்