ராமசாமியும் கிருஷ்ணசாமியும் நண்பர்கள். சிறு வயது முதலே இருவரும் கிரிகெட் விளையாடுவார்கள். இப்போது இருவருக்கும் எண்பது வயது.
ராமசாமி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று தெரிந்து அவரைப் பார்க்க வந்தார் கிருஷ்ணசாமி. நண்பரை சமாதானப் படுத்த எண்ணிய கிருஷ்ணசாமி, "கவலைப்படாதே ராமசாமி, உலகக் கோப்பை முடியறவரைக்கும் நீ சாக மாட்டே"என்றார்.கிருஷ்ணசாமி சமாதானமாக வில்லை. "எனக்கு சாகறதை பத்தி கூட கவலை இல்லைடா, என்னைப் பிரிஞ்சு நீ எப்படி வாழப் போறியோன்னுதான் கவலை" என்றார்.
ராமசாமி, "உண்மைதான்டா, சரி நீ ஒன்னு மட்டும் செய், ஒரு வேளை இறந்து போயிட்டா மேல் உலகத்தில கிரிக்கெட் விளையாட முடியுமான்னு என் கனவில வந்து சொல்றியா?" என்று கேட்டார். "அதுக்கென்னடா, நிச்சயம் சொல்றேன்"னு சொல்லிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிட்டார்.
ஒரு நாள் இரவு, ராமசாமி தூங்கும்போது கனவில் கிருஷ்ணசாமி வந்தார். நண்பனைப்பார்த்து ஆனந்தமாகக் கேட்டார், "அந்த உலகத்தில ஏதாவது விசேஷம் உண்டா?"
"உண்டு, ஒரு நல்ல செய்தி, கெட்ட செய்தி ரெண்டு இருக்கு, எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டார் கிருஷ்ணசாமி.
"நல்ல செய்தி முதல்ல" - இது ராமசாமி.
"மேல் உலகத்தில கூட கிரிக்கெட் விளையாடறாங்க. இப்ப கூட அங்கேயும் வேர்ல்ட் கப் மேட்ச் நடக்குது" என்றார் கிருஷ்ணசாமி.
"சரி, கெட்ட செய்தி?" ஆர்வமாக கேட்டார் ராமசாமி.
சோகமாக சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"
டிஸ்கி : எல்லாரும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தி எழுதும்போது, நானும் எழுத வேண்டாமா?
17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
கேள்விப்பட்ட ஜோக்தான் என்றாலும் இந்த சூழலுக்கு நகைச்சுவையாக இருந்தது!
nice!
//கேள்விப்பட்ட ஜோக்தான் என்றாலும் இந்த சூழலுக்கு நகைச்சுவையாக இருந்தது!//
ரிப்பீட்டடேய்ய்ய்...
அப்புறம் அந்த வெர்ல்ட் கப்ல யாரு ஜெயிச்சாங்களாம்?
கனவுல வந்து சொன்னாக் கூட போதும்......
super :)
// பன்னிக்குட்டி ராம்சாமி said..'கனவுல வந்து சொன்னாக் கூட போதும்......' //
அனுஷ்கா மூலம் சொன்னாக் கூட தேவலாம் இல்ல..?
சோகமாக சொன்னார், கிருஷ்ணசாமி, "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"
....இப்படியெல்லாம் பயம் காட்டக் கூடாது!
//டிஸ்கி : எல்லாரும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தி எழுதும்போது, நானும் எழுத வேண்டாமா?//
அதானே நாம யாரு ஹாய் ஹாய் ஹாய்.....
// "நாளைய மேட்சுல, நீயும் ஆடறே!"//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
நீங்கதான அம்பையர்?
ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு..
hahaha
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
காமடி நேரம் பார்த்து அடிக்கிரிங்க பாஸ்
நம்ம கவிதை வீதிப்பக்கமும் கொஞ்சம் வந்துட்டு போங்க..
சோகத்திலும்...
சிரிக்க வைத்துவிட்டீர்கள்.
Post a Comment