மாதவனின் இந்தப் பதிவைப் படிச்சப்புறம் எனக்கு ஒரே கவலை. ஊருக்கே தெரிந்த நடிகர் இம்ரான் கானை தெரியாதுன்னு சொல்லிட்டாரே, இப்படியே போனா, நான் சிறந்த நடிகர்னு கூட தெரியாம போயிடும். அதுனாலதான் நான் இந்தப் பதிவை எழுதறேன்.
என்ன அப்படி பார்க்கறீங்க, நான் நிறைய படத்துல நடிச்சிருக்கேன், சார்/மேடம்!
குறிப்பா சொல்லனும்னா பாலசந்தரோட படம், எதிர் நீச்சல் பார்த்திருக்கீங்களா? என்ன ஒரு படம், அது. நாகேஷ், மேஜர், முத்துராமன், மனோரமா இன்னும் பல சிறந்த நடிகர் நடிகைகள் நடிச்ச படமாச்சே, அதைப் பாக்காம இருந்திருப்பீங்களா?
அந்தப் படத்துலதான் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரமா நடிச்சிருக்கேன். சொல்லப் போனா, அந்தப் படத்திலேயே நான் சம்பந்தப் பட்ட சீன்லேதான் ஒரு திடீர் திருப்பமே இருக்கு.
உண்மைதாங்க, ஒரு சீன்ல வீட்டில இருக்கற எல்லோருமே நாகேஷை திட்டி வெளிய போகச் சொல்லிடுவாங்க, அப்ப நான் ஒரு குரல் கொடுப்பேன் பாருங்க, உடனேயே, மாதுவை (அதான், நாகேஷை) வெளிய போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அப்ப என் கேரக்டர் முக்கியமானதா இல்லையா?
ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறேனோ, ஓகே, சொல்லிடறேன், எதிர் நீச்சல் படத்துல வர்ற "இருமல் தாத்தா" காரெக்டர் நான் பண்ணினதுதான்.
ஹி., ஹி., ஹி..
நான் தான் "பெயர் சொல்ல ( திரையில் முகம் காட்ட ) விருப்பமில்லாத " ஆளாச்சே!
18 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
ஓகே தாத்தா!!!
இன்னுமா இருக்கீங்க?
நீங்கதான் அந்தக் குரலுக்கு சொந்தக் காரரா..?
உங்க குரல (உங்களை அல்ல) நா பாக்கணுமே, முடியுமா ?
இருமல் மருந்து கிடைச்சதா?
ila ithu antha thathavoda aavi
ஐய்யோ தாத்தா..? Why பீலீங்..??
உங்களுக்கு இந்த தடவை கண்டீப்பா
" Life Time Achievement Award " தருவாங்க..
கவலைப்படாதீங்க..!!
அதை KBந்னா பண்ணதா சொல்வா
//குறிப்பா சொல்லனும்னா பாலசந்தரோட படம், எதிர் நீச்சல் பார்த்திருக்கீங்களா? //
அது பழைய படம் .. நான் இன்னும் பார்க்கலை ..
//பண்ணினதுதான்.
ஹி., ஹி., ஹி..
நான் தான் "பெயர் சொல்ல ( திரையில் முகம் காட்ட ) விருப்பமில்லாத " ஆளாச்சே!
//
இதுக்கு பயக்கனுமா ?
Speed Master said... 2
இன்னுமா இருக்கீங்க?
//
அதான.
தாத்தாஜி, தாத்தாஜி.....
:-)
"எங்கேயோ கேட்ட குரல்"?!அது சிவாஜி சார் நடிச்ச படமாச்சே?
இந்த முக்கிய பாத்திரத்துக்காக, உங்களுக்கு கூட கலைமாமணி விருது கொடுத்ததை சொல்லாமல் விட்டுட்டீங்களே! ஹா,ஹா,ஹா,ஹா...
லொக்கு லொக்கு லொக்கு.....
ரேடியோ நாடகத்துல ஊமை வேடம் போடுவதற்கு உங்களைத்தான் கூப்பிடுவதாக கேள்விப் பட்டேன், நிஜமா?
இந்த பதிவுக்கு சரியான தலைப்பு:
'நான் எழுதிய கதைகள்'
50 வருஷம் முன்னாடியே லொக்கு லொக்கு லொக்குனு வீடே இடிஞ்சு விழற மாதிரி இருமினவரா இன்னமும் இருக்காரு!!! யப்பா.....
Post a Comment