அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, February 14, 2011

வாரச் சந்தை - 14-02-2011

முன் டிஸ்கி : காதலர் தினம் என்ற பெயரில் காசைக் கரியாக்கப் போகும் காதலர்களுக்கு இனிய வாழ்த்துகள்! 


ஒரு தத்துவம் 

பணம் மட்டுமே எல்லாம் ஆகாது...................................அதற்கு மேல், மாஸ்டர் கார்ட், விசா கார்ட் இருக்கு!


ஒரு கவிதை

யார் சொன்னது
நான் கவிஞன் இல்லை
என்று
கவிதை எழுதுபவன்
கவிஞன் என்றால்
நான் கவிஞன்தான்,
உன் பெயரை
எழுதுவதால்!


ஒரு ஜோக்


அவன் சொன்னான், "ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ!"
அவள் கேட்டாள்,"எப்பங்க கல்யாணம்?"
அவன் சொன்னான், "நோ, சப்ஜெக்ட மாத்தாதே!"

ஒரு குவிஸ்


காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?


காதலி ப்ரீ-பெய்ட் மாதிரி, முன்னாடியே செலவு செஞ்சாதான் கனெக்ஷன் கிடைக்கும்.
மனைவி போஸ்ட்-பெய்ட் மாதிரி, முதல்லயே கனெக்ஷன் கிடைச்சுடும், ஆனா, ரெகுலரா செலவு செய்யணும்.


ஒரு பொன்மொழி 


உங்களை பிறர் எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்கள் பிறரை நடத்தினால், மகிழ்ச்சியாய் வாழலாம்.

14 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

எல்லாம் நல்லா இருக்கு..
இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்-10 இணைக்கவில்லையா ?

எஸ்.கே said...

பொன்மொழி சூப்பர்!

மங்குனி அமைச்சர் said...

காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?///

ஆமாங்க சார் ....... நான் ரென்று கார்டும் வச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கேன்

எஸ்.கே said...

கவிதையும் சூப்பர்!

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கலா இருக்கு.....

மாத்தி யோசி said...

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
அவன் சொன்னான், "ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ!"
அவள் கேட்டாள்,"எப்பங்க கல்யாணம்?"
அவன் சொன்னான், "நோ, சப்ஜெக்ட மாத்தாதே!"

ஹா ஹா கலக்கல்

middleclassmadhavi said...

:))

வைகை said...

காதலி ப்ரீ-பெய்ட் மாதிரி, முன்னாடியே செலவு செஞ்சாதான் கனெக்ஷன் கிடைக்கும்.
மனைவி போஸ்ட்-பெய்ட் மாதிரி, முதல்லயே கனெக்ஷன் கிடைச்சுடும், ஆனா, ரெகுலரா செலவு செய்யணும்.////

நாங்கல்லாம் டபுள் சிம் போன்தான்..!! :))

இம்சைஅரசன் பாபு.. said...

//காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?


காதலி ப்ரீ-பெய்ட் மாதிரி, முன்னாடியே செலவு செஞ்சாதான் கனெக்ஷன் கிடைக்கும்.
மனைவி போஸ்ட்-பெய்ட் மாதிரி, முதல்லயே கனெக்ஷன் கிடைச்சுடும், ஆனா, ரெகுலரா செலவு செய்யணும்.//

ஹி .........ஹி .......இது ஜூப்பர்

Speed Master said...

அருமை


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

வெங்கட் said...

// உங்களை பிறர் எப்படி நடத்த வேண்டுமென்று
விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்கள் பிறரை
நடத்தினால், மகிழ்ச்சியாய் வாழலாம்.//

சரிங்க.. அப்படியே ஆகட்டும்..!!
இதோ... நான் உங்களுக்கு ரெண்டு ஓட்டு
போட்டுட்டேன்..

RAVINDRAN said...

அப்படியே நீங்கள் பிறரை நடத்தினால், மகிழ்ச்சியாய் வாழலாம்

R.Gopi said...

தத்துவம், கவிதை, ஜோக், குவிஸ், பொன்மொழி எல்லாம் பட்டைய கிளப்புது தல...

இந்த வாரமும் சந்தை களை கட்டியது..

வாழ்த்துக்கள்....