அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, February 20, 2011

பாழாய்ப் போன கிரிக்கெட் மோகம்

தெரியாமதான் கேக்கறேன், கிரிக்கெட் இல்லன்னா உலகமே அஸ்தமிச்சுப் போயிடுமா? அதுதான் போகட்டும், இந்தியா விளையாடுதுன்னு சொல்றீங்களே, அது பிசிசிஐ அணி, அவ்ளோதான். விளையாட்டை விளையாட்டாப் பாக்காம, அதை தேசப் பற்றோட இணைச்சுப் பாக்கறது உங்களுக்கே ஓவரா தெரியல?

இந்த டிவிக்காரங்க வேற, என்னவோ மூணாம் உலகப் போரே வந்துட்டா மாதிரியும் இந்தியாவையே இவனுங்கதான் காப்பாத்தப போறா மாதிரியும் இவங்க ஆட்டம் தாங்க முடியல! ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், இஸ்ரோ ஊழல்கள் எல்லாம் காத்தோட போயிடுச்சு, போல! 

டென்த், பிளஸ் டூ படிக்கிற பசங்களா, ஒண்ணு சொல்றேன், கிரிக்கெட் மட்டுமில்ல எந்த விளையாட்டும் சரி, எப்ப வேணா பாக்கலாம், ஆனா படிப்பு இப்ப விட்டுட்டா அப்புறம் பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உங்க எதிர்காலத்தை நிர்ணயிக்கிற காலம் இது, ஞாபகம் வச்சுக்கிட்டு படிப்புல மட்டுமே கவனம் செலுத்துங்க.

பெற்றோருக்கு, உங்கள் பிள்ளைகள் நல்லா படிக்கனும்னா, கொஞ்ச நாளைக்கு டிவியை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அவங்க படிப்புக்கு உதவுங்க, பாழாப் போன கிரிக்கெட் எப்பவுமே இருக்கும்!

இளைஞர்களே, திரும்பவும் சொல்றேன், கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி என்பது பல நாட்டில் உள்ள கிரிக்கெட் அணிகள் விளையாடும் ஒரு போட்டி அவ்வளவுதான், இதற்கும் அந்தந்த நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. சரியா சொல்லனும்னா ஒரு நாட்டைச் சேர்ந்த வீரர் இன்னொரு நாட்டு அணியில் விளையாடுவது கூட சகஜம். இதற்கும் தேச பக்திக்கும் தொடர்பே இல்லை. போங்க, பொழைப்பைப் பாருங்க!
  

31 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

மாணவன் said...

ஓகே ரைட்டு.... :)

எஸ்.கே said...

//ஒரு நாட்டைச் சேர்ந்த வீரர் இன்னொரு நாட்டு அணியில் விளையாடுவது கூட சகஜம். இதற்கும் தேச பக்திக்கும் தொடர்பே இல்லை. போங்க, பொழைப்பைப் பாருங்க!.//

என்ன இப்படி சொல்லிட்டீங்க? கையில் முறுக்கு ஏறுதே!:-)))))

அனு said...

:-(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான சவுக்கடி......

சௌந்தர் said...

சரி இனி நான் கிரிகெட் பார்க்கலை....போதுமா....மட்டைபந்து பார்க்க போகிறேன் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேசபக்தி வியாபாரிகளுக்கு இதெல்லாம் எங்கே உரைக்க போகுது...?

அமைதி அப்பா said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு.

நானும் இது மாதிரி, எனது கோணத்தில் எழுதிவுள்ளேன். நண்பர்கள் நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள்...

http://amaithiappa.blogspot.com/2011/01/blog-post_26.html

எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

NaSo said...

நானும் அதையே தான் சொல்கிறேன். இந்த கிரிக்கெட்டுக்கும் தேச பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது BCCI அணிதானே தவிர அதற்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

MANO நாஞ்சில் மனோ said...

சபாஷ் என் எண்ணங்களை அப்பிடியே எதிரொலி'த்துள்ளீர்கள் சூப்பர்....

Madhavan Srinivasagopalan said...

// நாகராஜசோழன் MA said... 8

நானும் அதையே தான் சொல்கிறேன். இந்த கிரிக்கெட்டுக்கும் தேச பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது BCCI அணிதானே தவிர அதற்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. //

In 'bccI' -- 'I' means INDIA..
ha.. ha.. ha.

வெங்கட் said...

// டென்த், பிளஸ் டூ படிக்கிற பசங்களா,
கிரிக்கெட் எப்ப வேணா பாக்கலாம், ஆனா
படிப்பு இப்ப விட்டுட்டா அப்புறம் பிடிக்கறது
ரொம்ப கஷ்டம். //

எந்த டென்த், ப்ளஸ் டூ படிக்கிற பசங்க
உங்க பதிவை படிக்க போறாங்க..?
அவங்க பிஸியா கிரிக்கெட் மேட்சல
பாத்துட்டு இருப்பாங்க..!!

ஹி., ஹி., ஹி..!!

பெசொவி said...

//வெங்கட் said...

எந்த டென்த், ப்ளஸ் டூ படிக்கிற பசங்க
உங்க பதிவை படிக்க போறாங்க..?
அவங்க பிஸியா கிரிக்கெட் மேட்சல
பாத்துட்டு இருப்பாங்க..!!

ஹி., ஹி., ஹி..!//

அவங்களைச் சொல்லிக் குத்தமில்லை, பதிவு போட்டு இவ்ளோ நேரமாச்சு, நீங்களே லேட்டாத்தான் வந்திருக்கீங்க! ஒரு வேளை கிரிக்கெட் பத்தி பேசிகிட்டு லேட் ஆகிடுச்சோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said... 11

// டென்த், பிளஸ் டூ படிக்கிற பசங்களா,
கிரிக்கெட் எப்ப வேணா பாக்கலாம், ஆனா
படிப்பு இப்ப விட்டுட்டா அப்புறம் பிடிக்கறது
ரொம்ப கஷ்டம். //

எந்த டென்த், ப்ளஸ் டூ படிக்கிற பசங்க
உங்க பதிவை படிக்க போறாங்க..?
அவங்க பிஸியா கிரிக்கெட் மேட்சல
பாத்துட்டு இருப்பாங்க..!!

ஹி., ஹி., ஹி..!! /////////


என்ன வெங்கட் நீங்களே இப்படிக் கேட்டா எப்படி? 15-வது தடவையா டென்த் எழுதப் போகும் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு காலைல பெசொவி சொன்னாரே?

அனு said...

//15-வது தடவையா டென்த் எழுதப் போகும் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு காலைல பெசொவி சொன்னாரே?//

மூணாவது ஃபெயில் ஆன வெங்கட் directஆ டென்த் எழுத முடியுமா என்ன?? #டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அனு said...
//15-வது தடவையா டென்த் எழுதப் போகும் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு காலைல பெசொவி சொன்னாரே?//

மூணாவது ஃபெயில் ஆன வெங்கட் directஆ டென்த் எழுத முடியுமா என்ன?? #டவுட்டு//////

அதெல்லாம் ஒழுங்கா ஸ்கூலு போயி படிச்சி எழுதற பசங்களுக்கு, ப்ரைவேட்டா எழுத
15 வயசு முடிஞ்சிருந்தாவே போதும், இவருக்குத்தான் ஏழு கழுத வயசாகுதே அப்புறம் என்ன ?

பெசொவி said...

//@ அனு
மூணாவது ஃபெயில் ஆன வெங்கட் directஆ டென்த் எழுத முடியுமா என்ன?? #டவுட்டு
//

அதை நானும் அவர்கிட்ட கேட்டேன், விஜய் "கில்லி" படத்தில செமி பைனல் ஆடாமலேயே பைனல் ஆட வரலையா? அதை மாதிரி நானும் டைரக்டா டென்த் எழுதுவேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாரு

அனு said...

இவ்வளவு கஷ்டப்பட்டு, அவர் டென்த் எழுதி என்ன சாதிக்க போறார்னு யாரும் கேட்டுட முடியாது.. அதிக முறை டென்த் எக்ஸாம் எழுதிய சாதனையை அவர் தான் செய்யப் போறார்

வெங்கட் said...

@ அனு.,

// மூணாவது ஃபெயில் ஆன வெங்கட் directஆ
டென்த் எழுத முடியுமா என்ன?? #டவுட்டு //

// அதெல்லாம் ஒழுங்கா ஸ்கூலு போயி
படிச்சி எழுதற பசங்களுக்கு, ப்ரைவேட்டா
எழுத 15 வயசு முடிஞ்சிருந்தாவே போதும், //

ஓ.. இந்த டவுட்டானால தான்
2வது பெயில் ஆயிட்டு டென்த் எழுத
முயற்சி பண்ணாம இருந்தீங்களா..?

அதான் இப்ப டவுட் க்ளீயர் ஆயிடுச்சில்ல..
சீக்கிரம் போயி 10th-க்கு Application போடுங்க..

பெசொவி said...

@ அனு
//இவ்வளவு கஷ்டப்பட்டு, அவர் டென்த் எழுதி என்ன சாதிக்க போறார்னு யாரும் கேட்டுட முடியாது.. அதிக முறை டென்த் எக்ஸாம் எழுதிய சாதனையை அவர் தான் செய்யப் போறார்
//

நானும் இது பத்தி அவர்கிட்ட கேட்டேன், "வருஷா வருஷம் இப்படி படிச்சிகிட்டிருந்தா ரொம்ப செலவாகுமே"ன்னு, அவர் சொல்றார், "அதுக்குதான் என் பையன் டென்த் படிக்கும்போது அவன்கிட்டே டியூஷன் எடுத்துக்கப் போறேன்".

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// 15-வது தடவையா டென்த் எழுதப் போகும் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு காலைல பெசொவி சொன்னாரே? //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

17-வது முறையாக டென்த் எழுத போகும்
பன்னிகுட்டியின் மனசு என்ன பாடுபடும்..

அனு said...

@PKR

//இவருக்குத்தான் ஏழு கழுத வயசாகுதே//

அப்போ ஒரு கழுதைக்கு எட்டு வயசா??

அனு said...

@வெங்கட்
//2வது பெயில் ஆயிட்டு//

நான் ரெண்டு தடவையும் ஃபெயில் ஆனது மலேரியா இருக்கான்னு செக் பண்ணின ப்ளட் டெஸ்ட்ல..
இப்போ தான் புரியுது நீங்க ஏன் மூணாங்க்ளாஸ் இன்னும் பாஸ் பண்ணலன்னு...

வெங்கட் said...

@ அனு.,

// அப்போ ஒரு கழுதைக்கு எட்டு வயசா?? //

8 கழுத வயசானவங்க கேக்கிற
டவுட்டா இது..??

வெங்கட் said...

@ அனு.,

// நான் ரெண்டு தடவையும் ஃபெயில்
ஆனது மலேரியா இருக்கான்னு செக்
பண்ணின ப்ளட் டெஸ்ட்ல.. //

ஓ.. ஒரு தடவை உங்களுக்கு
மலேரியா டெஸ்ட்ல பாஸ்னு
ரிசல்ட் வந்ததே..

அதைதான் நீங்க 1st Std Pass பண்ணிட்டேன்னு
சொல்லிட்டு இருக்கீங்களா.?!!

வினோ said...

நாம என்ன சொன்னாலும் பார்க்கிறவன் பார்க்கத்தான் போறான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// 15-வது தடவையா டென்த் எழுதப் போகும் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவுன்னு காலைல பெசொவி சொன்னாரே? //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

17-வது முறையாக டென்த் எழுத போகும்
பன்னிகுட்டியின் மனசு என்ன பாடுபடும்../////

ஓ.. போனவாட்டி எக்சாம் ஹால்ல பாத்தத வெச்சி சொல்றீங்களா? டீ சப்ளை பண்ற மாதிரி உங்களுக்குத் தான் பிட்டு எடுத்துட்டு வந்தேன், மறந்துட்டீங்களா?

Unknown said...

//எந்த விளையாட்டும் சரி, எப்ப வேணா பாக்கலாம், ஆனா படிப்பு இப்ப விட்டுட்டா அப்புறம் பிடிக்கறது ரொம்ப கஷ்டம்.//

உண்மைதான்,. தெளிவா சொல்லியிருக்கீங்க..

Unknown said...

//எந்த டென்த், ப்ளஸ் டூ படிக்கிற பசங்க
உங்க பதிவை படிக்க போறாங்க..?
அவங்க பிஸியா கிரிக்கெட் மேட்சல
பாத்துட்டு இருப்பாங்க..!!
//

சக்தி கல்வி மையம் said...

Nice .,

வானம் said...

சரியான கருத்துதான்.ஆனா யாரு கேக்குறாங்க?
கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி சென்னை உயர்நீதிமன்றத்துல ‘நாங்க பிரைவேட் கம்பனி, அதனால எங்க ரூல்ஸ் வேற’ன்னு வாதாடிய தனியார் நிறுவனம்தான் BCCI. ஆனா விளம்பரப்படுத்துறப்ப மட்டும் INDIAN CRICKET TEAM.

RAVINDRAN said...

இதற்கும் அந்தந்த நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. சரியா சொல்லனும்னா ஒரு நாட்டைச் சேர்ந்த வீரர் இன்னொரு நாட்டு அணியில் விளையாடுவது கூட சகஜம். இதற்கும் தேச பக்திக்கும் தொடர்பே இல்லை. ஆனால் ஊழல்.......எங்கும் வியாபித்துள்ல்ளது போங்க, பொழைப்பைப் பாருங்க!