இந்த பதிவில் மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை.
"ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது.
நானும் என் மனைவியிடம் சண்டை போட்டவன்தான், போடுபவன்தான். ஆனால் சமீப காலங்களில் எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை. காரணம்?- நீங்கள் யூகித்து சரிதான், நான் பல சமயங்களில் விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டேன்.
உங்கள் மனைவியிடம் எப்போதாவது "அழகாக இருக்கிறாய்" என்று சொல்லியிருக்கிறீர்களா? சொல்லிப் பாருங்கள், "நீ வைத்த குழம்பும், ரசமும் என் வாழ்வில் சாப்பிட்டதில்லை" என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும், உங்கள் சொல்லுக்கு என்றும் அவர் அடிமைதான். "அது எப்படி மனசார பொய் சொல்வது" என்று (காமெடிக்காகவாவது)கேட்கிறீர்களா? அதே மேனேஜர் உதாரணம்தான். "யு ஆர் கிரேட் சார்","வாட் எ பன்டாஸ்டிக் திங் யு ஹாவ் டன் சார்", என்றெல்லாம் மேனேஜரைப் புகழும் உங்களுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா?
அதே போல்தான், தினசரி குடும்ப நடவடிக்கைகளில் உங்கள் மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்தாலே போதும், உங்கள் மீது மதிப்பு பல மடங்கு ஏறிவிடும். நீங்கள் ப்ரீயாக இருந்தால், குழந்தைக்குப் பல் துலக்கி, குளித்துவிட்டு, யூனிபார்ம் மாட்டிவிட்டு (இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் கூடப் போதும்) பிறகு பாருங்கள், உங்கள் இல்லற வாழ்க்கை இனிய வாழ்க்கைதான்.
கணவன் மனைவி சண்டைகளைப் பற்றிய ஜோக்குகளைக் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பார்த்தால், பெரும்பாலான கணவன் -மனைவிகள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். ஒரு ஆணுக்கு கல்யாணத்திற்குப் பிறகுதான் குடும்பப் பொறுப்புகள் பற்றி ஒரு தெளிவு வருகிறது என்பது நிதரிசனம்.
நான் ஏற்கெனவே கூறியதுதான், இருந்தாலும் திரும்பவும் சொல்கிறேன், "நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்" மனைவியிடம் அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் அவருக்கு அன்பைக் கொடுங்கள், அந்த அன்பு என்றும் வீணாகாது!
நான் ஏற்கெனவே கூறியதுதான், இருந்தாலும் திரும்பவும் சொல்கிறேன், "நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்" மனைவியிடம் அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் அவருக்கு அன்பைக் கொடுங்கள், அந்த அன்பு என்றும் வீணாகாது!
WIFE IS THE SECOND MOTHER FOR A MAN WHILE A MAN IS THE FIRST SON OF HIS WIFE!
10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
சிறப்பான பதிவு
சென்னையில் நான் கண்ட உலகம்
http://speedsays.blogspot.com/2011/02/blog-post_23.html
"நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்
மிக நல்ல வரிகள் யாரும் மறுக்க மறக்க முடியாதவை.
நன்றி
சூப்பர்!
நெல்லு கொட்டினா அள்ளிடலாம்! சொல்லு கொட்டினா?
இன்னிக்கு காலைல.... கொழந்தைங்கள குளிச்சு விட்டது நான்தான்..
அப்பப்ப எங்களுக்குள்ள திட்டு கொடுத்தல், வாங்குதல் இருந்தாலும்.. இனிய இல்லறத்திற்கு புரிதல் இன்றியமையாதது...
நல்ல பகிர்வு..
Super mesg yes.ke..
தங்கமணிகளின் ஓட்டுகள் உங்களுக்கே!! நன்றி
நீங்கள் பிறரிடம் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதை அவருக்கே கொடுங்கள், உங்கள் வாழ்க்கை இனிமையாகும்" ///
முயற்சி செய்கிறேன்....
//நானும் என் மனைவியிடம் சண்டை போட்டவன்தான், போடுபவன்தான். ஆனால் சமீப காலங்களில் எங்களுக்குள் சண்டையே வந்ததில்லை. காரணம்?- நீங்கள் யூகித்து சரிதான், நான் பல சமயங்களில் விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டேன்.//
விட்டு கொடுத்தால் பிரச்சினையே இல்லை பாஸ்....
// நீங்கள் ப்ரீயாக இருந்தால்,
குழந்தைக்குப் பல் துலக்கி,
குளித்துவிட்டு, யூனிபார்ம் மாட்டிவிட்டு //
ம்ம்.. இதெல்லாம் ஓ.கே.. ஆனா
இப்படி பண்ணினா நிஜமாவே
மனைவிகிட்ட நல்லபேர் வாங்க முடியுமா..?
கடைசி வரிகள் அருமை.. பார்ப்போம்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. ஆகும்போது யோசிக்கிறேன்.. நன்றி..
Post a Comment